கட்டளை

(பெ) - ஆணை, உத்தரவு; பின்பற்றி நடக்க வேண்டிய விதி, கட்டுப்பாடு; முறைமை தரம், தரத்தை அறிய உதவும், உரைகல்;

order, command, commandment, precept, decree, mandate touchstone

Tamil Wiktionary

கட்டளை
  1. (பெ) -
  2. ஆணை, உத்தரவு; பின்பற்றி நடக்க வேண்டிய விதி, கட்டுப்பாடு; முறைமை
  3. வருதி
  4. தரம், தரத்தை அறிய உதவும், உரைகல்;
  5. செங்கல் அறுக்கும் சட்டம்; அச்சு;
  6. அளவு; தராசு; எடைக்கருவி

Winslow (1862)

கட்டளை (kaṭṭaḷai) — noun
  1. An order, a command, law, precept, direction, appointment, institute, denunciation, injunction, warrant, charge, கற்பனை
  2. A mould for making bricks, செங்கலச்சு
  3. A rule or measure temporarily constructed for cutting ola leaves, &c., so as to make them of the right width, அளவோலை. (c.)
  4. (p.) Balance, scales, நிறையறிகருவி
  5. Libra of the zodiac, துலாவிராசி
  6. Weight, நிறை
  7. A touch-stone, உரைகல். (பெரிய.)
  8. Similitude, likeness, simile, உவமை
  9. Regularity, order, rule, ஒழுங்கு
  10. Restraint, restriction, தடை
  11. The matrix in general in which any thing is cast, or receives its form, a model, a symbol, a cast, a form, உருவங்கள்வார்க்குங்கருவி. தெரிவைமாருக்கோர்கட்டளையெனச்செய்ததிருவே. Oh! Lukshmi, who art created as the model of women
  • கட்டளைகேட்க — To obey an order, to execute a commission, to listen or to attend to the issuing of orders.
  • கட்டளைகொடுக்க — To give permission, to grant privileges, warrant.
  • கட்டளைக்கல் — A touchstone, உரைகல். 2. Weight, நிறைகல்.
  • கட்டளைக்குரு–கட்டளைச்சுவாமி — The principal priest for the time being–so used by the Romanists.
  • கட்டளைசொல்ல — To give or publish an order, to publish a notice.
  • கட்டளைச்சட்டம் — Regulations, enactments, edicts, statutes.

Fabricius (1972)

கட்டளை — noun
  1. command, order, கற்பனை
  2. rule, ஒழுங்கு
  3. frame for making bricks, a mould
  4. portrait, image
  5. balance, scalepans
  6. touchstone, உரைகல்
  7. way, method, manner, முறைமை
  8. endowment for some special services in a temple
  9. saddle & other equipment for the horse
  10. grade, rank தரம்
  • கட்டளைகொடுக்க — to give permission, grant privileges.
  • கட்டளைகேட்க — to obey an order.
  • கட்டளைக்கல் — a touch-stone.
  • கட்டளைச்சட்டம் — enactments, edicts and statutes.
  • கட்டளைபண்ண — to order, to command.
  • கட்டளை மீற — to violate an order.

Tamil Moli Akarathi (1928)

