தேசம்

தேச் + அம் தேசம் பண்டைய பாரதத்தின் ஐம்பத்தாறு தேசங்கள் ( 97, 98.) காண்க...தேசு

country, region, province, nation

Winslow (1862)

தேசம் (tēcam) — noun
  1. Country, territory, land, region, district, province, நாடு. W. p. 424. DESA. (c.)
  2. Place, இடம்
  3. Regoins of the body as the province, or residence, of their respective gods, உடம்பிற்கடவுளிருப்பிடம். –Note. In Hindu Geography fifty-six countries are enumerated, viz.:
  4. அங்கம்
  5. அருணம்
  6. அவந்தி
  7. ஆந்திரம்
  8. இலாடம்
  9. ஒட்டியம்
  10. கருசம்
  11. கலிங்கம்
  12. கன்னடம்
  13. கன்னாடம்
  14. காசம்
  15. கரசுமீரம்
  16. காந்தாரம்
  17. கரம்போசம்
  18. கிராடம்
  19. குருகு
  20. குடகம்
  21. குந்தளம்
  22. குரு
  23. குலிந்தம்
  24. கூச்சரம்
  25. கேகயம்
  26. கேரளம்
  27. கொங்கணம்
  28. கொல்லம்
  29. கோசலம்
  30. சகம்
  31. சவ்வீரம்
  32. சாலவம்
  33. சிங்களம்
  34. சிந்து
  35. சீனம்
  36. சூரசேனம்
  37. சோழம்
  38. சோளகம்
  39. திராவிடம்
  40. துளுவம்
  41. தெங்கணம்
  42. நிடதம்
  43. நேபாளம்
  44. பப்பரம்
  45. பல்லவம்
  46. பாஞ்சாலம்
  47. பாண்டியம்
  48. புலிந்தம்
  49. போடம்
  50. மகதம்
  51. மச்சம்
  52. மராடம்
  53. மலையாளம்
  54. மாளவம்
  55. யவனம்
  56. யுகந்தம்
  57. வங்கம்
  58. வங்காளம்
  59. விதர்ப்பம். (சது.)
  • தேசகாலம் — Time and place, இடமும்பொழுதும். 2. The passinig of time, பொழுதுகழிவு. (c.) தேசகாலமாகிறது. Time is going.
  • தேசகாலபாத்திரம் — Propriety or three circumstance to be observed, viz.: where, when, and who, இடமுஞ்சமயமுந்தகுதியும்.
  • தேசசுவாத்தியம் — General health and prosperity; climate.
  • தேசத்தைக்கட்டியாள — To take and govern a country. 2. To govern and control a country.
  • தேசபாடை–தேசபாஷை — The language of a country. 2. Language and country.
  • தேசபாரம் — The burden and responsibility of governing a country, as resting of the king, இராச்சியப்பொறுப்பு.

Fabricius (1972)

தேசம் — noun
  1. place, location, இடம்
  2. a country, land, region, நாடு
  • தேசகன் — governor, a ruler, அரசன்.
  • தேசகாலம் — time and place; 2. the passing of time.
  • தேசகாலத்துக்குதவ — to serve for the present time.
  • தேசகாலந்தப்பிப்போயிற்று — the opportunity is lost.
  • தேசகாலமாகிப்போயிற்று — the time is far advanced.
  • எத்தேசகாலமும் — always.

Tamil Moli Akarathi (1928)

தேசம் (tēcam)
  1. இடம், உறைப்பு, கட்டளை, கூர்மை, நாடு, பங்கு, பிரபை
தேசம் (tēcam)
  1. நாடு

IndoWordNet

தேசம் — noun
  1. பொதுவாக நிலப்பகுதி தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதி.
தேசம் — noun
  1. குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும், வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.

பிரதேசம் பிரதேஷம் தேஷம் நாடு பகுதி இடம் ஸ்தாபனம் பள்ளத்தாக்கு மிகப்பெரியகண்டம் மிகப்பெரியதீவு நாடு பாலைவனம் மேட்டுநிலம் அரபி அரேபியா புத்லேகண்டா ஆட்சி சமஸ்தானம் பிரபுத்துவம் சொந்தநாடு தாய்நாடு தாய்மண் சொந்தமண் அசிக் ஆசியநாடு ஆசியதேசம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தேசம்
  1. நாடு
  2. இடம்
  3. ஒளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேசம்¹ (tēcam) — noun
  1. < dēša
  2. Province, territory, land, district; நாடு. தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி (திருவாச. 9, 4)
  3. Place; இடம். காலதேசமறிந்து நடத்தவேண்டும்
  4. Countries of India, 56 in number, viz., Aṅkam, Mattiram, Māḷavam, Cālavam, Kēkayam, Āriyam, Pāracīkam, Āntiram, Marāṭam, Kaṉṉaṭam, Iṭaṅkaṇam, Avanti, Kuru, Cēti, Kukuram, Kācumīram, Maccam, Kirātam, Karūcam, Cūracēṉam, Kaliṅkam, Vaṅkāḷam, Nēpāḷam, Ciṅkaḷam, Tuḷuvam, Kēraḷam, Koṅkaṇam, Pōṭam, Tirikarttam, Puḷintam, Kuḷintam, Virāṭam, Makatam, Kūrccaram, Papparam, Vitarppam, Kāmpōcam, Kōcalam, Cintu, Kauṭam, Vaṅkam, Oṭṭam, Cātakam, Cavvīram, Pāñcālam, Niṭatam, Kaṭāram, Ukantaram, Cōṉakam, Cīṉam, Kāntāram, Malaiyāḷam, Ilāṭam, Tirāviṭam, Cōḻam, Pāṇṭiyam; அங்கம், மத்திரம், மாளவம், சாலவம், கேகயம், ஆரியம், பாரசீ கம், ஆந்திரம், மராடம், கன்னடம், இடங்கணம், அவந்தி, குரு, சேதி, குகுரம், காசுமீரம், மச்சம், கிராதம், கரூசம், சூரசேனம், கலிங்கம், வங்காளம், நேபாளம், சிங்களம், துளுவம், கேரளம், கொங்கணம், போடம், திரிகர்த்தம், புளிந்தம், குளிந்தம், விராடம், மகதம், கூர்ச்சரம், பப்பரம், விதர்ப்பம், காம்போசம், கோசலம், சிந்து, கௌடம், வங்கம், ஒட்டம், சாதகம், சவ்வீரம், பாஞ் சாலம், நிடதம், கடாரம், உகந்தரம், சோனகம், சீனம், காந்தாரம், மலையாளம், இலாடம், திராவிடம், சோழம், பாண்டியம் என்ற ஐம்பத்தாறு தேசங்கள் (திருவேங். சத. 97, 98.)
தேசம்² (tēcam) — noun
  1. See தேசு. தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய் (திவ். திருப்பா. 7).