அகிலம்

பெயர்ச்சொல் எல்லாம், அனைத்து அகிலம் என்பது இந்த அகண்ட பூமியை குறிக்கும். வார்த்தை பயன்பாட்டிற்கு ஒரு உதாரணம்: 01. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் அகிலம் முழுவதும் பிரபலம்; 02. "எப்படியாவது அகிலம் முழுவதும் எனது பாடல்கள் ஒலிக்குமாறு பாடி நான் புகழ் பெறுவேன்", என்று மனதிற்குள் சபதம் எடுத்தான், பாடகன் பகலவன்.

world, earth universe

Tamil Wiktionary

அகிலம்
  1. பூமி
  2. எல்லாம்
  3. அனைத்து
  4. அகிலம் என்பது இந்த அகண்ட பூமியை குறிக்கும். வார்த்தை பயன்பாட்டிற்கு ஒரு உதாரணம்: 01. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் அகிலம் முழுவதும் பிரபலம்; 02. "எப்படியாவது அகிலம் முழுவதும் எனது பாடல்கள் ஒலிக்குமாறு பாடி நான் புகழ் பெறுவேன்"
  5. என்று மனதிற்குள் சபதம் எடுத்தான்
  6. பாடகன் பகலவன்.
  7. அனைத்துலகம்
  8. முழுமை
  9. அனைத்து நாடுகள்.செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அகிலம் (akilam) — noun
  1. < a-khila
  2. The whole, all; முழுவதும். (திவா.)
  3. Universe; பிரபஞ்சம் முழுவதும். அகிலத்துள்ளதோர் கணங்களும் (கந்தபு. பார்ப். 9)
  4. Earth; பூமி. எந்தைதன் னேவ லா லகிலந் துறந்தவாறென (இரகு. சீதைவ. 72)
  5. Water; நீர். (பிங்.)

Winslow (1862)

அகிலம் (akilam) — noun
  1. [priv. அ et கிலம், separated.] All, the whole, ஏல்லாம். Wils. p
  2. AKHILA
  3. The earth, பூமி. (p.)
  • அகிலரூபன் — Equivalent to ஏல்லாமானோன், he who is of every form, he who is all.

Fabricius (1972)

அகிலம் — noun
  1. (அ priv. + கிலம், separated) all, எல்லாம்
  2. the earth பூமி
  • அகில இந்திய சுய ஆட்சி சங்கம் — All India Home Rule Committee.
  • அகிலாண்டம் — the universe.

Tamil Moli Akarathi (1928)

அகிலம் (akilam)
  1. சருவலோகம், பிரபஞ்சம், ஏல்லாம், பூமி

IndoWordNet

அகிலம் — noun
  1. சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
அகிலம் — noun
  1. உயிரினங்கள் வாழும் இடம்

பூமி புவனம் அண்டம் ஜகம் அவனி தரணி இடம் ஸ்தாபனம் கடல்நீரிலுள்ள பூமியின் முனை தாழ்ந்த நிலம் தரிசுநிலம் விளைநிலம் உற்பத்திநிலம் சாகுபடிநிலம் மகசூல்நிலம் வெள்ளாமைநிலம் தீவு சமதளமற்றபூமி சமவெளிப்பகுதி பாறைநிலம் மணல் இனாம்பூமி உபபூமி உலகம் உலகு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அகிலம்
  1. உலகம், பூமி
  2. எல்லாம்
  3. முழுமை