தலை

தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் ஒன்று சேரும் இடம் அடங்கிய உறுப்பு. முதல் (பிங்.) head, first -

head that which is first, best, highest leader, head

Tamil Wiktionary

தலை
  1. தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் ஒன்று சேரும் இடம் அடங்கிய உறுப்பு.
  2. முதல் (பிங்.)

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

தலைமை தலைவன் தலைவி தலைவர் தலைப்பு தலையாய சிறந்த தலையாட்டி பொம்மை தலையெழுத்து தலைமுறை தலைவலி தலைமுடி தலைவிதி தலைக்கனம் தலைக்கருவம் தலைப்பிள்ளை தலைச்சன் தலைச்சன் பிள்ளை பிரசவம் தலைக்கொள்ளி தலைச்சீவுதல் தலைவாருதல் தலைவாசல் தலைவாயில் தலைச்சுழி தலைச்சுற்று தலைவாங்கல் தலைக் கொய்தல் தலையங்கம் தலைப்பரட்டை தலைச்சுருட்டை தலைச்சுருளி தலைச்சூடி தலைமகன் தலைமகள் தலைக் குடிமகன் தலைக் குடிமகள் தலைமைச் செயலர் தலைமைச் செயலகம் தலைமை அலுவலர் தலைமை அலுவலகம் தலைமையகம் தலைச்சுமை தலைக்கட்டு தலைநிமிர்தல் தலையெடுத்தல் தலையீடு தலையிடுதல் தலைப்பின்னல் தலையாரி தலையிடி தலைப்பாகை தலைவிரிக் கோலம் தலைத் தீபாவளி பெருந்தலை கவசம் தறுதலை ஒருதலைக் காதல் தலைகொடு தலைவாழையிலை தலைமாடு தலைமாட்டு தலைக்கவசம் தலைநகரம் தலைநகர் தலை தூக்குதல் தலைகீழ் உச்சந்தலை அஞ்சல் தலை தலையணை சீத்தலை சாத்தனார் தபால் தலைவு நுண்பொருட்பேறு

Winslow (1862)

தலை (talai) — noun
  1. Head, சிரசு
  2. Chief, principal. தலைமை
  3. (fig.) A leader, தலைவன்
  4. Origin, beginning, source, commencement, ஆதி
  5. Priority, precedence, superiority, பெருமை
  6. Point, top, end, apex, summit, நுனி. (c.)
  7. Place, location, position, site, இடம்
  8. The air, the etherial regions, ஆகாயம்
  9. Space, surface, expanse, விரிவு
  10. Prong of a trident fork, சூலமுதலியவற்றின்றலை
  11. A form of the ablative of place, ஏழனுருபு. தலைக்கொருபணங்கொடு. Give each one a fanam. தலைநில்லாப்பருவம். The time when the head cannot support itself; i. e. infancy. தலைக்குத்தலைபெரியதனம். Every one is master. தலைமறைவாயிருக்கிறான். He hides his head–is concealed. தலையிலைகடை. Beginning, middle and end. தலையாலேநடக்கிறான். He acts proudly, insolently, wickedly, &c. அவனுக்குத்தலைப்பத்தா. Has he ten heads? Is he equal to ten men? பெருந்தலைகளெல்லாமொன்றாய்கூடின. The great heads, big-wigs, are all collected together. தலையாலேமலைபிளப்பான். He would cleave a mountain with his head
  • தலைகட்ட — To tie the hair. 2. To make selvedge of mats, cloth, &c.
  • தலைகவிழ–தலைகவிழ்க்க — To hang the head , either naturally, or through shame. See கவிழ், v.
  • தலைகனத்துக்கொள்ள–தலைகனக்க — See கன, v.
  • தலைக்கனம் — Heaviness in the head.
  • தலைகாட்ட — To show the head, as a snake out of a hole. 2. To attend a festive ceremony, for a short time, out of respect. தலைகாட்டாதேஓடிப்போ. Don't step here, better go.
  • தலைகீழ் — Upside-down, topsy-turvy, inverted, out of order.

