கொட்டை

விரை; அண்டம் தாமரைக்கொட்டை பலா பூசணிகளின் பிஞ்சு

seed, pit, nut, stone, kernel large rounded form, as in writing testicles, balls

Tamil Wiktionary

கொட்டை — பெயர்ச்சொல் (Noun)
  1. விதை
  2. விரை; அண்டம்
  3. தாமரைக்கொட்டை
  4. பலா பூசணிகளின் பிஞ்சு
  5. உருண்டை வடிவம். கொட்டையெழுத்து
  6. மகளிர் தலையணிவகை
  7. கொட்டையிலந்தை
  8. ஆமணக்கு
  9. கொட்டைக்கரந்தை
  10. பாதக்குறட்டின் குமிழ்
  11. அலங்காரம் முதலியவற்றிற்காக ஆடைத்தும்பினைத் திரளமுடிந்த முடிச்சு
  12. ஆடைத்தும்பு
  13. கிடுகுதாங்கும் கால் முதலியவற்றின் தலைப்பகுதி
  14. யானையின் அணிவிசேடம்
  15. நூற்குங் கதிரின் கொட்டை
  16. பஞ்சுச் சுருள்
  17. காதுவளர்க்கும் திரி
  18. மகளிர் காதணி வகை
  19. சிறு தலையணை
  20. சும்மாடு

Winslow (1862)

கொட்டை (koṭṭai) — noun
  1. Seeds of any kind, not enclosed in chaff or husk; a nut, வித்து
  2. The stone, kernel or seed of a fruit, பழத்தின்கொட்டை
  3. Testicles, பீசம்
  4. Rolls of cotton or flax prepared for spinning, பஞ்சுக்கொட்டை
  5. A plug or tent of cloth to widen the hole in the ear for jewels, திரி
  6. A kind of female ear ornament, ஓர்காதணி
  7. The knob of a wooden sandal, பாதகுறட்டின்குமிழ்
  8. A pad for the head in carrying a load, சும்மாடு
  9. A bolster, a pillow; a cushion, தலையணை
  10. The pericarp of the lotus flower, with which the female body is compared for softness, தாமரைக்கொட்டை
  11. [prov.] The fruit buds of the jack tree, பலாப்பிஞ்சு
  • கொட்டைகட்ட — To gamble with இருப்பை seeds, ஓர்விளையாட்டு.
  • கொட்டைக்காய் — A seedy or stony fruit; any fruit the stones or seeds of which are large, or numerous, in proportion to the pulp.
  • கொட்டைக்கச்சி–கொட்டைக்கையில் — The half of a cocoanut shell. See கொட்டங்கைச்சி.
  • கொட்டைக்குவிட — To let a plant go to seed.
  • கொட்டைச்செத்தல்–கொட்டைத் தேங்காய் — A dry cocoanut in which the kernel rattles, கொப்பரைத்தேங்காய்.
  • கொட்டைநூற்க — To spin cotton, flax, &c. கப்பலோடிப்பட்டகடன் கொட்டைநூற்றுத்தீருமோ. Will the debt contracted by a ship merchant be paid by spinning cotton?

Fabricius (1972)

கொட்டை — noun
  1. a nut, the seed or stone of a fruit, வித்து
  2. a lock of cotton prepared for spinning, நூற்குங்கொட் டை
  3. a plug put in the ear laps to widen them
  4. the testicles, பீசம்
  5. the knob of a wooden sandal, குமிழ்
  6. a pillow, a cushion, தலை யணை
  7. a pad for the head to carry a load on, சும்மாடு
  8. the castor plant, ஆமணக்கு
  9. a gold ornament for women's hair
  • கொட்டைக்கச்சி–கொட்டங்கைச்சி — the shell of a cocoanut-see .
  • கொட்டைக்காய்ச்சி — a species of mango.
  • கொட்டைத் தேங்காய் — a dry cocoanut in which the kernal rattles.
  • கொட்டை நூற்க — to spin cotton.
  • கொட்டை போட — to place seeds in garden beds; 2. to form the fruit buds (as the jack tree); 3. to ruin, to destroy.
  • கொட்டைப்‌பாக்கு — an entire arecanut dried without boiling.

