நாயகன்

தலைவன் கணவன் () அரசன் ()

hero of a poem or story husband lord, chief, master

Tamil Wiktionary

நாயகன்
  1. தலைவன்
  2. கணவன் ()
  3. அரசன் ()
  4. கடவுள்
  5. நடத்துவோன் ()
  6. இருபது யானைகட்கும் இருபது குதிரைகட்கும் தலைவன் ( 74.)
  7. பத்துக்கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன் ( 27.)
  8. பாட்டுடைத்தலைவன் அல்லது கதாநாயகன்

[object Object]

Fabricius (1972)

நாயகன் — honor.
  1. (honor. நாயகர், fem. நாயகி), a lord, a master, a leader, அதிபதி
  2. the Supreme Being, ஆண்டவர்
  3. a husband, கணவன்
  4. Siva
  5. a viceroy, a poligar
  • சர்வலோக நாயகர் — the Lord of the Universe.

Tamil Moli Akarathi (1928)

நாயகன் (nāyakaṉ)
  1. அரசன்,ஏசமான்,ஏப்பொ ருட்கு மிறைவன், சிவபெருமான், நடத்துவோன், பாளயக்காரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாயகன் (nāyakaṉ) — noun
  1. < nāyaka
  2. Lord, master, chief; தலைவன். பூதநாயகன் (கம்பரா. அங்கத. 21)
  3. Husband; கணவன். (பிங்.) மலர் மங்கை நாயகன் (திவ். பெரியதி. 10, 7, 6)
  4. King; அரசன். (திவா.) நாயகன்வன நண்ணலுற்றானென் றும் (கம்பரா. நகர்நீங்கு. 222)
  5. The Supreme Being; கடவுள்
  6. Leader, conductor; நடத்து வோன். (சங். அக.)
  7. Head of 20 elephants and 20 horses; இருபது யானைகட்கும் இருபது குதிரைகட்கும் தலைவன். (சுக்கிரநீதி, 74.)
  8. A person appointed to the headship of ten villages; பத்துக் கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன். (சுக்கிரநீதி, 27.)
  9. Hero of a poem or story; பாட்டுடைத்தலைவன் அல்லது கதாநாயகன்

IndoWordNet

நாயகன் — noun
  1. கதை, காவியம் போன்றவற்றில் முக்கிய ஆண் பாத்திரம்.
நாயகன் — noun
  1. திரைப்படம் நாடகம் முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் ஆண்

கதாநாயகன் ஆண் ஆடவர் ஆடவன் ஆண்மகன் ஆண்பிள்ளை துணைநாயகன் நடிகன் நடிகர் கதாபாத்திரம் கலைஞர் கலைஞன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நாயகன்
  1. தலைவன்
  2. கணவன்
  3. அரசன்
  4. கடவுள்
  5. நடத்துவோன்
  6. கதைத் தலைவன்