நீதி
Winslow (1862)
நீதி (nīti) — noun
- Equity, righteousness, justness, justice, நியாயம்
- Reasonableness, propriety, தகுதி
- Law, பிரமாணம்
- Right conduct, morality, நன்னெறி
- Established custom, முறைமை
- Truth, உண்மை. W. p. 484. NEETI. (c.)–For the compounds compare with நியாயம்
- நீதிகெட்டவன் — An unjust man.
- நீதிகேடு — Injustice, immorality, unlawfulness, illegality.
- நீதிகேட்க–நீதிவிசாரிக்க–நீதிவிளங்க — To hear or try cases for judgment.
- நீதிசாஸ்திரம் — Law, polity, jurisprudence, &c., as நீதிநூல்.
- நீதிசாரம் — A work on morals in Sanscrit, ஓர்நீதிநூல்.
- நீதிஸ்தலம் — Court of justice, judgment seat.
Fabricius (1972)
நீதி — noun
- justice, நியாயம்
- ethics, morals, right conduct, சன்மார்க்கம்
- law, பிரமாணம்
- (chr. us.) righteousness, தர்மம்
- நீதிக்கேடு — injustice.
- நீதிகேட்க–விசாரிக்க — to hear or try cases for judgment.
- நீதிசாஸ்திரம் — a law-book, the law, jurisprudence.
- நீதிஸ்தலம் — a court of justice.
- நீதிநியாயமாய் — according to justice and reason.
- நீதிநெறி — rules of morality, morality.
Tamil Moli Akarathi (1928)
நீதி (nīti)
- நியாயம், முறைமை, மெய்
நீதி (nīti)
- கடம், செங்கோல், தருமம், நடு நயம், நியாயம், நீதம், நெறி, மறியா தம்
நீதி (nīti)
- நியாயம், மெய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீதி (nīti) — noun
- < nīti
- Equity, justice; நியாயம். நீதியாவன யாவையு நினைக்கிலேன் (திருவாச. 26, 2)
- Discipline; முறைமை. கட்டமை நீதிதன்மேற் காப்பமைந்து (சீவக. 1145)
- Right conduct, morality; ஒழுக்கநெறி. நீதியா லவர்கடம் மைப் பணிந்து (பெரியபு. தடுத்தாட். 197)
- Truth; மெய். (பிங்.)
- Conformity with the ways of the world; உலகத்தோடு பொருந்துகை. (குறள் 97, உரை.)
- Nature; இயல்பு. ஊர்தியிற் சேறலு நீதி யாகும் (நம்பியகப். 83)
- Law; தருமசாஸ்திரம். உணர்ந்தாய் மறைநான்கு மோதினாய் நீதி (திவ். இயற். 2, 48)
- That which guides; நடத்துவது. (சி. போ. பா. பக். 20, சுவாமிநா.)
- Means, contrivance; உபாயம். உலகமெல்லா மாண்டிட விளைக்கு நீதி (சீவக. 755)
- Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக். 21.)