அழி

அழிவு, கேடு வைக்கோல் கிராதி

to perish, be ruined to decay, be mutilated to fail, be frustrated

Winslow (1862)

அழி (aḻi) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், அழிய, v. n. To decay, degenerate, perish, be corrupted, ruined, wasted, blighted, effaced, obliterated, abolished, demolished, annihilated, கெட
  2. To fail (as a promise), be frustrated as a hope, &c., be refuted, தவற
  • அழிகரு — Abortion, கருவழிவு.
  • அழிகுட்டி — A miscarriage, an abortion applied chiefly to brutes–the casting of the young, வயிற்றில்மரித்தது.
  • அழிந்தோரைநிறுத்தல் — One of the eight constituent parts of virtue, அறத்துறுப்பு.
  • அழிபுண் — A foul ulcer, ஆறாப்புண். (M. Dic.)
  • அழிமதி — Waste, extravagance, malicious intention, கெடுபுத்தி.
  • அழிமுதல் — Waste of property, as of capital, principal, &c. முதலழிவு.
அழி (aḻi) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To blight, blast, ruin, கெடுக்க
  2. To waste, injure, damage, பாழாக்க
  3. To abolish, consume, annihilate, destroy. demolish, exterminate, சங்கரிக்க
  4. To efface, obliterate, குலைக்க
  5. To refute an argument. கண்டிக்க. தேடாதழிக்கிற்பாடாய்முடியும். If you spend what you have not earned, you will suffer. (ஔவை.) கருவழித்திடலுநன்றே. It would be better to destroy the foetus, (to cause abortion.) வறிதினழித்திடார். They will waste nothing in vain. (காசிகரண்டம்.)
  • அழிகட்டு — A fabrication either varbal or written to deprive another of his right, a forgery, (a law term), பொய்ச்சீட்டு. 2. An excuse, pretence, subterfuge, வீண்போக்கு. 3. Obstacle, impediment, hinderance, தடை. 4. Means used for counteracting magic, poison, &c. மாற்று.
  • அழிச்சாட்டியம் — Improper treatment, an unlawful or wicked proceeding. வாங்கின கடனைக்கொடாம லழிச்சாட்டியம் பண்ணிவருகிறான். He gives much trouble by delaying to pay the debt.
  • அழிச்சாட்டியக்காரன் — A turbulent fellow, a bully.
  • அழிப்பு — Destroying, ruining, wasting, consuming in an active sense, அழிக்கை.
  • அழிப்பாளி — A spendthrift, squanderer, prodigal, profligate, ஊதாரி.

Fabricius (1972)

அழி — v. i.
  1. v. i. perish, fall to dust, decay, கெடு
  2. fail, தவறு
  3. be defeated, தோல்
  4. swell, increase, பெருகு
  5. sympathise with, பரிவுகூர்
  6. be exhausted, spent, செலவு ஆகு
  • அழிகரு–அழிகுட்டி — an abortion.
  • அழிம்பன் — a spendthrift, a prodigal, a profligate.
  • அழிம்பாய்ப் போக–அழிம்பாக — to be wasted.
  • அழிம்பு — waste, damage, ruin, injury, act of injustice.
  • சொத்து அழிய — wealth to be wasted.
  • சீர் அழிய–செய லழிய–தீரமழிய–உள்ளழிய — to go out of order, , to become disabled to lose courage; to be discouraged .
அழி — v. t.
  1. v. t. destroy சங்கரி
  2. squan- der, blight, damage, கெடு
  3. blot out, குலை
  4. smear, தடவு
  5. leave off, நீக்கு
  • அழிப்பு — destroying.
  • அழிப்பாளி — a spendthrift.
  • அழிச்சாட்டியம் — trouble; persisting in evil ways, unworthy conduct.
  • அழிச்சாட்டியக்காரன்–தீயவன் — an unjust person ; an inciter of false litigation.

Tamil Moli Akarathi (1928)

அழி (aḻi)
  1. அழியென்னேவல், அழிவு, இர க்கம், தெரிநிலை, வினைப்பகுதி, பெய ரெச்சத்தொகை, வைக்கோல்

IndoWordNet

அழி — verb
  1. தரையில் விழுதல்

மடி சாய் வீழ் சா கே அழிந்துபோ நாசமடை வீழ்ச்சியடை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அழி
  1. கேடு
  2. வைக்கோல்
  3. வைக்கோலிடும் கிராதி
  4. கிராதி
  5. வண்டு
  6. மிகுதி
  7. வருத்தம்
  8. கழிமுகம்
  9. இரக்கம்

Tamil Wiktionary

அழி — பெயர்ச்சொல் (Noun)
  1. அழிவு
  2. கேடு
  3. வைக்கோல்
  4. கிராதி
  5. இரக்கம்

[object Object], [object Object]

அழிவு அழிப்பு அழித்தல் சீரழி கற்பழி சீரழிவு disorder அலி அளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அழி³ (aḻi) — noun
  1. < அழி¹-
  2. Ruin, destruction; கேடு. அழிவந்த செய்யினும் (குறள், 807)
  3. Straw; வைக்கோல். உழுத நோன்பக டழிதின் றாங்கு (புறநா. 125)
  4. Crib for straw; வைக்கோலிடுங் கிராதி. மாட்டுக்கு அழியில் வைக்கோல் இருக்கிறதா? cf. அளி
  5. [M. aḻi.] Lattice; கிராதி. cf. அளி
  6. Pity; இரக்கம். அழிவரப் பாடிவருநரும் (புறநா. 158)
அழி¹ (aḻi) — noun
  1. Beetle; வண்டு. அழிமல்கு பூம்புனலும் (தேவா. 78, 3).
அழி⁴ (aḻi) — noun
  1. < அழி-
  2. Excessiveness; மிகுதி. அற்றா ரழிபசி தீர்த்தல் (குறள், 226)
  3. Pain; வருத்தம். அழிதக மாஅந்தளிர் கொண்ட போழ்தினான் (கலித். 143)