சட்டம்

சட்டம் - கட்டுபாடுகள், விதிமுறைகள் (ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றுப்பட்டு வாழக்கூடிய மக்கள் தங்களுக்குள் எவ்வித சண்டை, சச்சரவுகளும் ஏற்படக் கூடாது என்பதற்காக தங்களுக்கு தாங்களே விதித்து கொள்கின்ற கட்டுப்பாடுகளுக்கு சட்டம் என்று பெயர்) மரச்சட்டம்

rule, order, law, act, condition, regulation, especially written wooden frame perforated metallic frame for drawing

Tamil Wiktionary

சட்டம்
  1. மரச்சட்டம்
  2. கம்பியிழுக்குங் கருவி
  3. நகையின் உம்மச்சு
  4. எழுதும் ஓலை
  5. எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம்
  6. நியாய ஏற்பாடு
  7. செப்பம்
  8. நேர்மை
  9. ஆயத்தம்
  10. காண்க..புனுகுச்சட்டம்
  11. புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள்
  12. மாணிக்கவகை

ஒழுங்கு law order சட்டக்கல்லூரி சட்டமன்றம் சட்டசபை சட்டச்சிக்கல் ஊரடங்கு சட்டம் இந்தியத் தண்டனைச் சட்டம் அச்சகச் சட்டம் எழுதாச்சட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சட்டம் (caṭṭam) — noun
  1. Wooden frame; மரச்சட்டம்
  2. Perforated metallic frame for drawing wire; கம்பியிழுக்குங் கருவி
  3. Socket in a jewel for insetting gems; நகையின் உம்மச்சு
  4. Ola used for writing; எழுதும் ஒலை
  5. Plan, model; எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம்
  6. Rule, order, law, regulation especially written; நியாய ஏற்பாடு. சட்டஞ்செய் துலகைத் திட்டஞ் செய் பவர்போல் (புலவராற்.)
  7. Excellence, superior quality; செப்பம். சட்டமாதவன் (விநாயகபு. 67, 20)
  8. Exactness, precision, accuracy, neatness, nicety, propriety; நேர்மை. சட்டமாய்ப் பேசி (இராமநா. உயுத். 53)
  9. cf. siddha. Readiness; ஆயத்தம். Loc
  10. Sac or gland in the anal pouch of the civet cat. See புனுகுச்சட்டம்
  11. Fluid extracted from the sac of a civet cat; புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள்
  12. A kind of ruby; மாணிக்கவகை. மாணிக்கம் சட்டமும் இலைசுனியும் ஒன்றும் உட்பட (S. I. I. ii, 430, 32)

Winslow (1862)

சட்டம் (caṭṭam) — noun
  1. A wooden frame, மரச்சட்டம்
  2. Rule, order, regulation, especially written rule, &c., ஏற்பாடு
  3. A copy, commonly a double ola, either written or intended for writing, ஏழுதுஞ்சட்டம்
  4. Exactness, precision, accuracy, neatness, nicety, propriety, திட்டம்
  5. Formula, plan, model, delineation, projection, மாதிரிச் சட்டம்
  6. Bag in the civet cat, புனுகு சட்டம். (c.) இப்பொழுது புதுச்சட்டமாய் நடக்கிறது. Matters are now ordered according to a new rule. இதுசட்டமாயிருக்கிறது. This is neat and fine
  • சட்டப்பலகை — Board frames. 2. A flat ruler.
  • சட்டந்தைக்க — To frame, to put or nail on a frame.
  • சட்டந்திருத்த — To correct writing. (R.) 2. To amend an act, a regulation, &c.
  • சட்டங்கட்ட — To regulate. 2. To appoint one to manage a thing.
  • சட்டதிட்டம் — Accuracy, preciseness. 2. Code of regulation. (c.)
  • சட்டங்கொழிக்க — To talk in a high strain. (R.)

Fabricius (1972)

சட்டம் — noun
  1. a wooden frame of a window, picture, etc, மரச்சட்டம்
  2. a rule, order, ஏற்பாடு
  3. exactness, neatness, plan, model, formula, திட்டம்
  4. a copy written by pupils, எழுது மோலை
  5. sac or gland in the anal pouch of the civet cat; the fluid from the sac
  6. excellence, superiority
  7. a kind of ruby
  • அந்த ஊர்ச் சட்டம் அப்படி — such is the fashion or custom of that place.
  • அவன் வைத்ததே சட்டம்–அவன் இட்டதே சட்டம் — his word is law and gospel.
  • சட்டங்கட்ட–பண்ண — to fix a rule, regulate order.
  • சட்டங் கொழிக்க — to talk in a high strain, to talk big words.
  • சட்டசபை–ஸபை–நிரூபண சபை–சட்ட நிர்மாண ஸபை — legislative council, .
  • சட்டதிட்டம் — accuracy, code of regu- lation.

Tamil Moli Akarathi (1928)

சட்டம் (caṭṭam)
  1. ஏழுதுமோலை, கட்டளைத்திட் டம், கட்டில் முதலியவற்றின் சட் டம், திருத்தம், நாவிச்சட்டம், பூர ணம்
சட்டம் (caṭṭam)
  1. கதவிற்பலகை, திட்டம்

IndoWordNet

சட்டம் — noun
  1. அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப் பட்டிருக்கும் விதி.
சட்டம் — noun
  1. மக்களின் நலனுக்காக வகுக்கப்பட்ட நெறிமுறை
சட்டம் — noun
  1. கண்ணாடி, கதவு முதலியவை பொருந்துமாறு கட்டைகளை இணைத்துச் செய்யப்படும் சதுர அல்லது செவ்வக வடிவ அமைப்பு
சட்டம் — noun
  1. வரி, கட்டணம் முதலியவை செலுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் அல்லது ஒரு நிறுவனம் போன்றவை அதிகாரபூர்வமாக அறிவித்தல்
சட்டம் — noun
  1. ஒன்றின் கீழ் இருக்கும் ஒரு சிறிய விதி

விதி வழிமுறை நியமம் நிபந்தனை விதிச்செயல் நிறுவனம் ஸ்தாபனம் கொள்கை கோட்பாடு கருத்து அரசியல்சட்டம் உபவிதி குற்றவியல்சட்டம் நீதி வேதபுத்தகம் புனிதநூல் அனைக்காந்தக்ஹேது கலைப்பொருள்கள் வாசல் வாசற்படி நிலப்படி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சட்டம்
  1. மரச்சட்டம்
  2. கம்பியிழுக்குங் கருவி
  3. நகையின் உம்மச்சு
  4. மேல்வரிச் சட்டம்
  5. ! நியாய ஏற்பாடு
  6. செப்பம்
  7. நேர்மை
  8. ஆயத்தம்
  9. புனுகுபூனையிடமிருந்து எடுக்கப்படும் நீர்மப்
  10. மாணிக்கவகை