வீடு
இல்லம் குடில்; குடி மறுப் பிறவியின்மை
house, abode, habitation room zodiac sign
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வீடு¹ (vīṭu) — noun
- Leaving; விடுகை. நட்டபின் வீடில்லை (குறள், 791)
- Emancipation, freedom, liberation; விடுதலை. நெடுங்கை விலங்கின் வீடுபெறல் யாதென (பெருங். நரவாண. 3, 107)
- Freedom from the bondage of karma; வினைநீக்கம். வீடெனப்படும் வினைவிடு தல் (சீவக. 2846)
- Completion; settlement; end; முடிவு. (பிங்.)
- Dissolution of the universe; சங்காரம். நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு (திவ். திருவாய். 8, 10, 6)
- Creation; சிருட்டி. (திவ். திருவாய். 8, 10, 6, பன்னீ.)
- Heaven, as the final release or liberation; மோட்சம். வீடுடையா னிடை (திவ். திருவாய். 1, 2, 1)
- Svarga, Indra's heaven; சுவர்க்கம். வீரிய ரெய்தற் பால வீடு (பு. வெ. 8, 30)
- House, habitation, abode; மனை. வீடறக் கவர்ந்த (பு. வெ. 3, 15, கொளு)
- (Astrol.) Zodiacal sign; இராசி. Loc
- Squares, as of a chess board; சதுரங்கத்தில் காய்களிருத்தற்கு உரிய தானம். Loc
- Winning place or goal in a board of an indoor game; கட்டாட்டத்திற் பழமெடுத்தற்குரிய இடம்
- Clearing nut tree. See தேற்றா. காழிருள் வீடும் (பெருங். உஞ்சைக். 41, 33)
- A cant term signifying one; ஒன்றைக் குறிக்குங் குழூஉக்குறி. (தைலவ.)
Winslow (1862)
வீடு (vīṭu) — noun
- [gen. வீட்டின்.] A house, habitation, abode, மனை
- Emancipation from births, separation, heavenly felicity. மோட்சம்; [ex வீடு, v.]
- [in astrol.] A constellation, or house of a planet, கிரகவீடு
- (p.) Leaving, விடல். வீடுபோவென்கிறது. The house -life says go thou; see under காடு
- வீடாவழி–வீட்டுக்குவீடு — From house to house.
- வீடுகுடிபுக — To engage a house, &c. See குடிபுக.
- வீடுங்கூடமும் — The main and side rooms of a Hindu house.
- வீடுதூங்கி — A hanger on, a sponger.
- வீடுபெயர–வீடுபெயர்க்க — To remove one's residence or abode.
- வீடுபேறு — Obtaining heaven, as முத்திப்பேறு. (p.)
வீடு (vīṭu) — verbal noun
- , கிறேன், வீடினேன், வேன், வீட, v. n. To die, சாக
- v.a. To let, or leave, off, விட. (p.)
- வீடல் — Dying, சாகல். (சது.) 2. Leaving, as விடல்.
Fabricius (1972)
வீடு — noun
- a house, இருப்பிடம்
- emancipation from births, heavenly felicity, மோட்சம்
- constellation or a house of a planet
- leaving, விடல்
- வீடுகட்ட — to build a house.
- வீடு குடிபுக — to engage a house etc.
- வீடு தூங்கி — a hanger-on, a sponger.
- வீடு–முத்திப்–பேறு — obtaining heaven.
- வீடும் விளக்குமாய்வைக்க — to provide one a living.
- வீடெடுக்க — to lay the foundation of a building.
வீடு — v. i.
- v. i. die, சா; v. t. leave, விடு.
- வீடல் — dying; 2. leaving.
Tamil Moli Akarathi (1928)
வீடு (vīṭu)
- ஒன்று, மனை, மோக்கம், விடுதல் வீடென்னேவல்
வீடு (vīṭu)
- அகம் அகாரம், அரண்மனை, இடம், இடவகை, இல், இல்லம், உரையுள் கிருகம், குலம், கேகம், கோவில், சத னம், சரணம் சேர்பு, தாமம், நகர், நியாயம், நிகேதனம், நிசாந்தம் நிவே சனம் பதி, பவனம், பாத்தி மாளிகை, வசதி, வயின் இவற்றுட் பார்ப்பார் வீடு அகாரம்
வீடு (vīṭu)
- மனை, மோக்கம், வீடென்னேவல்