வழி

மார்க்கம் ஒழுக்கம் அகிகபட்ச அளவைத் தாண்டு/மீறு

way, road, path origin, source means

Winslow (1862)

வழி (vaḻi) — noun
  1. A way, a road, a path, நடவை
  2. A way in a moral sense, a course of conduct, நடை
  3. Manner, method, mode, வயணம்
  4. A place, இடம்
  5. Original cause, காரணம்
  6. A lump of ball–as of butter, &c., திரட்சி
  7. Antiquity, oldness, பழமை
  8. Succession, a following–as வழி நாள், the following day
  9. A form of the seventh case or local ablative, ஏழனுருபு. –as நிழல்வழி, in the shade
  10. A son, as வழித்தோன்றல்
  11. Usage, முறைமை. இந்தவழியெங்கேபோகிறது. Where does this road go? இதைமுடிக்கவழியறியேன். I do not know how to accomplish this. அவ்வழி. In that manner. அவன்வழிக்குவரமாட்டான். He will not come to a right course [of conduct] புத்திரர் வழிக்கெல்லாந் தொடர்ந்தேற்றியாய் வந்தபாவம். Original sin propagated by children's children. அவன்வழிப்போகாதே. Do not meddle with him. ஏன்வழியாக. By my means. அந்தவீதிவழியாக. By way of that street
  • வழிகாட்ட — To show the way, to guide. 2. To direct morally, or religiously.
  • வழிகாட்டி — A guide, a leader; one who shows the way. 2. one who sets a good example.
  • வழிகாட்டிமரம் — [sometimes கைகாட்டிமரம்.] A guide-post.
  • வழிகாண — To find the way. 2. To offer or present itself–as an opportunity, &c.
  • வழிச்சாரி — A beaten road, நடையுள்ளவழி. 2. A bye-path, for custom-house officers, &c., to apprehend smugglers.
  • வழிச்செலவு — Money for expenses on a journey. 2. (p.) A journey.
வழி (vaḻi) — infinitive
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To flow down, trickle down; to drip through, ஒழுக
  2. To overflow, நிரம்பிப்பாய. (c.)
  • வழிந்தோட — To overflow, to diffuse itself.
வழி (vaḻi)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To rub in with the hand, as an ointment
  2. To scrape wipe, rub off
  3. To scour or cleanse. (c.) அரைத்துவழிக்கிறது. Scraping off from the grinding stone, spices, &c., when bruised. சவரகன்கத்தியால்வழிக்கிறது. Shaving one's self, or another

Fabricius (1972)

வழி — noun
  1. a way, a road, நடப்பு
  2. path, பாதை
  3. a course of conduct, நடை
  4. manner, method, mode, வயணம்
  5. original cause, காரணம்
  6. usage, முறைமை
  7. a form of the 7th case, ஏழனுருபு
  8. a son, புத்திரன்
  9. a lump or ball, as of butter etc. திரட்சி
  10. antiquity, oldness, பழமை
  • அவன் வழி போகாதே — do not meddle with him.
  • வழிகட்டிப் பறிக்கிறவன் — a highway man.
  • வழிகாட்ட — to show the way, to guide morally.
  • வழிகாட்டு–வழித்துணை — a guide, a leader.
  • வழிகாட்டிமரம் — a guide post.
  • வழிச்சாரி–நடையான வழி — a trodden path, a beaten way or road.
வழி — v. i.
  1. v. i. flow down, trickle down, drip through, ஒழுகு.
  • வழிந்தோட — to overflow, to diffuse itself.
வழி — v. t.
  1. v. t. rub in with the hand as an ointment, தேய்
  2. scrape, rub off
  3. scour, cleanse, துடை

Tamil Moli Akarathi (1928)

