உறை

இருப்பிடம், வீடு ஒன்றின் மேல் தூசி முதலியன படாமல் இருக்க அல்லது அதைப் பத்திரமாக வைக்க அணிவிக்கும் காகிதம், துணி முதலியவற்றால் ஆன பை அல்லது மூடி; போர்வை பாலைத் தயிராக்க பயன்படுத்தும் தயிர்த் துளி

sheath, scabbard, case cover upper garment, cloak, shawl

Tamil Wiktionary

உறை — பெயர்ச்சொல் (Noun)
  1. இருப்பிடம், வீடு
  2. ஒன்றின் மேல் தூசி முதலியன படாமல் இருக்க அல்லது அதைப் பத்திரமாக வைக்க அணிவிக்கும் காகிதம், துணி முதலியவற்றால் ஆன பை அல்லது மூடி; போர்வை
  3. பாலைத் தயிராக்க பயன்படுத்தும் தயிர்த் துளி
  4. ( வி)
  5. கடுங்குளிரால் தண்ணீர் பனிக்கட்டியாதல்
  6. வசித்தல்
  7. பாலைத் தயிராக்கு

[object Object]

Winslow (1862)

உறை (uṟai) — noun
  1. A sheath, scabbard, case, quiver, படைக்கூடு
  2. A cover, a pillow- case, &c., கௌசனை
  3. A receptacle for grain, a kind of sack, பண்டம்பெய்யுறை
  4. A reserve of curds for curdling milk, பாலிடுபிரை. (c.)
  5. Place of residence, appropriate, customary place for a person or thing, இருப்பிடம்
  6. Rain drops, துளி
  7. Rain, மழை
  8. Washerman's lye, ஆடையழுக்கற்றுநீர்
  9. Pungency, corrosiveness, causticness, காரம்
  10. Food of brutes, food, விலங்குணவு
  11. Medicine, medicament, மருந்து
  12. Life-time, வாழ்நாள்
  13. Length, நீளம்
  14. Height, உயரம்
  15. An earthen ring used for the construction of a well, கிணற்றுறை
  16. Marks or symbols in numbering–as one for ten, &c., in measuring, weighing, இலக்கக்குறி
  17. A snake's poison bag, பாம்பின்விஷப்பை
  18. Bell-metal, வெண்கலம். (p.) உறையிலேயிருக்கிறார். He is at home, out of employ–a kind of burlesque. பொழுதுறையிலேவிழுந்தது. The sun is set, lit. gone to its place
  • உறைகாரர் — Sheath-makers. See காரோடர்.
  • உறைகாலம் — Life-time, வாழ்நாள். 2. The rainy season, மழைகாலம்.
  • உறைகுத்த — To curdle milk, to cause it to coagulate.
  • உறைக்கிணறு — A well formed or earthen rings one placed upon another.
  • உறைத்துளி — Rain drops.
  • உறைமோர் — Sour milk used to curdle other milk, பிரைமோர்.
உறை (uṟai) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To abide, lodge, inhabit, sojourn, வாசஞ்செய்ய
  2. To be, or to dwell in a natural, appropriate place, or element–as men in houses, villages, &c.–fishes in water–birds in the sky, &c., இருக்க
  3. To haunt, frequent, infest, retire to–as birds to the grove–bees to their hive–snakes to their holes. &c., சஞ்சரிக்க
  4. To thicken, congeal, curdle, coagulate, freeze, இறுக. (c.)
  5. (p.) To be close, thick or clustered–as trees in a forest, செறிய
  • உறைந்தபனி–உறைபனி — Hoar frost, ice.
  • உறைந்தமழை–உறைமழை — Snow.
  • உறைபதி — One's place of residence, வசிக்குமூர்.
  • உறையிடம்–உறைவிடம் — A place of residence; an inner apartment.
  • உறையுள் — Abode, appropriate abiding place for human beings, or other creatures, தங்குமிடம். 2. A house, வீடு. 3. A village, town, ஊர். 4. A country, a district, நாடு. 5. A bed, a sleeping place, a dormitory, மக்கட்படுக்கை. 6. A village or town in an agricultural district, மருதநிலத்தூர். 7. Lifetime, ஆயுள். (p.)
  • உறையூர் — Villages, towns, &c., in cultivated districts, மருதநிலத்தூர். (p.)
உறை (uṟai) — infinitive
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be pungent, biting, sharp, கார்க்க
  2. To burn–as the body from exposure to the sun –the mouth, or a sore from any thing pungent–the back after flogging, &c., ஏரிய
  3. To affect acutely, cut to the quick–as a blow, rebuke, a sarcasm, &c.; to impress, தாக்க
  4. To become firm, fast, steadfast, decided–as the mind, அழுந்த. உறைக்கமழைபெய்தது. It rained effectively. ஏன்மேலேசூடுறைக்கிறது. The heat burns or scorches me. நாணுறைப்ப. So as to be touched with shame. (நீதிநெறி.) உப்புறைக்கிறது. It is very salt. சொன்னதொன்றுங்காதிலேயுறைக்கவில்லையா.... Has nothing that I said affected you? lit. your ears. ஏன்மனதிலேயுறைக்கிறது. It touches me to the quick. நான்சொன்னதுஅவன்மனதிலேயுறைத்தது. What I said made an impression on his mind. புளியுறைக்கிறது. It is very sour. கறியுறைக்கிறது. The curry is hot. வெயிலுறைக்கிறது. The sun scorches intensely. சாறுறைக்கிறது. The broth is pungent
  • உறைக்கஅடிக்க — To strike so as to produce feeling.
  • உறைக்கச்சொல்ல — To speak effectively.
  • உறைக்கப்பார்க்க — To look intently.
  • உறைத்துக்கொள்ள — To become strengthened in mind.
  • வாயுறைக்க — To burn as the mouth through eating hot spices.
  • உறைப்பு — Sharpness, pungency, acrimony, காரம். 2. Severity, tartness, harshness in language, &c., கொடுமை. 3. Smarting, &c. of the mouth from eating pungent spices, ஏரிவு. 4. Painful sensations of body or mind, தாக்குகை. 5. Intensity, acuteness, severity, உக்கிரம். 6. Impressiveness, positiveness, பதிவு.

