ஆக்கம்

creation

Winslow (1862)

ஆக்கம் (ākkam) — noun
  1. An abstract from ஆகுதல், or ஆக்குதல், indicating change from one state or quality to another–as in இவன் நல்லவனானான், he has become a good man
  2. Gain, profit, acquisition, இலாபம்
  3. Wealth, prosperity, riches, fortune, affluence, செல்வம்
  4. Gold, பொன்
  5. Lakshmi, இலக்குமி
  6. The front division of an army, கொடிப்படை
  7. Elevation, ஏழுச்சி
  8. Enlargement, increase, பெருக்கம். (p.)
  • ஆக்கச்சொல் — A word or phrase used metonymically, ஆகுபெயர்ச்சொல்; such as, விட்டவாக்கச்சொல், விடாதவாக்கச்சொல், விட்டும்விடாதவாக்கச்சொல்.
  • ஆக்கஞ்செப்பல் — One of the ten அவத்தை–talking much of a loved one.
  • ஆக்கப்பெயர் — Nouns or names given at pleasure, arbitrary signs differing slightly from the pure, இடுகுறிப்பெயர். It is of two kinds; viz.: 1. இடுகுறியாக்கப் பெயர்; as முட்டை, though already an arbitrary sign to denote an egg has yet the signification of Subramanian, as a name given to him subsequently by பொய்யாமொழிப்புலவர், at his own request. 2. காரணவாக்கப்பெயர்; as மலைமகண்மகன், the son of Parvati–the above Subramanian himself.
  • ஆக்கப்பொருள் — A meaning given to a word or phrase not originally and directly belonging to it, ஆகுபெயர்ப் பொருள்.
  • ஆக்கவினைக்குறிப்பு — A verb indicating a natural change of state or quality, ஓர்குறிப்புவினை, as இவன் நல்லவனாயிருக்கிறான்.

Fabricius (1972)

ஆக்கம் — noun
  1. gain, profit இலாபம்
  2. gold, பொன்
  3. wealth, செல்வம்
  4. creation, சிருட்டி
  5. Lakshmi
  6. van of army, சேனை முன்னணி
  • ஆக்கப்பெயர் — noun or names given at pleasure, arbitrary signs.

Tamil Moli Akarathi (1928)

ஆக்கம் (ākkam)
  1. ஆகுதல், இலக்குமி, இலாபம், ஏழுச்சி, கொடிப்படை, செல்வம், வடை வகுப்பு, பெருக்கம், பொன்
ஆக்கம் (ākkam)
  1. அதிகாரம், செல்வம், நந்தல், பெருக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆக்கம் (ākkam) — noun
  1. See ஆக்கக்கிளவி. செயற்கைப் பொருளை யாக் கமொடு கூறல் (தொல். சொல். 20)
  2. Creation; சிருஷ்டி. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல் (சி. சி. 1, 37)
  3. Increase, development; விருத்தி. தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி. 301)
  4. Gain, profit; இலாபம். ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை (குறள், 463)
  5. Accumulation; ஈட்டம். அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள், 755)
  6. Wealth, prosperity, fortune; செல்வம். மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457)
  7. Gold; பொன் (பிங்.)
  8. Lakṣmī; இலக்குமி. (பிங்.)
  9. Benediction; ஆசி. (திருவிளை. மாயப். 26.)
  10. Arrangement, preparation, as in cleansing rice; அமைத்துக்கொள்ளுகை. (தொல். சொல். 1, சேனா.)
  11. Van of an army carrying the banner; கொடிப்படை. (திவா.)
ஆக்கம் (ākkam) — noun
  1. < ஆகு-
  2. Achievement, accomplishing; கைகூடுகை. (பு. வெ. 1, 4, உரை.)
  3. Auspiciousness; மங்களகரம். Loc

IndoWordNet

ஆக்கம் — noun
  1. கலை உணர்வுடன் புதிதாக உருவாக்கப்படும் கலை, இலக்கிய கட்டிடம் போன்ற வடிவங்களில் ஒன்று.

படைப்பு கலைப்பொருள்கள் மூலப்படைப்பு கட்டுரை கதை முதல்வரி மங்களகரமான பாட்டு மங்களபாட்டு அற்புதமான கலைநயம் அற்புதமான கைத்திறன் வேதாந்தம் தத்துவம் கைவினை சூத்திரம் மருதாணி இடுதல் கேலிச்சித்திரம் கார்டூன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆக்கம்
  1. காண்க: ஆக்கக்கிளவி
  2. அமைத்துக் கொள்ளுகை
  3. கைகூடுகை
  4. உண்டுபண்ணுகை
  5. படைப்பு
  6. செல்வம்
  7. பொன்
  8. பெருக்கம்
  9. இலாபம்
  10. ஈட்டம்
  11. கொடிப்படை
  12. திருமகள்
  13. மங்களகரம்
  14. வாழ்த்து