வழி (vaḻi)
  1. அக்கிநி, தூர்த்தன், வாந்தி
வழி (vaḻi)
  1. இடம், ஏழனுருபு, (உ-ம்) நிழல் வழியசைந்தனன், காரணம், திரட் சி, நடவை, பழமை, பின், மகன், மார் பு, முறைமை, வழியென்னேவல்
வழி (vaḻi)
  1. இடம், ஏழனுருபு
  2. (உ-ம்
  3. நின்ற தோர் நகைவேங்கை நிழல்வழியசை ந்தன்ன,) காரணம், திரட்சி, நடவை, பழமை, பின், மகன், முறைமை, வழியென்னேவல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வழி
  1. நெறி
  2. காரணம்
  3. கழுவாய்
  4. வழிபாடு
  5. ஓழுக்கம்
  6. முறைமை
  7. பின்சந்ததி
  8. மரபு
  9. மகன்
  10. சுற்றம்
  11. உடன்பிறந்தான்
  12. பரம்பரை
  13. நூல் வந்த நெறி
  14. சுவடு
  15. பின்னானது
  16. வழக்கு
  17. பழைமை
  18. மலைப்பக்கம்
  19. இடம்
  20. திரட்சி
  21. வரம்
  22. பின்பு
  23. வினையெச்சவிகுதி
  24. ஏழனுருபு

Tamil Wiktionary

வழி — பெயர்ச்சொல் (Noun)
  1. பாதை
  2. வீதி
  3. மார்க்கம்
  4. ஆறு
  5. ஒழுக்கம்
  6. நெறி
  7. அகிகபட்ச அளவைத் தாண்டு/மீறு
  8. வெட்கப்படு

[object Object]

வழிச்செலவு வழிவகை வழித்துணை வழிமுறை வழித்தடம் வழிப்பறி வழிநூல் வழிபடு வழிவிடு வழிகாட்டு வழிமறி வழிமொழி வழியனுப்பு வழிப்படு வழிநடத்து தாய்வழி தந்தைவழி குறுக்குவழி நேர்வழி புறவழி வாய்வழி அல்வழி நல்வழி வலி வளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வழி¹ (vaḻi) — noun
  1. Way, road, path; மார்க்கம். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள், 38)
  2. Origin, source; காரணம். (யாழ். அக.)
  3. Means; உபாயம். அதற்கு ஒரு வழி சொல்லு
  4. Remedy; பரிகாரம். அந்தத் தப்புக்கு என்ன வழி செய்தான்
  5. Homage; வழிபாடு. வையங்காவலர் வழிமொழிந்தொழுக (புறநா. 8)
  6. Course of conduct; ஒழுக்கம். (பிங்.)
  7. Manner, method, mode; முறைமை. (பிங்.)
  8. Posterity, descendants; பின்சந்ததி. வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில் (குறள், 44)
  9. Race, family, lineage; மரபு. (பிங்.)
  10. Son; மகன். (சூடா.)
  11. Relation, dependant; சுற்றம். செற்றோரை வழிதபுத்தனன் (புறநா. 239)
  12. Brother; சகோ தரன். (அரு. நி.)
  13. Series; line; succession; பரம்பரை. வழித்தொண்டர் (பெரியபு. திருநாவுக். 333)
  14. History or origin of a literary work, one of 11 ciṟappu-p-pāyiram, q.v.; சிறப்புப் பாயிரம் பதினொன்றனுள் ஒன்றாகிய நூல் வந்த நெறி. (நன். 46.)
  15. Impression, foot-print; trace; சுவடு. யானைக்கால் வழியன்ன (புறநா. 368)
  16. That which is subsequent; பின்னானது. வழிநாட் கிரங்கு மென்னெஞ்சம் (புறநா. 176)
  17. Usage; வழக்கு. (W.)
  18. Antiquity; பழைமை. (W.)
  19. Place; இடம். தலைநாளன்ன புகலொடு வழிசிறந்து (மலைபடு. 565)
  20. Mountainous region; மலைப் பக்கம். (சீவக. அரும்.)
  21. Roundness; திரட்சி. (பிங்.)
  22. Boon; gift; வரம். எவ்வழி நினக்கு வேண்டும் (உபதேசகா. சிவத்துரோ. 115). — adv. Afterwards; பின்பு. வழிபயக்கு மூதியமும் (குறள், 461). — part
  23. An adverbial particle meaning 'in case, under certain circumstances'; வினை யெச்சவிகுதி. (தொல். சொல். 231.)
  24. Sign of the locative; ஏழனுருபு. (நன். 302.)