வரிசை

sequence

Winslow (1862)

வரிசை (varicai) — noun
  1. Order, regularity, row, ஒழுங்கு
  2. Custom, turn in duty or work, முறைமை. (Ell. 190. 5.)
  3. A present, a donation–especially to a daughter as a marriage-portion, or otherwise, after marriage, வெகுமானம். (சது.)
  4. A distinctive mark of honor, or a privilege, granted by authority, as பரிசு
  5. Good circumstances, நற்சீர். ஏவ்வெட்டுப்பேராகவரிசைப்படுத்து. In ranks or files of eight deep. வரிசையாய்நில்லுங்கள். Stand in a line. கருமவரிசையால். For the sake of securing an object. (நீதி. 65.)
  • வரிசைகொடுக்க — To give presents to a married daughter.
  • வரிசைகொண்டுபோக–வரிசையெடுக்க — To take presents–as the friends of a bridegroom or bride.
  • வரிசைக்காரன் — An orderly well behaved man. 2. One whose turn has come for duty, as முறைகாரன். (R.)
  • வரிசைக்கிரமம் — Order, regularity.
  • வரிசைசெய்ய — To render civility or courtesy.
  • வரிசைதப்பி — Without order.

Fabricius (1972)

வரிசை — noun
  1. order, regularity, row, rule, ஒழுங்கு
  2. usage, turns or reliefs by which duties or works are done, முறைமை
  3. a present, donation, வெகுமானம்
  4. good circumstances, நற்சீர்
  • இன்று என்னுடைய வரிசை — to-day is my turn.
  • அவ்வாறு பேராக வரிசைப்படுத்த — to rank soldiers in files of six deep.
  • வரிசை கொடுக்க — to give presents or dowry to a married daughters.
  • வரிசைக்காரன் — an orderly, well-behaved person. an honest man, one whose turn has come for duty.
  • வரிசைக் கிரமம் — order, regularity.
  • வரிசைதப்பி — irregularly, without order.

Tamil Moli Akarathi (1928)

வரிசை (varicai)
  1. ஒழூங்கு, சங்கை, நற்சீர், பரிசு, முறைமை, வெகுமாணம்
வரிசை (varicai)
  1. பதம்
வரிசை (varicai)
  1. ஒழுங்கு, முறைமை, வெகுமானம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வரிசை¹ (varicai) — noun
  1. Order, regularity; ஒழுங்கு. (சூடா.)
  2. Line, row, series; நிரையொழுங்கு
  3. Turn in duty or work; வேலைமுறை. (W.)
  4. Distinctive mark of honour or privilege granted by a royal or other authority; அரசர் முதலியோராற் பெறுஞ் சிறப்பு. பொற்பட்ட முன்னா வரிசைகள் (திருவாலவா. 28, 93)
  5. Insignia of royalty; இராசசின்னம். சாமரையுக்க மாதியாம் வரிசையிற் கமைந்த . . . தாங்கி (கம்பரா. நிந்தனை. 12)
  6. Honour; மரியாதை. பொற்புற வரிசை செய்வான் (திருவிளை. இந்திரன்முடி. 37)
  7. Excellence, eminence; மேம்பாடு. ஆடுகொள் வரிசைக்கொப்பப் பாடுவல் (புறநா. 53)
  8. Merit, worth; தகுதி. வரிசை யறிதலும் வரையாது கொடுத் தலும் (சிறுபாண். 217)
  9. Regard; பாராட்டு. வரிசைப் பெரும்பாட்டெல்லாம் (கலித். 85)
  10. Good conduct; நல்லொழுக்கம். அவன் வரிசை யாய் நடந்துகொள்கிறான்
  11. Good circumstances; நன்னிலை. (W.)
  12. Present, especially to a daughter on marriage or other occasion; சீராகச் செய்யும் நன்கொடை. மாமி வரவிட்ட வரிசை யென்று (விறலிவிடு. 533)
  13. Rate; proportion; வீதம்
வரிசை² (varicai) — noun
  1. Village dues or rent; கிராம வரிவகை. (I. M. P. Tp. 293.) இந்நிலம் இரண்டு மாவுக்கும் வரிசையாவது (Pudu. Insc. 613).
வரிசை (varicai) — noun
  1. Cultivator's share of produce; பயிர்விளைவில் உழவனுக்குரிய பங்கு. வரிசைக்கு உழும் (நேமிநா. சொல். 17, உரை).

IndoWordNet

வரிசை — noun
  1. ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.
வரிசை — noun
  1. வரிசை
வரிசை — noun
  1. ஒழுங்கில் அமைந்த தொடர்ச்சி
வரிசை — noun
  1. ஏதாவது ஒரு பொருள் வைக்குமிடம் அல்லது சரியான வரிசையில் இருக்கும் நிலை
வரிசை — noun
  1. நெசவாளியின் தறியில் நெய்யக்கூடிய கருவி

அணி ஏற்பாடு சந்தம் சரணம் அடி பல்வரிசை தீபாவளி தீபவரிசை இயற்கை காட்சி கோர்வை நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை சொல்லடைவு நிகழ்ச்சிநிரல் எழுதும் முறை தலைகீழ் மூச்சை அடக்கும் பயிற்சி மேலிருந்துகீழாக தொடக்கம் ஆரம்பம் ஆதி நிரல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வரிசை
  1. ஒழுங்கு
  2. நிரையொழுங்கு
  3. வேலை முறை
  4. அரசர் முதலியோரால் பெறுஞ் சிறப்பு
  5. அரசசின்னம்
  6. மரியாதை
  7. மேம்பாடு
  8. தகுதி
  9. பாராட்டு
  10. நல்லொழுக்கம்
  11. நன்னிலை
  12. சீராகச் செய்யும் நன்கொடை
  13. வீதம்
  14. ஊர்வரி வகை
  15. பயிர்விளைவில் உழவனுக்குரிய பங்கு