ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம். நேரில் காண்பதுபோல் காணக்கூடிய இயல்பாய் அசையும் படம், திரைப்படம், நிகழ்படம். ஒளிப்படம்
drawing, picture, painting movie, film, show the hood of a cobra
Tamil Wiktionary
படம்
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
நேரில் காண்பதுபோல் காணக்கூடிய இயல்பாய் அசையும் படம்
திரைப்படம்
நிகழ்படம்.
ஒளிப்படம்
நிலப்படம் அல்லது தரைப்படம்
நிலவரைபடம்; ஒரு நகரத்தின் சாலை வழிகளைக்காட்டும் நகரகப்படம் (நகரத்தின் படம்).
ஒரு பின்னொட்டு (எ.கா. கலப்படம்)
எழுத்துப்படம்
காற்றாடி
நாகப்பாம்பின் விரிந்த தலைப்பகுதி (எ.கா. பாம்பு படம் எடுக்கும்!)
யானையின் முகத்தில் அணியும் அணிகலன்
முகப்படாம்
கால் பாதத்தின் முற்பகுதி
சீலை
திரைச்சீலை
கொடி (விருதுக்கொடி)
செயற்கைநிலாப்படம்
படாம் (சீலை
திரைச்சீலை
பெருங்கொடி)
உருக்களைப் படமாக்குதல் வெப்பப் படமுறையாக்கம்.
Winslow (1862)
படம் (paṭam) — noun
Cloth, சீலை
Painted or printed cloth; hence also, a picture, ஏழுதும்படம்
A curtain or screen of cloth, especially around a tent, திரைச்சீலை
A distinguishing banner, விருதுக்கொடி. W. p. 495. PAT'A
A covering or ornament for an elephant's face, யானைமுகபடாம்
The hood of the cobra, பாம்பின்படம். W. p. 564. PHAT'A. (சது.)
The front part of the foot, காலின்படம். W. p. 499. PADA
காற்படம் — The instep down to the toes.
படங்குத்திநிற்றல் — Standing on tip-toe.
படப்பொறி — The spots on the neck of the cobra-de-capella.
படமெடுத்தல்–படம்விரித்தல் — Spreading its neck, spoken of the cobra.
படமெடுத்தாடுதல்–படம்விரித்தாடுதல் — Spreading its neck, and dancing.
படமெழுதுதல் — Drawing a picture, portraying.
Fabricius (1972)
படம் — noun
a cloth, சீலை
a picture, a piece of painting, சித்திரம்
a curtain, a veil, திரைச்சீலை
the hood of a cobro
the frontal part of the foot
a distiuguishing banner, விருதுக்கொடி
படங்குத்தி நிற்க — to stand on tiptoe.
படப்பொறி — the spots on the neck of a cobra.
படமெழுத — to draw a picture.
படம் விரித்தாட–எடுத்தாட — to spread the neck and dance as the cobra.