குடுக்கை

தேங்காய் மூடி அல்லது பிற ஓடு போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சிறு பாத்திரம், குடுவை a small vessel made of coconut shell or a similar substance

Kudukai

Tamil Wiktionary

குடுக்கை
  1. தேங்காய் மூடி அல்லது பிற ஓடு போன்ற பொருட்களால் செய்யப்பட்ட

Winslow (1862)

குடுக்கை (kuṭukkai) — noun
  1. The earthen or wooden water-pot of an ascetic or a hermit, கமண்டலம். Wils. p. 227. KUD'IKA
  2. A cocoa-nut or other shell, used as a vessel, தேங்காய் முதலியவற்றின்குடுக்கை
  • சுரைக்குடுக்கை — The hard shell of the Lagenaria vulgaris, L. Bottle gourd.
  • வில்வக்குடுக்கை — The hard shell of the Ogle marmelos, Boel tree.
  • விளாங்குடுக்கை — The hard shell of the Feronia elephantum, L. Wood-apple tree.
  • வஞ்சகக்குடுக்கை — A vessel (person) of fraudulence.
  • வினைக்குடுக்கை — A man full of guile and devices.
  • தீக்குடுக்கை — A shell, a grenade, வெடிகுண்டு. (local.)

Fabricius (1972)

குடுக்கை — noun
  1. , குடுகு, s. the hard shell of some fruits used as a vessel
  2. the vessel of a beggar or ascetic, கமண் டலம்
  • சுரைக்குடுக்கை — the hard shell of a gourd.
  • தீக்குடுக்கை — a shell, bomb.
  • தென்னங்குடுக்கை — a cocoanut shell.
  • பொய்–வஞ்சக–க்குடுக்கை — a person full of lies; a downright lair.

Tamil Moli Akarathi (1928)

குடுக்கை (kuṭukkai)
  1. கமண்டலம், தேங்காய் முத லியவற்றின் குடுக்கை
குடுக்கை (kuṭukkai)
  1. ஒருவகைப்பாத்திரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குடுக்கை (kuṭukkai) — noun
  1. cf. kuṇḍikā. [T. guḍaka, K. kuḍike, M. kuṭukka.]
  2. Coconut or other hard shell used as a vessel; தேங் காய் முதலியவற்றாலான குடுவை
  3. Earthen or wooden pitcher of an ascetic; கமண்டலம்
  4. A hand drum; இடக்கையென்னும் தோற்கருவி. (சிலப். 3, 27, உரை.)
  5. Belly of a lute; வீணையின் உறுப்பு

IndoWordNet

குடுக்கை — noun
  1. துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்

கமண்டலம் கரண்டம் கரண்டை காண்டகம் குடிகை குடுவை குண்டிகை கெண்டிகை நீர்பெய்கலன் பாத்திரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குடுக்கை
  1. தேங்காய் முதலியவற்றின் குடுவை
  2. கமண்டலம்
  3. இடக்கையென்னும் தோற்கருவி
  4. வீணையின் உறுப்பு