மூர்க்கம்

ferocity, rage, fury, wrath - கடுமையான கோபம், வெறி violence, force - முரட்டுப் பலம் opposition, hatred - பகை

ferocity

Winslow (1862)

மூர்க்கம் (mūrkkam) — noun
  1. Foolishness, ignorance, stupidity, மூடத்தனம். W. p. 667. MOORKHA
  2. Rage, fury, wrath, violence, force, கடுங்கோபம்
  3. Obstinacy, opposition from hatred, சலஞ்சாதிப்பு
  4. An earth-worm, a belly-worm, நாகப்பூச்சி. அவனுடையமூர்க்கமெல்லாமடங்கிப்போய்விட்டது..... His mettlesomeness is reduced
  • சதைமூர்க்கம் — Lustiness, stoutness.
  • மூர்க்கக்குதிரை — A vicious horse.
  • மூர்க்கத்தனம்–மூர்க்ககுணம் — Obstinacy, opposition.
  • மூர்க்கவெறி — Fury, ungovernable passion.
  • மூர்க்கர் — [sing. மூர்க்கன்.] Angry persons. 2. (சது.) Low, ignorant people, கீழ்மக்கள். மூர்க்கரோடிணங்கேல். Join not with vicious persons. (Avv.) மூர்க்கனுமுதலையுங்கொண்டதுவிடா. An obstinate man and a crocodile will not lose hold of what they have seized. [prov.]
  • மூர்க்கன் — A kind of snake. See கொம்பேறிமூர்க்கன். 2. See மூர்க்கர்.

Fabricius (1972)

மூர்க்கம் — noun
  1. foolishness, ignorance, stupidity மூடத்தனம்
  2. fury, wrath, rage, உக்கிரம்
  3. obstinacy, opposition, சலஞ்சாதித்தல்
  4. an earth- worm, a belly-worm, நாகப் பூச்சி
  • மூர்க்கத் தனம்–மூர்க்கக் குணம் — obstinacy, opposition.
  • மூர்க்கவெறி — fury, ungovernable passion.
  • மூர்க்கன் — ( முர்க்கை) a low, ignorant, obstinate person; 2. a kind of snake.

Tamil Moli Akarathi (1928)

மூர்க்கம் (mūrkkam)
  1. உக்கிரம், கோபம், சலஞ்சாதித் தல், நாகப்பூச்சி
மூர்க்கம் (mūrkkam)
  1. சலஞ்சாதித்தல், நாகப்பாம்பு

IndoWordNet

மூர்க்கம் — noun
  1. அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
மூர்க்கம் — noun
  1. தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்

கோபம் சினம் ஆத்திரம் குரோதம் ஆவேசம் ஆக்ரோஷம் ஆங்காரம் ரௌத்திரம் சீற்றம் கடுகடுபபு சிடுசிடுப்பு காட்டம் கடுப்பு மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் பிடிவாதம் சண்டித்தனம் சாட்டியம் அடம் சுறட்டு செளிம்பு முரடு முரண்டு முஷ்கரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மூர்க்கம்
  1. காண்க: மூர்க்ககுணம்
  2. நாக்குப்பூச்சி
  3. கொண்ட கருத்துவிடாமை
  4. முரட்டுப்பலம்
  5. நாகப்பாம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மூர்க்கம் (mūrkkam) — noun
  1. < mūrkha
  2. Foolishness, stupidity; மூடத்தன்மை. (W.)
  3. Rage, fury, wrath; கடுஞ்சினம். மூர்க்கத்தவனை நரங்கலந்த சிங்கமாய்க் கீண்ட (திவ். இயற். 2, 84)
  4. Obstinacy; பிடிவாதம். (W.)
  5. Opposition; hatred; பகை. (W.)
  6. Violence, force; முரட்டுப் பலம். Loc
  7. Cobra; நாகப்பாம்பு. (யாழ். அக.)
  8. Thread worm. See நாக்குப்பூச்சி. (சங். அக.)