துறை

ஒரு பாடத்தின் உட்பிரிவு. கரையோரத்தில் நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு. நியாயவழி.

branch, section, category department (a subdivision of an organization), sector place, location, situation, space, position

Tamil Wiktionary

துறை
  1. ஒரு பாடத்தின் உட்பிரிவு.
  2. கரையோரத்தில் நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு.
  3. இடம்.
  4. நியாயவழி.
  5. உபாயம்.
  6. கடற்றுறை.
  7. கடல்.
  8. ஆறு
  9. வண்ணானொலிக்கும் இடம்.
  10. சபைகூடுமிடம்.
  11. சாஸ்திரம்.
  12. அகமும் புறமும் பற்றிய தமிழ்ப் பொருட்கூறு.
  13. ஒழுங்கு வேதந் துறைசெய்தான் (குமர. பிர. சிதம்ப. செய். 13)
  14. பாவினத்தொன்று. (காரிகை
  15. செய். 6
  16. உரை.)
  17. இசைப்பாட்டு வகை
  18. வரலாறு.
  19. நீர்த்துறை

துறைமுகம் துறையினர் பரிசல் துறை வண்ணான் துறை கலைத்துறை நாடகத்துறை திரைப்படத்துறை திரைத்துறை ஆய்வுத்துறை வங்கித்துறை கணினித்துறை காவல்துறை சட்டத்துறை வேளாண் துறை உள்துறை கல்வித்துறை தனியார் துறை பொதுத்துறை அரசுத்துறை

Winslow (1862)

துறை (tuṟai) — noun
  1. Any passage to, into, or across water–as the entrance to a tank, pond or river, a ford or ferry; a watering place for cattle; a place for bathing or for washing clothes, நீர்த்துறை
  2. A sea-port, harbor, road-stead, இறங்குதுறை
  3. Way, path, thoroughfare, passage for men or beasts, வழி
  4. Frequented place, a place of meeting, a rendezvous, சபைகூடுமிடம்
  5. Place, location, situation, space, position, as ஆயத்துறை, வண்ணாரத்துறை, இடம்
  6. A resource, resort, shelter, place of refuge, ஒதுங்குமிடம். (c.)
  7. River, ஆறு
  8. One of the three-fold subdivisions of any of the four classes of verse, கலித்துறை. (See பாவினம்.)
  9. A branch, scope or extent of science, நூற்றுறை
  10. Any theme in love poetry, அகப்பொருட்டுறை. (p.)
  • துறைகாட்ட — To show a method.
  • துறைகாண — To find a port, haven, harbor. 2. To find a way, means or method to do or complete a thing. துறைகண்டவன்விடுவானா. Will one who has discovered the way (to his master's treasure), forsake it?
  • துறைகாரர் — Agents, accountants. and other servants of a temple.
  • துறைக்காவல் — Watch or guard; a guard-ship.
  • துறைத்தோணி — A ferry boat.
  • துறைநியாயம் — Laws of love poetry.

Fabricius (1972)

துறை — noun
  1. a harbour, a sea-port
  2. a ford in a river, a ferry, the place to go down into the tank, a ghaut
  3. way, path, வழி
  4. a frequented place, a rendezvous
  5. a branch of science
  6. any theme in love poetry
  7. a resource, a resort, a place of refuge, ஒதுங்குமிடம்
  • துறையிலிருக்கிற கப்பல் — a ship in the roadstead.
  • துறைகாட்ட — to show a method.
  • துறைகாண — to find a haven or har- bour; 2. to find a way or means to do a thing.
  • துறைகாரர் — agents, accountants and other servants of a temple.
  • துறைத்தோணி — a ferry boat.
  • துறை நியாயம் — laws of love poetry.

Tamil Moli Akarathi (1928)

துறை (tuṟai)
  1. ஆறு, இடம், இரங்குதுறை, ஏல்லை, கலித்துறை, காரியம், தங்கு மிடம், நீர்த்துறை, நூல், பாவினத் தொன்று, வழி
துறை (tuṟai)
  1. ஆறு, இடம், நீர்த்துறை, பாவி னத்தொன்று, வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துறை (tuṟai) — noun
  1. prob. id
  2. Place, location, situation, space, position; இடம். அத்துறை யமலனும் (ஞானா. 48, 2)
  3. Way, path, as of virtue or justice; நியாயவழி. துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான் (கம்பரா. வாலி. 74). (தொல். பொ. 56, உரை.)
  4. Branch; section, category; பகுதி. வீரராயவர் புரிவதாண்மைத் துறையென லாயிற் றன்றே (கம்பரா. வாலி. 82)
  5. Method, means; உபாயம். துறையறிந்து காரியம் நடத்துகிறான்
  6. Seaport, harbour, roadstead; கடற்றுறை. துறை வளர் நாட்டொடு (சீவக. 1618)
  7. Sea; கடல். துறைமுற்றிய துளங்கிருக்கை (மதுரைக். 85)
  8. [K. toṟe.] River; ஆறு. (திவா.)
  9. Place where washermen wash clothes; வண்ணானொலிக்கும் இடம். துறைச்செல்லா ளூரவராடை கொண் டொலிக்குநின் புலைத்தி (கலித். 72, 13)
  10. Ghat, bathing ghat; நீர்த்துறை. தண்புனற் றுருத்தியுந் தாழ்பூந் துறைகளும் (மணி. 1, 65)
  11. Frequented place, place of meeting, rendezvous; சபைகூடுமிடம். (W.)
  12. Branch of knowledge, science; சாஸ்திரம். மற்றைத் துறைகளின் முடிவும் (கம்பரா. வாலி. 132)
  13. Subject or theme, in akam and puṟam; அகமும் புறமும் பற்றிய தமிழ்ப் பொருட்கூறு. தீந்தமிழின் றுறைவாய் நுழைந்தனையோ (திருக்கோ. 20)
  14. Proper arrangement; codification; ஒழுங்கு வேதந் துறைசெய்தான் (குமர. பிர. சிதம்ப. செய். 13)
  15. A minor variety of any of the four classes of verse, one of three pāviṉam, q.v.; பாவினத்தொன்று. (காரிகை, செய். 6, உரை.)
  16. A kind of singing; இசைப்பாட்டு வகை. (பிங்.)
  17. History; வரலாறு. துறை யெனக் கியாதெனச் சொல்லுசொல்லென்றான் (கம்பரா. மீட்சி. 255)

IndoWordNet

துறை — noun
  1. ஒரு பெரிய நிறுவனத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவு.
துறை — noun
  1. அரசாங்கத்தின் நடைமுறையிலுள்ள பிரிவு

ஆட்சிக்குழு கல்வி இலாகா கல்வித்துறை கல்விப்பிரிவு பிரிவு இரயில்வே புகைவண்டிநிலையம் விவசாய துறை குடியிருப்பு நகரம் இலாகா கூட்டம் சமுதாயம் சமூகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துறை
  1. இடம்
  2. நீர்த்துறை
  3. நியாயவழி
  4. பகுதி
  5. உபாயம்
  6. சபை கூடுமிடம்
  7. ஆறு
  8. வண்ணார் துறை
  9. கடல்
  10. கடற்றுறை
  11. நூல்
  12. வரலாறு
  13. அகமும் புறமும்பற்றிய பொருட்கூறு
  14. பாவி னங்களில் ஒன்று
  15. அலுவலகத் துறை, இலாகா