அண்டம் என்பது வெளி மற்றும் காலம் ஆகியவற்றின் முழுமை, அனைத்து வடிவத்திலுள்ள பருப்பொருள், ஆற்றல், உந்தம், இயற்பியல் விதிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் மாறிலிகள் என இயற்பியல் ரீதியாக இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கியதாக வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், அண்டம் என்ற சொல்லின் பயன்பாடு, பிரபஞ்சம் , உலகம் அல்லது இயற்கை போன்ற கோட்பாடுகளைப் பற்றி குறிப்பிடுகையில் சூழ்நிலைக்கு ஏற்ப சிறிது மாறுபடலாம். அவன் ஒரு அண்டப்புளுகன் (He is an extreme liar)
universe, cosmos earth, world egg
Tamil Wiktionary
அண்டம்
அண்டம் என்பது வெளி மற்றும் காலம் ஆகியவற்றின் முழுமை, அனைத்து வடிவத்திலுள்ள பருப்பொருள், ஆற்றல், உந்தம், இயற்பியல் விதிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் மாறிலிகள் என இயற்பியல் ரீதியாக இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கியதாக வரையறுக்கப்படுகிறது.
இருப்பினும், அண்டம் என்ற சொல்லின் பயன்பாடு, பிரபஞ்சம் , உலகம் அல்லது இயற்கை போன்ற கோட்பாடுகளைப் பற்றி குறிப்பிடுகையில் சூழ்நிலைக்கு ஏற்ப சிறிது மாறுபடலாம்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அண்டம் (aṇṭam) — noun
< aṇḍa
Egg; முட்டை. (திவா.)
The earth; பூமி நீர்கொண்ட வண்டத்தும் (அரிச். பு. பாயி. 3)
Sky, visible heavens; வானம். (திவா.)
Universe in the shape of an egg; பிரபஞ்ச வுருண்டை. (அஷ்டாதச. தத்வத். 2, 34.)
Sac of the civet cat; புழுகுசட்டம். (சம். அக. Ms.)
Brain; மூளை. (வை. மூ.)
Skull; தலையோடு. (யாழ். அக.)
Winslow (1862)
அண்டம் (aṇṭam) — noun
An egg, முட்டை
Testicle, பீசம். Wils. p
ANDA
The solar system, உலகம்
An imaginary shell surrounding the earth and its accompanying sphere, அண்டகோளம்
The sky, the visible heavens, வானுலகம்
Ether, one of the five elements. See பூதம்
அண்டகடாகம்–அண்டகோளம் — The shell supposed to surround the earth and its attendant spheres.
அண்டகோசம் — The egg-shaped universe, முட்டை வடிவான அண்டம். 2. An astronomical treatise, ஓர்நூல்.
அண்டச்சுவர் — Wall or shell of the mundane egg, அண்டபித்திகை.
அண்டபகிரண்டம்–அண்டரண்ட பகிரண்டம் — This world and the worlds beyond the mundane sphere; ex பஹி–பஹிஸ், outside.
அண்டபிண்டம் — The universe and the body; the latter is said to contain in embryo, or miniature, every thing found in the former. அண்டத்திலுள்ளதுபிண்டத்தில் உண்டு. What is in the world is also in the human body.
அண்டமுகடு — The highest part or top of the imaginary shell that surrounds the solar system.