சூடு

வெப்பம் சன்னம் செலுத்தப்பட்டமை - heat

heat, warmth, feverishness hot temper, anger that which is heated, burnt, roasted

Tamil Wiktionary

சூடு — பெயர்ச்சொல் (Noun)
  1. வெப்பம்
  2. சன்னம் செலுத்தப்பட்டமை

[object Object]

சுடு சூடாக்கு சூடாகு சூடேற்று சூடேறு சூடுபடுத்து சூடுவை படு பாடு விடு வீடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சூடு² (cūṭu) — noun
  1. Bundle of sheaves; அரிக்கட்டு. அகவய லிளநெல் லரிகாற் சூடு (பரிபா. 7, 27).
சூடு³ (cūṭu) — noun
  1. perh. சுடு-. [M. cūṭu.]
  2. That which is heated, burnt, roasted; சுடப்பட் டது. கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63)
  3. Burn, scald; சுடுபுண்
  4. [T. tcūḍu, M. cūṭu, Tu. cūḍu.] Heat, warmth, feverishness; வெப் பம். உடம்பு சூடாயிருக்கிறது
  5. Fomentation; ஒத்தடம்
  6. That which provokes; கோபமுண் டாக்குவது. அவன் வார்த்தை சூடாக இருக்கிறது
  7. Hot temper, anger; கோபம். அவன் சூடாக இருக் கிறான்
  8. Feeling, sensibility; உணர்ச்சி. எவ் வளவு சொன்னாலும் சூடில்லை. Loc
  9. Increase or enhancement, as of prices; விலையேற்றம். விலை சூடாயிருக்கிறது
  10. Opthalmia; கண்ணோய்வகை. கண்ணில் சூடு வளர்ந்திருக்கிறது
  11. [T. cūḍu, K. tūḍu.] Brand; சூட்டுக்குறி. கருநரைமேற் சூடே போல் (நாலடி, 186)
  12. Scar, callosity; வடு. பாடகஞ் சுமந்த சூடுறு சேவடி (பெருங். மகத. 8, 14)
சூடு⁵ (cūṭu) — noun
  1. cf. cūḍā
  2. Hair-tuft; குடுமி. கானிறை குஞ்சிச் சூட்டில் (திருவிளை. யானையெய். 25)
  3. Crest, comb; உச்சிக்கொண்டை

Winslow (1862)

சூடு (cūṭu) — noun
  1. (Gen. சூட்டு.) Heat, warmth, burn, scald, வெப்பம்
  2. Brand, scar from a burn, or scald, சுடுசூடு
  3. Fomentation, அனல், [ex சுடு, to burn.]
  4. Stack of rice- sheaves, or other grain-ricks, நென்முதலியவற்றின்போர்
  5. A sheaf of corn given to the washerman, barber, carpenter, &c., அரிக்கட்டு; [ex சூடு, v.] (c.) நீர்சூடாயிருக்கிறது. The water is hot. அவனுக்குச் சூடு கண்டிருக்கிறது. He has got strangury. His system is much irritated. சூட்டினாலுண்டானது. That which is produced by heat (in the body). சூட்டோடேசூடு. Repeated as hot applications
  6. While the thing is fresh
  • சூடடிக்க — To thrash the sheaves.
  • சூடுகாட்ட — To apply fomentations, to foment. 2. To hold near the fire. 3. To warm, to heat; to air-commonly at a fire. 4. To appear hot–as fever.
  • சூடுகாண — To become warm, as after a cold fit.
  • சூடுகொள்ள — To become heated, as the system by neglect of bathing; by working in chunam, in the sun, &c. 2. To become a little feverish.
  • சூடுசுட — To apply fomentations, to heat by external applications. 2. To brand animals. 3. To cauterize by fire.
  • சூடுண்க–சூடுண்ண — To be burnt. 2. fig. To be scolded. சூடுகண்டபூனையடுப்பங்கரைசேராது. A burnt at will not come near the hearth. சூடுண்டுமவனுக்குவெட்கமில்லை. Although he has been scolded, he has no shame.
சூடு (cūṭu) — noun
  1. , கிறேன், சூடினேன், வேன், சூட, v. n. To wear, commonly on the head, அணிய. (c.)
  2. To be crowned, crested, to adorn one's self, கிரீடஞ்சூட. (p.)
  3. To bear, sustain, be invested with a name, நாமஞ்சூட
  4. v. a. (coast usage.) To brand cattle, brand as a medical operation, மாடுமுதலியவற்றைச்சுட
  • சூடினமாடு — A branded animal. (R.) கொண்டைக்குப்பூச்சூட, inf. To deck a woman's tuft of hair with flowers.
  • மாலைசூட — To put on a garland. 2. To marry, விவாகம்பண்ண.
  • சூடி — One crowned–as பிறையதுசூடி, Siva adorned with the crescent–கொன்றைசூடி. One adorned with கொன்றை wreath.
  • சூடுகயிறு — [com. சூடிக்கயிறு.] A twine made of choir used for tying the bamboo வரிச்சல் for a house to be tiled.
  • சூடல்–சூடுதல் — Putting on jewels, &c. 2. Branding.

