மத்தகம்

Madhgam

Fabricius (1972)

மத்தகம் — noun
  1. மஸ்தகம், s. the head-top, தலை
  2. the fore-head, நெற்றி
  3. the fore- head of an elephant
  4. bad ground, பொல்லாநிலம்

Tamil Moli Akarathi (1928)

மத்தகம் (mattakam)
  1. சென்னி, நெற்றி, பொல்லா நிலம், யானைமத்தகம்
மத்தகம் (mattakam)
  1. தலை, நுதல், பொல்லாநிலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மத்தகம் (mattakam) — noun
  1. < mastaka
  2. Head; தலை. மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி (திவ். பெரியாழ். 4, 5, 2)
  3. Top, crown; உச்சி. வாள் . . . மத்தகத் திறுப்ப (சீவக. 2251)
  4. Forehead; நெற்றி. மத்தகஞ்சேர் தனிநோக்கினன் (திருக்கோ. 106)
  5. A kind of head-ornament, worn by women; தலைக்கோலம். மத்தக நித்திலம் (பரிபா. 16, 5)
  6. Round protuberance on the temples of an elephant; யானையின் கும்பத்தலம். (சூடா.) மத்தயானை மத்தகத்து (திவ். திருச்சந். 58)
  7. Elephant's forehead; யானைநெற்றி. (பிங்.)
  8. Front; முகப்பு. மத்தகமணியொடு (சிலப். 6, 91)
  9. Face of precipitous rock; மலைநெற்றி. (சூடா.)
  10. Arid land; தரிசு நிலம். (W.)

IndoWordNet

மத்தகம் — noun
  1. இரும்பிலான இரு துண்டுகளை இணைப்பதற்காக உருவாக்கபடும் ஒரு வகை வாள்

வாள் அசி உவணி எஃகம் கட்கம் கண்டகம் தடறு தளிமம் தாராங்கம் தூவத்தி நந்தகம் நவிரம் வசிகரணம் கத்தி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மத்தகம்
  1. தலை
  2. உச்ச
  3. நெற்றி
  4. தலைக்கோலம்
  5. யானையின் தலைநெற்றி
  6. முகப்பு