செவி
ஒலியை கேட்டுணரும் உடல் உறுப்பு, புலன்; காது ஐரோப்பிய மொழிகள் ஆங்கிலம்: ear
ear
Winslow (1862)
செவி (cevi) — noun
- Ear, காது
- Hearing, audience, கேள்வி
- Auricle of the ear, காதுத் துவாரம். செவியுஞ்செவியுமறியாமல். Not known to different ears; a secret
- செவிகிள்ள — To pinch the ear.
- செவிகொடுக்க — To give ear, attend, listen. (c.)
- செவிகொள்ள — To take into one's ears, to listen. (p.)
- செவிக்கின்பம் — That which is pleasant to the ear, as gratifying sounds, good discourse, &c.
- செவிக்குணவு — That which is pleasant to the ear, as instructive discourse, &c. (lit.) food for the ear. (குற.)
- செவிக்குத்து — Pain in the ear.
Fabricius (1972)
செவி — noun
- the ear, காது
- hearing, கேள்வி
- செவி கேளாதவன்–செவியிலி — a deaf person.
- செவிகொடுக்க–கொள்ள — to give ear, attend, listen.
- செவிக்குணவு — an instructive discourse, as pleasing to the ear.
- செவிசாய்த்தருள — to incline the ear, to hear.
- செவி தின்கிறவன் — a whisperer, an evil speaker.
- செவிக்கேற–க்கெட்ட — to come to one's ears, to be heard.
Tamil Moli Akarathi (1928)
செவி (cevi)
- காது, அது பஞ்சபொறியினால் ஒன்று, கேள்வி
செவி (cevi)
- அள், காது, கேள்வி, சுருதி, கன் னம், சோத்திரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செவி¹ (cevi) — noun
- cf. šravas. [T. M. cevi, K. kivi, Tu. kevi.]
- Ear; காது. ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே (தொல். பொ. 582)
- Hearing; கேட்கை. (சூடா.)
- Ear-shaped handle of a vessel; பாத்திரத்தின் காதுவளையம். விழுத்தகு மணிச் செவி . . . படியகம் (சீவக. 2472)
- The screw of a lute; வீணையின் முறுக்காணி. Loc
செவி² (cevi) — noun
- cf. செவிடு. A unit of rainfall 1 inch; ஓரங்குல மழை.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
செவி
- காது
- கேட்கை
- பாத்திரத்தின் காது