Tamil Moli Akarathi (1928)

கொட்டை (koṭṭai)
  1. ஒருகாதணி,ஒருமரம், சும மாடு, தலையணை, கொட்டைக் கரந் தை, நூற்குங்குட்டை, பாதக்குறட் டின் குமிழ், வித்து
கொட்டை (koṭṭai)
  1. ஓர்வகைக்காதணி, பாதக் குறட்டின்குமிழ், மாப்பலா முதலிய வற்றின்கொட்டை, வினைமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொட்டை (koṭṭai) — noun
  1. [T. K. Tu. koṭṭe, M. koṭṭa.] Seed of any kind not enclosed in chaff or husk, nut, stone, kernel; விதை. (பிங்.)
  2. [Tu. koṭṭe.] Testicles; அண்டம்
  3. Pericarp of the lotus flower; தாமரைக்கொட்டை. தாமரை வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல (பெருங். உஞ்சைக். 38, 258)
  4. Fruit-bud of the jack; very small green pumpkin; பலா பூசனிகளின் பிஞ்சு. Colloq
  5. Large rounded form, as in writing; உருண்டை வடிவம். கொட்டையெழுத்து
  6. A gold ornament for women's hair; மகளிர் தலையணிவகை
  7. See கொட்டையிலந்தை. (L.)
  8. [M. koṭṭa.] Castor-plant. See ஆமணக்கு
  9. See கொட்டைக்கரந்தை. (மலை.)
  10. Knob of wooden sandals; பாதக்குறட்டின் குமிழ். பவழக் கொட்டைப் பொற்செருப் பேற்றி (பெருங். மகத. 22, 202)
  11. Knots made of warp threads at the end of a cloth, as ornament, etc.; அலங்காரம் முதலியவற்றிற்காக ஆடைத்தும்பினைத் திரளமுடிந்த முடிச்சு. கொட்டைக்கரைய பட்டுடை நல்கி (பொருந. 155)
  12. Warp threads at the end of a cloth hanging loosely and not made into knots; ஆடைத்தும்பு. (பொருந. 155, உரை.)
  13. Head of a pole used as a prop; கிடுகுதாங்குங் கால்முதலியவற் றின் தலைப்பகுதி. மணிபுனை செம்பொற் கொட்டை (சீவக. 113)
  14. An ornament for elephant; யானை யின் அணிவிசேடம். பட்ட மடுத்த கொட்டையொடு (பெருங். மகத. 27, 75)
  15. Base of a hand-spindle; நூற்குங் கதிரின் கொட்டை
  16. Rolls of cotton prepared for spinning; பஞ்சுச்சுருள். கொட்டைத் தலைப்பால் கொடுத்து (திவ். பெரியாழ். 3, 5, 1)
  17. Plug or tent of cloth to widen the ear-holes for jewels; காதுவளர்க்குந் திரி. Loc
  18. A kind of ear-ornament for women; மகளிர் காதணிவகை. (பிங்.)
  19. Pad for the head in carrying a load; சும்மாடு. (W.)
  20. Small round pillow, cushion; சிறு தலையணை. பஞ்சின் நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பி (பதினொ. திருவிடைம. மும். 19)
கொட்டை (koṭṭai) — noun
  1. A kind of paddy; நெல்வகை. (தண். கன. பள். பக். 62.)

IndoWordNet

கொட்டை — noun
  1. பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

விதை அண்டம் அரலை பீசம் முத்து ��ித்து விரை செடி தாவரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொட்டை
  1. விதை
  2. தாமரைக்கொட்டை
  3. பலாப் பிஞ்சு
  4. உருண்டை வடிவம்
  5. மகளிர் தலையணி வகை
  6. கொட்டைக்கரந்தை
  7. பாதக் குறட் டின் குமிழ்
  8. ஆடைத்தும்பினைத் தரள முடிந்த முடிச்சு
  9. கிடுகு தாங்கும் கால் முதலிய வற்றின் பகுதி
  10. நூற்குங் கதிரின் கொட்டை
  11. பஞ்சுச் சுருள்
  12. யானையின் அணி விசேடம்
  13. சும்மாடு
  14. சிறு தலையணை
  15. நெல்வகை