Fabricius (1972)

உறை — noun
  1. sheath, cover, படைக்கூடு
  2. place of residence. இருப்பிடம்
  3. pungency, காரம்
  4. marks or symbols in numbering
  5. a reserve of curds for curdling milk, பிரை
  6. an earthen ring used for the construction of a well, கிணற்றுறை
  7. rain, மழை
  8. a snake's poison bag
  9. life-time, ஆயுள்
  10. bell-metal, வெண் கலம்
  11. a measure of grain, 60 மரக் கால்
  12. affliction, துயர்
  13. food, உணவு
  14. offering, காணிக்கைப் பொருள்
  15. upper garment, shawl, போர்வை
  • உறை குத்த — to curdle milk.
  • உறைக்கிணறு — a well formed of earthen rings.
  • உறைத்துளி — rain drops.
  • உறைமோர் — sour diluted curd where- by milk is curdled.
  • குதிர் உறை — earthen ring of a receptacle of paddy.
  • தலையணையுறை — a pillow case.
உறை — v. i.
  1. v. i. abide, live; தங்கு
  2. dwell or be in the natural element as fishes in water etc, இரு
  3. haunt, சஞ்சரி
  4. curdle, clot, thicken, coagulate, congeal, இறுகு
  • உறைந்த–உறை–பனி — hoar-forst, ice.
  • உறைந்த–உறை–மழை — snow.
  • உறைவிடம் — place, residence.
  • உறைவு — abiding, coagulation.
  • உறையுள்–துயிலுமிடம்–ஊர்–யுகம் — living, residing; 2. abode, house; 3. dormitory, ; 4. town, village. ; 5. acon, age, .
  • பேயுறைந்தகாடு — a jungle haunted by demons.
உறை — v. i.
  1. v. i. be pungent, sharp, or poignant as pepper etc. கார்
  2. smart, burn, எரி
  3. affect acutely, cut to the quick as a blow, rebuke, sarcasm, etc. தாக்கு
  4. drop as the rain, form as the dew, துளி
  5. beat upon, as wind, மோது, v. t. disgrace, அவமானி
  6. press down, அமுக்கு
  7. resemble, ஒத்திரு
  • குழம்புறைக்கிறது — the broth is hot.
  • வெயிலுறைக்கிறது — the sun scorches intensely.
  • வாய் உறைக்கிறது — the mouth burns. (from eating hot spices.)
  • என்மேலே சூடுறைக்கிறது — the heat burns or scorches me.
  • எனக்குறைக்கிறது–என் மனதில் உறைக் கிறது — it touches me to the quick.
  • உறைக்கச்சொல்ல — to speak effectively.

