ஈடு

Tamil Wiktionary

ஈடு

[object Object]

இடு ஈடுபடு ஈடுகட்டுதல் காப்பீடு குறீயீடு முறையீடு முதலீடு தலையீடு வெளியீடு இழப்பீடு

Winslow (1862)

ஈடு (īṭu) — noun
  1. Equivalent, substitution, vicarious retribution, fruit, result, பிரதி
  2. Comparison, equal, match, ஒப்பு
  3. Reward, recompense, compensation, remuneration, satisfaction, கைம்மாறு
  4. Pawn, pledge, security, mortgage of land, அடகு
  5. (p.) Greatness, dignity, moral excellence, பெருமை
  6. Power, strength, robustness, வலி
  7. Ability, means, தகுதி
  8. Tendency, liability, exposure, obnoxiousness, being subject to, falling a prey, நேராகுகை. (சத. 63.)
  9. Thickening, becoming slimy, குழைவு. அம்மாத்திரத்துக்கெனக்கீடில்லை. I have not the means to do so much. வினைக்கீடாகவனுபவமுண்டாம். Enjoyments and sufferings will accord with the deeds done within the periods of former births. அதற்கீடாகவிதுகொடுக்கிறேன். I give this for or instead of that. அவளுக்கவனீடல்ல. He is not a suitable match for her
  • ஈடழிய — To suffer the loss of power, dignity, wealth, &c., to become poor, பெருமைகுன்ற.
  • ஈடழிவு — Loss of power, property, dignity, &c., சீர்கேடு.
  • ஈடன் — A strong, competent, wealthy man, பெருமையுடையோன். ஈடன்பாடஞ்சான். A wealthy man will not fear losses.
  • ஈடாட — To compete with another, நேர்நிற்க. 2. [prov.] To be loose–as a tooth, a nail, the spokes of a wheel, to joggle, உழல.
  • ஈடாட்டம் — Competing or matching with another. 2. Pecuniary ability, the free use of money–as by a rich merchant, கொடுக்கல்வாங்கல். 3. Being loose–as a nail, &c., உழலுகை.
  • ஈடுகட்ட–ஈடுபண்ண — To give security, பிணைகொடுக்க. 2. To make amends, restitution, reprisals, &c., to identify, ஈடுசெய்ய.

Fabricius (1972)

ஈடு — noun
  1. substitution, what is equal in value, பதில்
  2. a pawn, pledge, அடகு
  3. reward, compensation, கைம்மாறு
  4. comparison, match, equality, ஒப்பு
  5. means, தகுதி
  6. dignity as in "ஈடின்வனப்பு" (ஏலாதி)
  7. content, subject as of a letter
  8. coat-of-mail, கவசம்
  • ஈடற்றார்–ஏலாதி — those having no means to pay the king's taxes.
  • அதற்கு ஈடாக இதைக் கொடுக்கிறேன் — I give you this for that.
  • நீ அவனுக்கு ஈடாவாயா — ? are you equal with him?
  • அம்மாத்திரத்துக் கெனக்கீடில்லை — I have not the means to give or do so much.
  • அவளுக்கு இவன் ஈடல்ல — he is not a suitable match for her.
  • ஈடில்லாத கடன் — money lent without pawn.

Tamil Moli Akarathi (1928)

ஈடு (īṭu)
  1. உவமை, ஒருமருந்து, கடன்கோ டற்குவைத்த அடகு, குழைவு,சரி யொத்தது, பெருமை, பதில், வலி
ஈடு (īṭu)
  1. உவமை, குழைதல், பெருமை, வலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஈடு (īṭu) — noun
  1. Applying, putting on; இடுகை. ஈடமை பசும் பொற் சாந்தம் (சீவக. 1256)
  2. Delivering, handing over; பிறர்பால் ஒப்புவிக்கை. (திருவாலவா. 28, 36.)
  3. Substitute, compensation; பிரதி. அதற்கீடாகத் தந்தான்
  4. Appropriateness, in respect of age and physical development, as between a would-be bridegroom and the bride; வதூவரர்க ளுடையவயது வளர்ச்சிகளின் பொறுத்தம். அவளுக்கும் அவனுக்கும் ஈடு போதாது
  5. Fitness, suitability; தகுதி. ஆட்செய்யு மீடே (திவ். திருவாய். 1, 6, 2)
  6. Equal, compeer; ஒப்பு. ஈடு மெடுப்புமி லீசன் (திவ். திருவாய். 1, 6, 3)
  7. Pledge, security, mortgage; அடைமானம்
  8. Bulkiness, bigness; பெருமை. ஈடுசால் போரழித்து (சீவக. 59)
  9. Power, might, force; வலிமை. ஒருகரி யீடழித் துரித்தனை (தேவா. 142, வரி, 13)
  10. Condition, state; நிலைமை. மலர்ந்த வீட்டினால் (கம்பரா. இலங்கைகே. 4)
  11. Unhappiness, pain of mind; மனவருத்தம். ஈடினா லிருந் தெண்ணி (சீவக. 1762)
  12. Content; subject, as of a letter; உள்ளீடான விஷயம். முடங்க னிமிர்த்தத னீடு நோக்கி (கம்பரா. பள்ளி. 6)
  13. Way, means; உபாயம். அறியேன் சொல்லு மீட வர்க்கே (திருக்கோ. 111)
  14. Coat of mail; கவசம். உடம்புக் கீடிடாதே (ஈடு, 7, 5, 9)
  15. Melting, becoming soft; குழைவு. (சூடா.)
  16. Name of a commentary on the Tiruvāymoḻi, by Vaṭakku-t-tiru-vīti-p-piḷḷai. See ஈடு முப்பத்தாறாயிரம். (உபதேசரத்.)
ஈடு (īṭu) — noun
  1. < இடு-
  2. Fit or proper subject; ஏற்ற பொருள். நின்சோதனைக்கு நான் ஈடா (சர்வசமய. பக். 126)
  3. Turn; தடவை. இந்தத் தென்னை ஒரு ஈட்டுக்கு முப்பதுகாய் காய்க்கும்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஈடு
  1. ஒப்பு
  2. உவமை
  3. வலி
  4. பெருமை
  5. கைம்மாறு
  6. அடகு
  7. தகுதி
  8. நேராகுகை