மடி

ஒன்றை இரண்டாக மாற்றுதல் ( Two folding ) மனிதரின் தொப்புளுக்கு கீழுள்ளப் பகுதியை மடி என்பர். பால் கறக்கும் உடலின் பகுதியை, மடி என்பர்.

to be bent, folded, turned down, lapped in to be turned, as an edge or a point to droop, as the head of one asleep or as sheafs of grain in a field

Winslow (1862)

மடி (maṭi) — noun
  1. The lap of a person, the belly or bosom, வயிறு
  2. Cloth, garment, வஸ்திரம்
  3. A piece of cloth of twenty-four cubits, being either four அங்கவஸ்திரம், of six cubits, or two தோவத்தி, of twelve cubits each
  4. A kind of cloth made of the fibre of trees, worn after ablution, as பொத்தித்தோவத்தி
  5. A fold in the cloth wrapped round the waist, answering for a pocket, மடிந்தது
  6. The udder of an animal; or [according to R.] roundness of the female breast
  7. Ruin, loss, detriment, damage, கேடு
  8. Sloth, idleness, indolence, சோம்பல்
  9. [in some connections.] A time, turn, that which is double, தரம்
  10. Disease, ailments, நோய்
  11. Lie, falsehood, பொய்
  12. Nipple, teat, pap, dug, முலைமேற்றிரள்
  13. The screw-pine, Cardeira. See தாழை. (சது.)
  14. A kind of net, ஓர்விதவலை
  15. (Tel.) Purity. களிமடிமானிகாமிகள்வன். The drunkard, the lazy, the haughty, the lustful, the thief. (நன்.) மடியிற்கனமிருந்தால்வழியிலேபயம். If there be a heavy girdle [from money], there will be fear in the way
  • கரைமடி — A shore-net.
  • தட்டுமடி — A deep sea-net.
  • மடிகசக்க–மடிபிசைய — To rub the udder of a cow to fit it for milking.
  • மடிகழுவ — To mollify and wash the udder of a cow after calving.
  • மடிகோல — To make a large lap or fold for the reception of any thing to be given, showing greediness.
  • மடிசுரக்க — To form, as milk in the udder.
மடி (maṭi) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be bent, folded, turned down, or lapped in, மடங்க
  2. To be turned as an edge, or a point, &c., முடங்க
  3. To bend, or incline–as the head of one asleep, &c, தலைசாய
  4. To fall, be beaten down–as grain in the field, கதிர்சாய
  5. To wither, bend and hang–as withered leaves, வாட
  6. To roll over–as waves, அலைமடங்க
  7. To perish; to be slain in war; to perish by epidemics, கெட
  8. To die, சாக
  9. [in comb.] To be grieved, disheartened; mortified; to have the affections blunted, திடன்குறைய
  10. [prov.] To break, to be broken–as ripe blisters, கொப்புளமுடைய
  • மடிகம்பு — [prov. com. படைமரம்.] A weaver's rod for arranging the warp.
  • மடிகாது–மடிசெவி — Lopping ears–as of dogs.
  • மடிசல்–மடியல் — Grain injured by time, &c.
  • மடிமை — Idleness, sloth, inactivity, சோம்பற்றனம்.
  • மடிவு — Death, சாவு. 2. Ruin, loss, destruction, அழிவு. 3. Inactivity, inertness, சோம்பு. 4. Discouragement. See மனமடிவு.
மடி (maṭi) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bend, to turn down, turn in; to double, to fold–as the arms; to double up; to braid; to plat, மடக்க
  2. [in comb.] To baffle in speech, to confound by artifice, to play upon words, to equivocate, பேச்சிலேமடங்கடிக்க
  3. To kill, destroy, கொல்ல. (c.)
  • காரியத்தைமடிக்க–பேச்சைமடிக்க — To pervert an argument.
  • மடிகால் — [com. மடிப்புக்கால், மடிப்பங்கால்.] A bent leg, as in kneeling, மடக்கியகால். 2. A foot set on the knee of the other leg.
  • மடித்துத்தைக்க — To hem.
  • மடிப்பு — Fold, doubling, plait. 2. Hemming, hem, மடிப்புத்தையல். 3. Crease, mark of a fold, மடிப்புக்குறி. 4. Trick, fraud, imposture, snare, entanglement, மோசம். மடிப்பானகாரிம். Deception. மடிப்பானவார்த்தை. Deceptive language. மடிப்பிலேயகப்படுதல். Being deceived, entrapped.
  • மடிப்புக்கதவு — Folding doors.
  • மடிப்புக்காரன்–மடிப்பாளி — A cheat, defrauder, impostor, சூதன்.