Tamil Moli Akarathi (1928)

உறை (uṟai)
  1. ஆடையழுக்கற்றுநீர், இடம், இருப்பிடம், உரை, இலக்கக்குறிப்பு ளொன்று, உயர்ச்சி, உவர்நீர், உறை யென்னேவல்,காரம், கிணற்றுறை, கௌசனை, துளி, நீளம், படைக்கூடு, பண்டம் பெய்யறை, பாம்பின்விஷ ப்பை, பாலிடுபிரை, பொருள், மருந் து, மழை,மழைத்துளி, வாழ்நாள், விலங்குணவு, வெண்கலம்
உறை (uṟai)
  1. ஆடையழுக்ககற்றுநீர், இடம், இ றை, உயர்ச்சி, உறையென்னேவல், ஒரிலக்கக்குறிப்பு, காரம், நீளம், ப டைக்கூடு, பண்டம், பெய்யுறை, பா லிடுபிறை, மருந்து, மழை, மழைத் துளி, வாழ்நாள், விலங்குணவு, வெ ண்கலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உறை¹ (uṟai) — noun
  1. < உறு
  2. Greatness; excellence; பெருமை. (பிங்.)
  3. Height; உயரம். (பிங்.)
  4. Length; நீளம். (திவா.)
  5. Wealth; பொருள். (பிங்.)
  6. Bell metal; வெண்கலம். (பிங்.)
  7. Units used as symbols for hundreds or thousands; பேரளவுக்குச் சங்கேதமாகவிடுஞ் சிற் றளவுக் குறி. உறையிடவும்போதார் (கம்பரா. உருக்காட். 117)
  8. That which is exceedingly low, as price; மிகக்குறைவானது. உறைவிற்குலாநுதலாள் விலை (திருக்கோ. 266)
  9. A measure of grain 60 மரக்கால்; ஓரளவு. Tj
  10. Affliction, distress; துன்பம். (பிங்.)
உறை¹ (uṟai) — noun
  1. < உறை²-
  2. Place of residence, town, appropriate or customary place for a person or thing; இருப்பிடம். உறையிலே யிருக்கிறார். (W.)
  3. Lifetime; வாணாள். வேந்த னுறைகடுகி யொல்லைக் கெடும் (குறள், 564)
  4. Sheath, scabbard, case; ஆயுதக்கூடு. உறைகழித் திலங்குவாள் (சீவக. 656)
  5. Cover, e.g., pillow-case; தூசிமுதலியன படாதவாறு மூடுகின்ற ஆடையு றை. செந்துகி லுறையின் மூடி (சூளா. கல்யா. 180)
  6. Receptacle for grain, a kind of sack; பண்டம் பெய்யும் கூடு. (W.)
  7. Burnt clay curb, used for the construction of a well; கிணற்றுறை. Colloq
  8. Upper garment, cloak, shawl; போர் வை. (பிங்.)
  9. Offering; காணிக்கைப்பொருள். நாணாளுறையு நறுஞ்சாந்துங் கோதையும் (பரிபா. 16, 52)
  10. The poison bag of the snake; பாம்பின் விஷப்பை. (W.)
உறை⁵ (uṟai) — noun
  1. < உறை³-
  2. Leaking; ஒழுகல். (திவா.)
  3. Drop of water or other liquid; நீர் முதலியவற்றின் துளி. (திவா.)
  4. Rain; மழை. உறைகோடி யொல்லாது வானம்பெயல் (குறள், 559)
  5. Rainy season; மழைக்காலம். நாளா லுறையெதிர்ந்து (திணைமாலை. 1)
  6. Reserve of curds for curdling milk; உறைமோர். உறையமை தீந்தயிர் (பெரும்பாண். 158)
  7. Pungency, corrosiveness; காரம். (திவா.)
  8. Washerman's lye; ஆடையழுக்ககற்று முவர்நீர். (திவா.)
  9. Medicine, medicament; மருந்து. கயற்கண் செய்த வுறைமலி யுய்யாநோய் (சிலப். 7, 8)
  10. Food; உணவு. (பிங்.) உறைவள ரூனிலாய வுயிர் (தேவா. 212, 6)

IndoWordNet

உறை — noun
  1. உறை
உறை — verb
  1. உறை
உறை — noun
  1. வானம்பாடி போன்ற பறவைகள் உட்காரும் இடம்

கலைப்பொருள்கள் வாளுறை தேங்காய் ஓடு கொட்டாங்குச்சி சிப்பி இப்பி ஓட்டாங்கிளிஞ்சில் கவாட்டி கும்பி மின்விசிறி உறை வீணைஉறை மாறுதல் ஏற்படுத்து இருப்பிடம் இருக்கை தங்குதரி வாசம் கூடு