பால்

பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் மரம், இலை முதலியவை பிளவு அல்லது கீறு பட்டால், வடியும் நீர்மம்; இரப்பர் மரம், வேப்பமரம் முதலிய்வற்றின் பால். நெல் முதலியவற்றில் அரிசி கெட்டியாக முதிரும் முன் உள்ல நீர்ம நிலை. நெற்பயிர் பால் பிடித்தல் .

milk, dairy milky juice in plants, fruits, etc. liquid extract

Tamil Wiktionary

பால் — பெயர்ச்சொல் (Noun)
  1. பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம்
  2. மரம்
  3. இலை முதலியவை பிளவு அல்லது கீறு பட்டால்
  4. வடியும் நீர்மம்; இரப்பர் மரம்
  5. வேப்பமரம் முதலிய்வற்றின் பால்.
  6. நெல் முதலியவற்றில் அரிசி கெட்டியாக முதிரும் முன் உள்ல நீர்ம நிலை. நெற்பயிர் பால் பிடித்தல் .
  7. பிரிவு
  8. ஆண்பால்
  9. பெண்பால் என்னும் வகைப்பாடு
  10. பக்கம்
  11. இடம். எ.கா. அவர் ஏழைகளின் பால் அன்பு காட்டுவார்; யார்பாலும் - யாரிடமும்

பான்மை பாலினம் பால்காரன் பால்காரி பால்மானி பால் பண்ணை பால் பொருள் பால்மடி ஆட்டுப்பால் பசும்பால் மாட்டுப்பால் ஆவின்பால் முலைப்பால் தாய்ப்பால் புட்டிப்பால் சீம்பால் அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் முப்பால் கள்ளிப்பால் ஆண்பால் பெண்பால் ஒன்றன்பால் பலர்பால் பலவின்பால்

Winslow (1862)

பால் (pāl) — noun
  1. Milk, பசுவின் பால்முதலியன
  2. Milky juice in plants, trees and fruits–as the eocoa-nut, மரமுதலியவற்றின்பால்
  3. Lymph, matter, fluid in pustules, &c., அம்மைப்பால்
  4. (சது.) Whiteness, வெண்மை. [a contraction of Sa. Palana, milk of a cow recently calved.]–Note. In combination the final ல் is changed by rule to ற், sometimes to ன், பாலுக்குங்காவல்பூனைக்குந்தோழன். A guard to the milk, but a friend to the cat. பாலும்வெள்ளைமோரும்வெள்ளை. Milk is white, whey is white–spoken of persons or things apparently similar, but really very different. பால்வார்த்துமுழுகுவான். He will bathe, putting milk on his head (in token of his joy at your death, &c.)
  • பாலடை — A shell for a milk-ladle, பாலடைச்சங்கு. [loc.] 2. A shrub, பாலடைச்செடி, Hallia sororia.
  • பாலடைய — As பால்கொள்ள.
  • பாலவரை — A whitish species of pulse. See அவரை.
  • பாலாடை–பாலேடு — Cream of milk.
  • பாலாறு — The river Palar.
  • பாலிறங்குதல்–பால்வடிதல் — Pustule becoming dry. 2. The flowing down of milk.
பால் (pāl) — noun
  1. Side, region, quarter, point of compass, பக்கம்
  2. Part, portion, share, பங்கு–as பாலது
  3. Half, moiety, middle, பாதி
  4. [in gram.] Any of the five divisions of number and gender. See பால்
  5. 5. Place, location, situation, இடம்
  6. A sign of the ablative of place, ஏழனுருபு
  7. Nature, quality, property, குணம்
  8. Right, title, propriety, உரிமை. (சது.)
  9. Fate, destiny; fruit of actions, good or bad ஊழ்
  10. Duty, obligation, கடமை, as ஏசு, பாலன், let him go; ஒழியற்பாலது, it should be omitted or excepted
  11. Modes of dressing ladies' hair. See பால்
  12. (p.) ஏங்கள்பால், To us. ஏப்பாலும். Everywhere. அது பெரும்பாலும் வழக்கம். It is generally used
  • பால்–5–ஆண்பால்–பெண்பால்–பலர்பால்–உயர்திணை–ஒன்றன்பால்–ஒருமைப்பால்–பலவின்பால்–பன்மைப்பால்–அஃறிணை–ஒருவன்–அவன்–ஒருத்தி–அவள்–பலர்–அவர்–ஒன்று–அது–பல–அவை — . The five numbers, and genders, are, , masculine singular; 2. , feminine singular; 3. , masculine or feminine plural;–of the , or rational class; 4. , or , neuter singular; 5. , or , neuter plural –of the , or irrational class. The five are distinguished by different words and terminations–as 1. , or ; 2., or ; 3., or ; 4. , or ; 5. , or .
  • பால்–5–முடி–கொண்டை–சுருள்–குழல்–பனிச்சை — . The five modes of dressing ladies hair are: , tying it on the crown; 2. , knotting it on either side; 3. , carrying the lock up and folding it behind; 4., coiling and tying it up behind in a roll; 5. , plaiting the hair and letting it hang down.
  • பால்பகாவஃறிணைப்பெயர் — Neuter nouns without distinction of number.
  • பால்வழு — Misuse of number of gender.
  • பான்முளை — The germ of fate, ஊழ் முளை. (நீதிநெறி.)
  • பாலது — It is the portion. See பாற்று.