Fabricius (1972)

தலை — noun
  1. the head, சிரசு
  2. beginning, ஆதி
  3. priority, superiority, பெருமை
  4. top, summit, நுனி
  5. place, location, இடம்
  6. the etherial regions, ஆகாயம்
  7. space, surface, expanse, விரிவு
  8. prong of trident fork, சூலத்தலை
  9. a form of the 7th case, ஏழனுருபு
  • தலைகீழாய் — topsy-turvy, confusedly.
  • தலைகீழாய் நடக்க — to do things in a wrong way, to be haughty and insolent.
  • தலைகுனிய — to incline the head, to pay respect.
  • தலைக்கடை — front gate or entrance, ( புழக்கடை).
  • தலைக்கட்டு — the first of a range of houses, the front division of a house; 2. the ceremony of putting on the turban again after the first stage of mourning; 3. the head of a family.
  • தலைக்கட்ட–கட்டிக்கொள்ள — to perform the ceremony of putting the turban again upon the head after mourning.

Tamil Moli Akarathi (1928)

தலை (talai)
  1. அதிகாரம், ஆகாயம், ஆதி, இடம், ஏழாம்வேற்றுமையுருபு, ஓராள், சிர சு, தலைவன், தலைமை, திசை, நுனி, பெருமை, முதல்
தலை (talai)
  1. உச்சி, உத்தமாங்கம், உவ்வி, கம், சிகரம், சிரம், சீரிடம், சென்னி சேக ரம், நாவிரம், மத்தகம், முடி முண்டம் மூர்த்தம், மூர்த்தினி, தலையோட்டி ன்பெயர்-ஓடு, காபலம், வெண்டலை தலையோட்டுப் பொருத்து-கரோடி தலையிற்றரிப்பதின் பொது-சேகரம், தலைச்சாத்து
தலை (talai)
  1. ஆகாயம், ஆதி, இடம், தலை, தலை மை, பெருமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலை¹ (talai)
  1. , [T. M. tala, K. tale.] n
  2. Head; சிரம். (சூடா.)
  3. That which is first, best, highest; சிறந்தது. தலையே தவமுயன்று வாழ்தல் (நாலடி, 365)
  4. Person of highest quality and rank; உயர்ந்தோன். தலையெலாஞ் சொற்பழி யஞ்சி விடும் (நாலடி, 297)
  5. Leader; husband; தலை வன். தலையிழந்த பெண்டாட்டி (ஏலாதி, 78)
  6. Origin, beginning, source, commencement; முதல். (பிங்.) உயர்ந்தோர் தலையா விழிந்தோ ரீறா (பெருங். வத்தவ. 2, 51)
  7. Top, apex; உச்சி. தலையு மாகமுந் தாளுந் தழீஇ (கம்பரா. ஆற்றுப். 6)
  8. End, tip; நுனி. தலைவிரல் தாக்க (கல்லா. 8)
  9. Finish, close; முடிவு. தலைவைத்த காப்பு விஞ்சை (சீவக. 1881)
  10. Resemblance; ஒப்பு. (பு. வெ. 4, 12, உரை.)
  11. Sky, ethereal region; ஆகாசம். (பிங்.) தலையின் மின் கறுத்ததென்ன (அரிச். பு. சூழ்வினை. 5)
  12. Unit, person, hand; ஆள். தலைவரி
  13. Postage stamp, as bearing the figure of a king's head; தபாற்கடிதத்தில் ஒட்டும் முத்திரைத்தலை. Mod
  14. Skull; சிரக்கபாலம். தலைக்கலத் திரந்தது (கம்பரா. சடாயுவு. 195)
  15. Hair; தலைமயிர். தலையவிழ்ந்து கிடக்கிறது
  16. (Gram.) Word used as a locative case-suffix; ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. முன் னிடை கடைதலை (தொல். சொல். 77). — adv. In addition to; மேலே. அதன்றலை . . . சான்றோர் பலர்யான் வாழு மூரே (புறநா. 191). — part. Prefix with the force of preposition; வினைகட்கு முன் வரும் ஓர் இடைச்சொல். (பி. வி. 45.)
தலை (talai) — noun
  1. prob. sthala. Place; இடம். நனந்தலை நல்லெயில் (புறநா. 15).