பாதை

ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நடந்தோ வண்டி, ஊர்தி வழியாகவோ செல்லும் வழி. கால் சுவடு (பாதம்) பதிவதால் ஏற்படும் ஒற்றையடிப் பாதை போல, பாதை என்பது முதலில் நடைபாதையாகவும் பின்னர் வண்டிகள், ஊர்திகள் செல்லும் பாதையாகவும் உருவெடுத்த வழி. , (பெ)

way, path, road track (left by a foot)

Tamil Wiktionary

பாதை — பெயர்ச்சொல் (Noun)
  1. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நடந்தோ வண்டி, ஊர்தி வழியாகவோ செல்லும் வழி.
  2. கால் சுவடு (பாதம்) பதிவதால் ஏற்படும் ஒற்றையடிப் பாதை போல, பாதை என்பது முதலில் நடைபாதையாகவும் பின்னர் வண்டிகள், ஊர்திகள் செல்லும் பாதையாகவும் உருவெடுத்த வழி.

[object Object]

நடைபாதை இருப்புப்பாதை ஓடுபாதை உணவுப்பாதை ஒற்றையடிப்பாதை ஒருவழிப்பாதை இருவழிப்பாதை

Winslow (1862)

பாதை (pātai) — noun
  1. A beaten way, a foot-path, அடிப்பாடு
  2. Way, road, வழி
  3. Method, manner, way, mode, முறை. W. p. 499. PAT'HIN
  4. A flat bottomed boat, மிதவை
  5. A navigating vessel in general, மரக்கலம்
  6. Affliction, as சலபாதை. See வாதை. ஒருபாதையிலேகாரியத்தைத்தீர்க்கவேண்டும். (We) must settle the business in some way or other

Fabricius (1972)

பாதை — noun
  1. a beaten way, a road, வழி
  2. manner, method, முறை
  3. a flat-bottomed boat
  4. affliction, வாதை as in சலபாதை

Tamil Moli Akarathi (1928)

பாதை (pātai)
  1. அடிப்பாடு, மரக்கலம், மிதவை முறை, வழிவகை
பாதை (pātai)
  1. மரக்கலம், வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாதை¹ (pātai) — noun
  1. prob. patha
  2. Way, road; வழி. (பிங்.)
  3. Beaten track, foot-path; ஒற்றையடி வழி. (W.)
  4. Method, manner, way, mode; முறை. அவன் ஒழுங்கான பாதையில் போக வில்லை. (W.)
  5. cf. pōta. Flat-bottomed boat; மிதவை. (சூடா.) பாதைகள் சொரிவன பருமணி கனகம் (கம்பரா. நாட்டு. 31)
பாதை² (pātai) — noun
  1. Affliction, trouble; துன்பம்.

IndoWordNet

பாதை — noun
  1. வந்து போக இருக்கும் நீளமான பாதை
பாதை — noun
  1. செல்லும் அல்லது செயல்படும் முறை
பாதை — noun
  1. மாவரைக்கும் எந்திரத்தின் பகுதியுடன் இணைக்கப்படும் மண்ணிலான ஒன்று
பாதை — noun
  1. ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.

வழி தார்ரோடு தார்சாலை தேசியநெடுஞ்சாலை ஒழுங்கற்றசாலை விரைவானநெடுஞ்சாலை சாலை சாதனம் கருவி சாக்கடை சுற்றுப்பாதை தடம் வெற்றிலை விற்பவன் சிறுநீரகப்பாதை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாதை
  1. வழி
  2. ஒற்றையடி வழி
  3. முறை
  4. மிதவை
  5. துன்பம்