முரடு

Rogue

Winslow (1862)

முரடு (muraṭu) — noun
  1. A joint of the body, யாக்கை மூட்டு
  2. A knot or knob, கணு. (c.) நிலம்கரடுமுரடாயிருக்கிறது. The land is uneven or rugged
  • முரடன் — A rude uncultivated man.
  • முரட்டாட்டம் — Rudeness, incivility.
  • முரட்டுக்கழுத்து — Stiff neck.
  • முரட்டுக்குணம் — A rough, unyielding, spiteful temper.
  • முரட்டோலை — An uneven strip of palm-leaf, as முறியோலை.

Fabricius (1972)

முரடு — noun
  1. a joint of the body கரடு
  2. a knot, or knob, கணு
  • முரடன் — a rude, obstinate man.
  • மூரடாயிருக்க — to be knobby, knotty, uneven or rugged.
  • முரட்டாட்டம் — rudeness, incivility.

Tamil Moli Akarathi (1928)

முரடு (muraṭu)
  1. கணு, காடு, பதமையின்மை, முனி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முரடு (muraṭu) — noun
  1. < முருடு
  2. Roughness, unevenness; ruggedness; கரடு. முரட்டுக்கட்டை
  3. Knob or knot, as in timber; மரக்கணு
  4. Joint of the body; சரீரத்தின் மூட்டு. (W.)
  5. Ill-temper, wildness, rudeness; மரியாதையின்மை
  6. Obstinacy; பிடிவாதம்
  7. Largeness, bigness; பருமன். முரட்டுப் பாம்பு

IndoWordNet

முரடு — noun
  1. தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்

பிடிவாதம் சண்டித்தனம் சாட்டியம் அடம் சுறட்டு செளிம்பு முரண்டு முஷ்கரம் மூர்க்கம் விடாப்பிடி மனநிலைமை மனநிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முரடு
  1. கரடு
  2. மரியாதையின்மை
  3. மரக்கணு
  4. உடலின் மூட்டு
  5. பிடிவாதம்
  6. பருமன்