Fabricius (1972)

மடி — noun
  1. the lap, the bosom
  2. garment, சீலை
  3. a fold in the cloth wrapped round the waist, மடிந்தது
  4. the udder of an animal
  5. loss, damage, கேடு
  6. falsehood, lie, பொய்
  7. laziness, indolence, சோம்பல்
  8. a kind of net
  9. (Tel.) purity
  10. disease, ailment
  11. a kind of fibre cloth worn after ablution
  • இரண்டு சோமன் ஓருமடி — two cloths put together.
  • பிள்ளையை மடியிலே வைத்திருக்க — to hold a child in the lap.
  • பணத்தை மடியிலே வைக்க — to put the money in the girdle or pocket.
  • மடி கோல — to make a large lap or fold for receiving anything to be given.
  • மடி சுரக்க — to form as milk in the udder.
  • மடி பிடிக்க — to seize one by the waist cloth in order to get redress.
மடி — v. i.
  1. v. i. be bent, folded, மடங்கு
  2. perish, be slain or killed, கெடு
  3. die, சா
  4. wither away (as standing corn)
  • மடிந்துபோக — to be destroyed, to die.
  • மடிந்துபோன — ( மடித்துப்போன) மரம், rotten wood.
  • மடிமை — laziness, slowness.
  • மடியல்–மடிசல் — grain injured by time.
  • மடிவு–மடிதல் — perishing, dying; 2. ruin, loss, destruction 3. inactivity.
  • மனமடிவு — despondency, mortification; 2. indifference, apathy.
மடி — v. t.
  1. v. t. fold up, bend, double, complicate, மடக்கு
  2. confound by artifice மயக்கு
  3. kill, destroy; கொல்லு
  • மடித்து மடித்துச் சொல்லாதே — do not repeat the same over and over.
  • பேச்சை மடிக்க — to pervert an argument.
  • மடித்துத் தைக்க — to hem.
  • மடிப்பாய்ப்பேச — to speak fradulently.
  • மடிப்பு — a plait, a fold, a hem; 2. a fraud, a deceit.
  • மடிப்புக் கத்தி — a folding knife, a clasp-knife.

Tamil Moli Akarathi (1928)

மடி (maṭi)
  1. அடங்கல், கேடு, சீலை, சோம்பல், சோறு, தாழை, தாழைவிழுது, நோய் பொய், மடங்குதல், மடிந்தது, மடியெ ன்னேவல், முலைமேற்றிரள், வயிறு, வலையினருகு
மடி (maṭi)
  1. ஆபீனம், செருத்தல்
மடி (maṭi)
  1. கேடு, சீலை, சோம்பல், தாழை, நோய், பொய், மடியென்னேவல்,மு லைமேற்றிரள், வயிறு

IndoWordNet

மடி — noun
  1. உட்கார்ந்திருக்கும் போது மடங்கிய முழங்காலுக்கு மேல் உள்ள தொடைப் பகுதி.
மடி — verb
  1. தரையில் விழுதல்
மடி — verb
  1. விரிந்திருக்கும் அல்லது நீண்டிருக்கும் நிலையிலிருந்து சுருண்டோ அல்லது மடக்கப்பட்டோ படிதல்.
மடி — verb
  1. எண்ணம் அழிந்து போதல்

நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை சாய் வீழ் அழி சா கே அழிந்துபோ நாசமடை வீழ்ச்சியடை வேலைசெய் இரு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மடி
  1. மடங்குகை
  2. வயிற்றுமடிப்பு
  3. வயிறு
  4. அரை
  5. மடித்த தொடையின் மேற்பாகம்
  6. ஆடை
  7. தாள் முதலியவற்றின் மடிப்பு
  8. பை போன்ற முந்திச்சுருக்கு
  9. வலைவகை
  10. பசு முதலியவற்றின் முலையிடம்
  11. அடக்கம்
  12. தனிமை
  13. சோம்பல்
  14. சோம்பலுடையவன்
  15. நோய்
  16. மீன்வலையோடு சேர்ந்த பெரும்பை
  17. கேடு
  18. பகை
  19. பொய்
  20. தீநாற்றம்
  21. ஆடைவகை
  22. தட்டில்லா நிலை
  23. இரட்டைக் கட்டுமரம்
  24. சோறு
  25. தாழை
  26. தாழைவிழுது
  27. மடங்கு

Tamil Wiktionary

மடி

[object Object], [object Object]

மடிதல் மடித்தல் மடிப்பு மடிக்கணினி மடிப்பிச்சை மடிப்பெட்டி தாய்மடி பால்மடி இருமடி மும்மடி பன்மடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மடி³ (maṭi) — noun
  1. < மடி¹-
  2. [K. maḍi.] Bending down, as sheaf of paddy; மடங்குகை. (பிங்.)
  3. Crease in the abdomen; வயிற்று மடிப்பு
  4. Belly, stomach; வயிறு. இடாகினிப்பேய் வாங்கி மடியகத்திட்டாண் மகவை (சிலப். 9, 22)
  5. Waist; அரை. பணப்பையை மடியிற் கட்டிக்கொண்டான்
  6. Lap; மடித்ததொடையின் மேற்பாகம். குழந்தை அவன் மடியில் உட்கார்ந்துகொண்டிருந்தது
  7. Fold, as in a paper; ஆடை காகித முதலியவற்றின் மடிப்பு
  8. Cloth, garment; ஆடை. குறியவு நெடியவு மடிதரூஉ விரித்து (மதுரைக். 520)
  9. Cloth made of the fibre of trees, coarse silk, cotton, etc., as ceremonially pure; தூய்மையாக உடுத்தும் மரவுரி, பட்டு, பருத்தி முதலியவற்றாலாகிய ஆடைவகை. உடுக்க மடி கொண்டுவா. Colloq
  10. Ceremonial purity, as of one who has bathed; தீட்டில்லா நிலை. நான் மடியா யிருக்கிறேன், என்னைத் தொடாதே
  11. Piece consisting of a certain number of cloths; பலதுண்டுகள் கொண்ட ஆடைவகை
  12. Fold in a cloth wrapped round the waist, answering for a pocket; பைபோன்ற முந்திச் சொருக்கு
  13. A kind of net; வலைவகை. (W.)
  14. Large bag attached to a fishing net; மீன் வலையோடு சேர்ந்த பெரும் பை. Loc
  15. Udder, especially of a cow; பசு முதலியவற்றின் முலையிடம். மடி வெண் டிங்களா (கம்பரா. ஊர்தே. 56)
  16. Submission; அடக்கம். (பிங்.)
  17. Loneliness; தனிமை. (பிங்.)
  18. [M. mati.] Sloth, idleness, indolence; சோம்பல். போகூழாற் றோன்று மடி (குறள், 371)
  19. Lazy person; சோம்பலுடைய வன். களிமடி மானி (நன். 39)
  20. Disease, ailment; நோய். (பிங்.)
  21. Ruin, loss, detriment, damage; கேடு. (பிங்.)
  22. Lie, falsehood; பொய். (பிங்.)
  23. Hatred, enmity; பகை. (சூடா.)
  24. Bad odour; துர்க்கந்தம். மடி நாறு மேனி (தேவா. 30, 4)
  25. Double catamaran; இரட்டைக் கட்டுமரம். (G. Tn. D. I, 229.)
  26. Boiled rice; சோறு. (அக. நி.)
  27. Fragrant screw-pine. See தாழை
  28. (பிங்.)
  29. External root of the screw-pine; தாழைவிழுது. (தைலவ. தைல. 125.)
  30. Turn, time; மடங்கு. கூற்றினும் மும்மடி கொன்றான் (கம்பரா. இலங்கையெரி. 57)