Fabricius (1972)

சூடு — noun
  1. heat, warmth, வெப்பம்
  2. a burning or brand
  3. a sheaf, a bundle of rice-corn given to the barber, washerman etc., அரிக்கட்டு
  4. fomentation, ஒத்தடம்
  5. scar, callosity, வடு
  6. (Sans.) hair tuft, crest
  • சூடுகண்ட பூனை அடுப்படி செல்லாது — "", "a burnt child dreads the fire."
  • சூடடிக்க — to thrash the leaves.
  • சூடுகாட்ட — to foment, to warm, to heat, to appear hot (as fever).
  • சூடுகொள்ள — to become heated or feverish.
  • சூடுண்டவன் — one marked with a brandiron.
  • சூடுபோட–வைக்க — to brand cattle.
சூடு — v. t.
  1. v. t. brand cattle
  2. wear, bear, அணி
  3. adorn oneself, be crowned, கிரீடஞ்சூடு; v. i. spread or cover, பரவு
  4. surround, கவி
  • நாமஞ்சூட — to be invested with a name.
  • மாலைசூட — to wear a garland, to marry.
  • முடிசூட — to wear a crown or diadem.
  • சூடல்–சூடுதல் — putting on jewels etc; 2. branding.

Tamil Moli Akarathi (1928)

சூடு (cūṭu)
  1. அரிக்கட்டு, உச்சிகுடுமி, ஏருத்து த்திமில், சுடுதல், சூடுதல், சூடென் னேவல், சேவற்சூடு, தலை, நுனி, நெ ன் முதலியவற்றி னருவிக்குவியல், ம யிற்சூடு, முடி, வெடி, வெப்பம்
சூடு (cūṭu)
  1. சந்தாபம், தாபிதம், தூபிதம்
சூடு (cūṭu)
  1. சூடுதல், சூடென்னேவல், நென்மு தலியவற்றினரிக்குவியல், வெப்பம்

IndoWordNet

சூடு — noun
  1. சூரியன், நெருப்பு போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சக்தி.
சூடு — noun
  1. சூரியன் முதலியவற்றிலிருந்து கிடைப்பது போன்ற சக்தி அல்லது உடல் உணரும் உயர்நிலை உஷ்ணம்
சூடு — verb
  1. நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்

வெப்பம் உஷ்ணம் புழுக்கம் பொருள் திரவப்பொருள் அணல் செருகு வை நுழையச்செய் புகுத்தச்செய் பூரச்செய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சூடு
  1. வெப்பம்
  2. அரிக்குவியல்
  3. சுடப்பட்டது
  4. சுடுபுண்
  5. சூட்டுக்குறி
  6. ஒற்றடம்
  7. கோபமுண் டாக்குதல்
  8. கோபம்
  9. உணர்ச்சி
  10. விலையேற் றம்
  11. கண்ணோய்வகை
  12. வடு