Fabricius (1972)

பால் — noun
  1. milk
  2. milky juice in plant
  3. lymph, அம்மைப்பால்
  4. side, quarter, பக்கம்
  5. nature, quality, குணம்
  6. (in gram.) gender and number
  7. right, title, உரிமை
  8. fate, destiny
  9. modes of dressing a lady's hair
  • அது பெரும்பாலும் வழக்கு — it is generally the custom.
  • பாலது–பாற்று — it is the portion, see .
  • பாலடை — a milk-ladle, a hollow shell to give milk to a child.
  • பாலாடை–பாலேடு — cream of milk.
  • பாலூட்ட — to suckle a child.
  • பாலொளிக்க — to keep back milk (as a cow for its calf).

Tamil Moli Akarathi (1928)

பால் (pāl)
  1. இடம், இயல்பு, உரிமை, ஏழ னுருபு, கடமை, குணம், திக்கு, பகுதி, பக்கம், பங்கு பஞ்சகௌவியத்தொன் று அது பசுப்பால் , பலன், பாதி, மரப்பால், முலைப்பால், வெண்மை
பால் (pāl)
  1. அமிழ்தம், அமிழ்து, கலசம், கீரம் சுதை, துத்தம், பயசு, பயம்
பால் (pāl)
  1. 14 - கைக்கிளைத்திணை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெ ருந்திணை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காசி, பாடாண் டிணை
பால் (pāl)
  1. 5- ஒருவன், ஒருத்தி, பலர், ஒன் று, பல்
பால் (pāl)
  1. இடம், உரிமை, குணம்,பக்கம், பங்கு, பாதி, பால், வெண்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பால்¹ (pāl) — noun
  1. cf. pālana. [T. pālu, K. M. pāl.]
  2. Milk; குழவி குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான திரவப் பொருள். நல்லான் றீம்பால் (குறுந். 27)
  3. See பால்தெளித்தல். Loc
  4. Milky juice in plants, fruits, etc.; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் திரவப் பொருள்
  5. Lymph matter, fluid in pustules, as in small-pox; அம்மை முத்திலிருந்து கசியுந் திரவப் பொருள்
  6. Whiteness; வெண்மை. பாற்றிரு நீற்றெம் பரமனை (திருவாச. 44, 6)
  7. Liquid extract; சாறு. அரக்கின்வட்டு நாவடிக்கும் . . . பான் மடுத்து (நற். 341)
பால்² (pāl) — noun
  1. perh. பகு-
  2. [T. pālu, K. pāl.] Part, portion, share, section, fraction; பகுதி. பால்வரை கிளவி (தொல். எழுத். 165)
  3. Dividing, apportioning; பிரித்துக்கொடுக்கை. பாலுங் கொளா லும் வல்லோய் (பதிற்றுப். 16, 19)
  4. Moiety; middle; பாதி. பானா ளிரவில் (கலித். 90)
  5. Side; பக்கம். பால்கோடாது (ஞானா. 17, 6)
  6. Line; row; வரிசை. பெரியார்தம் பாலிருந் தக்கால் (ஆசாரக். 25)
  7. Caste; குலம். கீழ்ப்பாலொருவன் கற்பின் (புறநா. 183)
  8. Point of the compass, quarter; திக்கு. (பிங்.)
  9. Place, region, location, situation; இடம். (யாழ். அக.)
  10. Quality, property, condition; குணம். (பிங்.)
  11. Nature, state; இயல்பு. (பிங்.)
  12. Right, title; உரிமை. (W.)
  13. Fate, destiny; ஊழ். பால்வரைதெய்வம் (தொல். சொல். 58)
  14. Fitness; தகுதி
  15. (Gram.) Classification of nouns and verbs, five in number, viz., āṇ-pāl, peṇ-pāl, palar-pāl, oṉṟaṉ-pāl, palaviṉ-pāl; ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒற்றன்பால், பலவின்பால் என்ற பிரிவு. ஐம்பால் (தொல். சொல். 10)
  16. (Gram.) Classification of number in nouns and verbs, two in number, viz., orumai, paṉmai; ஒருமை, பன்மை என்ற இரு வகைப் பாகுபாடு. பன்மைப் பாலாற் கூறுதல் (தொல். சொல் 62, இளம்பூ.)
  17. (Gram.) Classification into akattiṇai and puṟattiṇai; அகத்திணை, புறத் திணை என்ற பாகுபாடு. (சிலப். பதிகம், உரை, பக். 14.)
  18. A subdivision of Iṭaiyar and Kuṟumpar caste; இடையர் குறும்பர்களின் வகை. (E. T. v, 450.)

IndoWordNet

பால் — noun
  1. பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும் உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம்.
பால் — noun
  1. தாவரங்கள் ,சில இலைகளிலிருந்து வெளியே வரும் பிசுப்பிசுப்பான வெள்ளைநிறத் திரவம் .

சீஸ் பாலாடைக்கட்டி தாவரவகை எருக்கம்பால்