கட்டளை (kaṭṭaḷai)
  1. அளவு, உத்தரவு, உருவங்கள் வார்க்குங்கருவி, உரைதல், உவமை, ஒழுங்கு, கற்பனை, செங்கலச்சு, தடை, துலாராசி, நிறை, நிறையறி கருவி, முறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கட்டளை (kaṭṭaḷai) — noun
  1. < id
  2. Standard of measurement; அளவு. (பிங்.)
  3. Mould for making bricks; செங்கல் முதலியவற்றின் அச்சு. கட் டளை கோடித் திரியின் (அறநெறி. 56)
  4. Matrix in which anything is cast; mould; உருவங்கள் வார்க் குங் கருவி. (W.)
  5. Portrait, image, statue; ஒன் றைப்போல அமைக்கப்பட்ட உருவம். காட்டி வைத்த தோர் கட்டளைபோல (பெருங். உஞ்சைக். 33, 113)
  6. Similitude, likeness, resemblance; உவமை. (பிங்.)
  7. Balance, scales, weighing apparatus; துலாம். (பிங்.)
  8. Libra, a sign of the Zodiac; துலாராசி. (திவா.)
  9. Standard weight; நிறையறி கருவி. (பிங்.)
  10. Touchstone; உரைகல். சால்பிற் குக் கட்டளை யாதெனின் (குறள், 986)
  11. Fate; விதி. கட்டளைப் படிமையிற் பிழையாது (சீவக. 2752)
  12. Grade, rank; தரம். கட்டளை வலிப்ப . . . உதவி (பதிற்றுப். 81, 17)
  13. Way, method, manner; முறைமை. கயலைப் பொருத கண்ணாண் மேலும் வாழ்விக்குங் கட்டளையே (தஞ்சைவா. 333)
  14. Regularity, order, rule; ஒழுங்கு. வேதம் கட்டளைப் பட்டது (ஈடு, 6, 5, 8)
  15. Limit; எல்லை. கழுத்தே கட்டளையாக நீரை முகந்து (ஈடு, 5, 6, 8)
  16. Saddle, harness, and other equipment for a horse; குதி ரைக்குப்பூட்டும் பண். கட்டளைப் புரவி சூழ்ந்து (சீவக. 767)
  17. Community law; code of laws regulating the conduct of individual members of a caste or community; கட்டுப்பாடு. (ஈடு, அடைய. அரும்.)
  18. Treatise which presents within a small compass the fundamental principles of a religion; சமயமூலதத்துவம் உணர்த் தும் நூல். வேதாந்தக் கட்டளை
  19. Endowment for some special services in a temple, distinct from one for the general upkeep and maintenance of the institution (R. F.); கோயிற்கு ஒரு விசேஷங்குறித்து ஏற்படுத்தப்பட்ட தருமம். அபிஷே கக்கட்டளை
  20. Provision for the free feeding of a certain number of pilgrims in a temple or mutt; தேசாந்தரிக்கட்டளை
  21. Protection by fortification; அரண்காவல். கட்டளைப்பட்ட லங்கையென்கை (திவ். திருநெடுந். 20, வ்யா. 154)
  22. [T. kaṭtaḍa, K. kaṭṭaḷē.] Order, command, precept, direction, decree for execution, injunction, warrant; உத்தரவு
கட்டளை (kaṭṭaḷai) — noun
  1. Single field or parcel of fields in a village which is on the same level and is watered by a single channel; ஒரே வாய்க்கால் வழியாய் நீர்பாயும் சமநிலை மான வயற்பரப்பு. Loc
  2. Fulness; நிறைவு. (அக. நி.)

IndoWordNet

கட்டளை — noun
  1. ஒன்றைச் செய்யுமாறு அல்லது கீழ்ப்படியுமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு.
கட்டளை — noun
  1. ஒன்றைச் செய்யுமாறு அல்லது கீழ்ப்படியுமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு.
கட்டளை — noun
  1. யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொள்வது உருவாக்குவது அல்லது ஏதாவது ஒரு வேலை செய்வதற்காக கூறும் செயல்
கட்டளை — noun
  1. ஒன்றினை கடைபிடிப்பதற்காக தொடர்ந்து கூறப்படும் ஒரு வேண்டுகோள்

ஆணை பேச்சு சொல் அவசரச்சட்டம் அவசரப்பிரகடனம் இஸ்லாமிய தீர்ப்பு முகம்மதிய தீர்ப்பு நீதிமன்றகட்டளை நீதிமன்றஆணை நீதிபதி ஏவல் அவம் அவவாதம் ஆக்ஞை மகாநியோகம் அறிவிப்பு வேண்டுகோள்