நடை

1)way, 2)path, 3)walk நட - நடை நடைமுறை, நடைபாதை, நடைவண்டி, நடைப்பயிற்சி, , நடையழகு,

walk, walking way, path, route, road gait, bearing

Tamil Wiktionary

நடை — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

நட நடைமுறை நடைபாதை நடைவண்டி நடைப்பயிற்சி நடையழகு தாரை trail மேடை platform நடைபெறு கால்நடை நன்னடை உரைநடை மணிபிரவாள நடை எழுத்து நடை பேச்சு நடை பீடுநடை ஏறுநடை வெற்றிநடை பொடிநடை

Winslow (1862)

நடை (naṭai) — noun
  1. Walk, act of walking, நடப்பு
  2. Gait, mode of walking or going, pace, ஒயில்
  3. Journey, voyage பிரயாணம்
  4. Turn, time or bout, as once, twice, &c., முறை
  5. Entrance to a house, commonly between two raised verandahs, நடைகூடம்
  6. Conduct, behavior, course of actions, career, good or bad manners, ஒழுக்கம்
  7. Fluency in reading, வாசிப்பினோட்டம். (c.)
  8. Succession, series of letters in a word, words in a sentence, ஏழுத்துநடைசொல்நடை
  9. Style or usage in language, idiom, பாஷைநடை
  10. Custom, usage, fashion, வாடிக்கை
  11. Properity, influence, செல்வம்
  12. Way, road, route, வழி
  13. A dance, கூத்து
  14. Course of a planet, கிரகநடை
  15. Passage, transit, progress, motion, செல்லுகை. நடைநடையாய்வந்தான். He came without delay. கால்நடையாய்ப்போனான். He went on foot. வண்டி பாரமேற்றிக்கொண்டுமூன்றுநடையாய்வந்தது. The wagon taking in a load went three times. அன்னநடைநடக்கப்போய்க்காகந்தன்னடையுங்கெட்டது. The crow affecting the gait of the Swan lost even its own gait; i. e. affectation is ridiculous
  • நடைகாயம் — A composition of vegetable stimulants continued for some months by a woman after confinement. (c.)
  • நடைகிணறு — A well with steps down, as நடைபாவி.
  • நடைகுறைய — To decrease as a person's activity in walking, &c., 2. To diminish, as prosperity, influence, &c.
  • நடைகூடம்–நடைக்கூடம் — As நடை, 5. 2. The vestibule of a palace.
  • நடைகூலி–நடைக்கூலி — Hire or pay for walking to a place (to do a work, &c.)
  • நடைக்காவணம் — A shed with a flat roof into which the idol is taken to rest after passing round in procession.

Fabricius (1972)

நடை — noun
  1. walk; நடப்பு
  2. pace, gait, mode of walking, ஒயில்
  3. turn, time (as in ஒரு நடை, once), முறை
  4. the entry of a house, passage, நடைகூடம்
  5. conduct, behaviour, ஒழுக்கம்
  6. style, idiom, usage, பாஷைநடை
  • சுறுக்கான நடையாய் நடக்க–நடை நடையாய் நடந்தான் — to go at a quick pace. , he re- peatedly visited the place.
  • படகு மூன்று நடை வந்தது — the boat has made three trips.
  • நடைகாயம் — a composition of vege- table stimulants given to a woman for some months after confinement.
  • நடைகிணறு–வாவி–பாவி — a well with steps down.
  • நடைக்காவணம் — a shed for an idol to rest after the procession.
  • நடைக்கு நடை — from turn to turn, from time to time.

Tamil Moli Akarathi (1928)

நடை (naṭai)
  1. ஒழுக்கம், கூத்து, செலவு, செல் வம், தொடர்பு, நடத்தை, பழக்கம், முறை, வழக்கம், வழி, வாயிற்கடவை
நடை (naṭai)
  1. ஒழுக்கம், கதி, சாரம், அன்றியு மாறாநடையின் பெயர், சதாகதி
நடை (naṭai)
  1. ஒழுக்கம், கூத்து, செல்வம், வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நடை (naṭai) — noun
  1. < நட-
  2. [T. naḍa, K. naḍe, M. naṭa.] Walk, act of walking; காலாற் செல்கை. கோலூன்றிச் சோர்ந்த நடையினராய் (நாலடி, 13)
  3. Motion, course, as of a planet; கிரகம் முதலியவற்றின் கதி
  4. Journey; பிரயாணம். (W.)
  5. Gait, mode of walking or going, pace; அடிவைக்குங் கதி. விடைபொரு நடையினான் (கம்பரா. எழுச்சி. 10)
  6. [M. naṭa.] Way, route, road; வழி. (பிங்.)
  7. Gate; வாசல். இனி நீ என் நடையில் வந்து மிதிக்காதே
  8. Corridor, vestibule; இடை கழி. அரக்கர் கிடைகளு நடைகளு (இராமநா. சுந். 3)
  9. Gangway; கப்பலேறும் வழி
  10. [K. naḍe, M. naṭa.] Conduct, behaviour, career; ஒழுக்கம். நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே (புறநா. 312)
  11. Custom, usage, fashion; வழக்கம்
  12. Style in language; பாஷையின் போக்கு. ஒன்றல் லவை பல தமிழ்நடை (காரிகை, செய். 4, உரை)
  13. Fluency in reading; வாசிப்பினோட்டம். (W.)
  14. Nature; இயல்பு. என்றுங் கங்குலா நடையதோரிடம் (சேதுபு. கந்தமா. 69)
  15. Foot; அடி. பகட்டா வீன்ற கொடுநடைக் குழவு (பெரும்பாண். 243)
  16. Dance, dancing; கூத்து. (சூடா.)
  17. Occupation; தொழில். மாயோனிகளாய் நடைகற்ற வா னோர் பலரும் முனிவரும் (திவ். திருவாய். 1, 5, 3)
  18. Wealth; செல்வம். (சூடா.)
  19. Religious or moral treatise; ஒழுக்கநூல். நன்றாக நடை பலவு நவின்றார்போலும் (தேவா. 722, 11)
  20. Daily worship in a temple; நித்தியபூசை. நடையும் விழ வொடு நாடொறு மல்குங் கழுமலத்துள் (தேவா. 152, 8)
  21. Temple; கோயில். (T. A. S. iv, 8.)
  22. Turn, time; தடவை
  23. Long time; நீண்ட நாள். நடைப்பிணியா யிருக்கிறான். Tinn
நடை (naṭai) — noun
  1. Pandal erected throughout the route of a procession; நடைப் பந்தல். நடைநிழ லவைகெட (இரகு. திக்குவி. 82).

IndoWordNet

நடை — noun
  1. கால்களை சீரான நேர அளவில் மாற்றி மாற்றி வைத்து நகர்தல்

பயணம் பிரயாணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நடை
  1. காலாற் செல்லுகை
  2. பயணம்
  3. வைக்குங் கதி
  4. வாசல்
  5. இடைகழி
  6. ஒழுக்கம்
  7. வழக்கம்
  8. நீண்டநாள்
  9. நடைகூடம்
  10. இயல்பு
  11. அடி
  12. கூத்து
  13. தொழில்
  14. செல்வம்
  15. ஒழுக்க நூல்
  16. நித்தியபூசை
  17. கோயில்
  18. கோள் முதலிய வற்றின் சுதி
  19. கப்பல் ஏறும் வழி
  20. மொழியின் போக்கு
  21. வாசிப்பின் நோட்டம்
  22. தடவை