பறை

* & - 1) சொல்; பேசு; அறிவி, 2) தமிழக இசைக்கருவிகளில் ஒன்று. கோல் கொண்டு ஒலியெழுப்பும் தோற் கருவி - 1) say ;speak; announce, 2)a musical instrument.

to speak, say to be wasted, worn out or impaired Parai, a traditional type of drum played in Tamil festivals and folk dances

Tamil Wiktionary

பறை — பெயர்ச்சொல் (Noun)
  1. * & - 1) சொல்; பேசு; அறிவி, 2) தமிழக இசைக்கருவிகளில் ஒன்று.
  2. கோல் கொண்டு ஒலியெழுப்பும் தோற் கருவி

[object Object]

Winslow (1862)

பறை (paṟai) — noun
  1. Drum, tabor of various kinds as beaten for public proclamation, or on festive or mournful occasions, commonly by the Pariah caste வாச்சியம்
  2. The Pariah caste, any thing mean, vile, ஓர்சாதி
  3. A corn measure of twenty-four சேர்க்கொத்து, a bushel. A parai, sometimes of thirty measures, ஓரளவு. Compare பரை
  4. A wooden measure, ஓரளவுகருவி
  5. Sound of a drum, பறையோசை. 6.Word, saying, declaration, statement, சொல்
  6. [ex பற, fly. ] Wing. feather, plumage, இறகு.–There are several classes among Pariahs, namely, வள்ளுவப்பறை, தாதப்பறை, தங்கலான்பறை,துற்சாலிப்பறை, குழிப்பறை, தீப்பறை, முரசப்பறை, மொட்டப்பறை, அம்புப்பறை, வடுகப்பறை, ஆலியப்பறை, கோலியப்பறை, வழிப்பறை, வெட்டியார்ப்பறை, சங்குப்பறை
  • பறைக்கம்பு — A rod for striking off grain, in measuring, a strickle.
  • பறைக்காளி–பறைக்காலி–பறைக்கால் — [vul. பறக்காளி.] Muslin of fine cloth woven by Pariahs; also used for a coarse kind.
  • பறைக்குடி — A Pariah family.
  • பறைக்கோலம் — Mean attire or appearance.
  • பறைசாற்ற — To publish govern ment orders by beat of drum. 2. [fig.] To blab out secrets, to tattle, வெளிப்படுத்த.
  • பறைச்சேரி — A Pariah village.
பறை (paṟai) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், பறைய, [Maly.] v. a. To speak, பேச. (சது.)
  • பறைவு — Speaking, talking, telling, blabbing; chatter.

Fabricius (1972)

பறை — noun
  1. a drum
  2. a measure of five markals
  3. the Pariah caste
  4. (v. n.) word, சொல்
  5. (பற) wing, plumage, இறகு
  • சாண் பறைக்கு முழத்தடி — a stick of an arm's length for a span of a Pariah, the Pariah must be forced to work by flogging.
  • பறைக் குடி — a Pariah family.
  • பறைக் கேரலம் — mean attire or appear- ance.
  • பறை சாற்ற — to publish orders by beat of drum; 2. to blab out secrets, to tattle.
  • பறைச் சேரி — a Pariah village.
  • பறை நாகம் — the black-hooded snake ( to பாப்பார நாகம்).
பறை — v. t.
  1. v. t. speak, பேசு.
  • பறைவு — speaking, talking, blabbing, chatter.

Tamil Moli Akarathi (1928)

பறை (paṟai)
  1. இறகு, ஓரளவு, ஓரளவுக்கருவி, சாதி, சொல், பறையென்னேவல், வாச்சியப்பொது, ஒருவகைநோன்பு
பறை (paṟai)
  1. இறகு, சொல், பறையென்னே வல், வாச்சியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பறை³ (paṟai) — noun
  1. Drum; முரசு. அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076)
  2. The Paṟaiya caste, as drum-beaters; பறைச்சாதி. இவர் பறைச்சேரியிலேயிருந்து (கோயிலொ. 109)
  3. Circle, ring; வட்டம். பறைக்கட் பீலித்தோகை (அகநா. 15)
  4. Word, saying, statement; சொல். (பிங்.)
  5. Desired object; விரும்பிய பொருள். இறைவாநீ தாராய்பறை (திவ். திருப்பா. 28)
  6. A measure of capacity; ஒரு முகத்தலளவை. அளக்கும் பறை முதலியன (சிலப். 14, 208, அரும்.)
  7. Ring round the mouth of a vessel; மரக்கால்முதலியவற்றின் வாய்ப் பட்டம். (சிலப். 14, 208, அரும்.)
  8. A dramatic composition; ஒரு பிரபந்தம். அவர் பாடின பள்ளும் பறையும் இசையிலே கேட்டருளும்படி (கோயிலொ. 109)
  9. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)
  10. Cave; குகை. (அரு. நி. 640.)
பறை⁴ (paṟai) — noun
  1. < பற-
  2. Flying; பறக்கை. துணைபறை நிவக்கும் புள்ளின மான (மலைபடு. 55)
  3. Wing, feather, plumage; இறகு. பைங்காற் கொக் கின் மென்பறைத்தொழுதி (நெடுநல். 15)
  4. Bird; பறவை. பல்பறைத்தொழுதி (குறுந். 175)

IndoWordNet

பறை — noun
  1. முரசு போன்ற தோல் கருவி.
பறை — noun
  1. ராஜாவின் சவாரிக்கு முன்னே அடிக்கக்கூடிய மணி
பறை — noun
  1. தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை
பறை — noun
  1. பறை, தம்பட்டம், முரசு
பறை — noun
  1. ஒரு வகையான சிறிய பறை

தப்பட்டை மத்தாளம் தபேலாவாத்தியம் தாளக்கருவி மத்தளம் (டோல்) சிறிய மத்தளம் சின்ன மத்தளம் சின்ன முழவு மத்தளம் தடாரி தண்ணும்மை பதலை தந்தக் கலாஹக் தமோகா கெண்டி தண்டூவி தண்டோரா அரிப்பறை கோட்பறை தக்கை தம்பட்டம் தமுக்கு ஆகுளி முரசு