புகார்

முறையீடு, குற்றச்சாட்டு, குற்றப்பதிகைவளவு வலைப்பூ ; பராதி complaint புகார் என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல். முறையீடு என்பதே தமிழ்ச் சொல்லாகும். புகார் செய்யப்பட்டது என்பதை விட, முறையீடு செய்யப்பட்டது என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும்.

complaint

Tamil Wiktionary

புகார்
  1. முறையீடு, குற்றச்சாட்டு, குற்றப்பதிகைவளவு வலைப்பூ ; பராதி

Winslow (1862)

புகார் (pukār) — noun
  1. Mist, fog, haze, பனிப்படலம்
  2. Duskiness, dinginess, brownness. dimness, கபிலம்
  3. a rainy cloud, மழைபெய்யு மேகம்
  4. Cloudiness, an over-cast sky, மந்தாரம்; [ex புகர்.]
  5. (சது.) A sea-port town, or village; the mouth of an ebbing river, கழிமுகம்
  6. The town of Caveripatnam, காவிரிப்பூம்பட்டினம்
  • புகார்நிறம் — Dusky color, brown. swarthy.
  • புகார்பிடித்தல் — Taking a faintish blue, in the staining of cloths.
புகார் (pukār)
  1. [Hind.] An evil report; a talk, used in the south.

Fabricius (1972)

புகார் — noun
  1. mist, fog, பனிப்படலம்
  2. duskiness, மங்கல்
  3. a rainy cloud, மேகம்
  4. an over-cast sky, மந்தாரம்
  5. the town of Caveripatnam
  6. a seaport town or village; the mouth of an ebbing river
  7. (Hind.) an evil report, a talk

Tamil Moli Akarathi (1928)

புகார் (pukār)
  1. கபிலம், கழிமுகம், காவிரிப்பூம் பட்டினம், மந்தாரம், முகில்
புகார் (pukār)
  1. போகார், காவிரிப்பூம் பட்ட ணம், பிரசித்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புகார்¹ (pukār) — noun
  1. < id
  2. Mouth of a river; ஆற்றுமுகம். புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் (புறநா. 30)
  3. The town of Kāviri-p-pūm-paṭṭiṉam, as situated at the mouth of the river Kāvēri; காவிரிப்பூம்பட்டினம். புகார்க்காண்டம். (சிலப்.)
புகார்² (pukār) — noun
  1. (W.)
  2. Mist, fog, haze; பனிப்படலம்
  3. Cloudiness of the weather, overcast sky; மந்தாரம்
  4. Rain-cloud; மழை பெய்யு மேகம்
  5. Duskiness, dinginess, dimness; கபிலநிறம்
புகார்³ (pukār) — noun
  1. pukārā
  2. Loud talk; shout, outcry, uproar; பெருங்கூச்சல்
  3. Rumour, bad report; அவமதிப்பு விளைக்குஞ் செய்தி
  4. Complaint; முறையீடு

IndoWordNet

புகார் — noun
  1. ஒருவர் மீது சுமத்தும் குற்றம்.
புகார் — noun
  1. பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு
புகார் — noun
  1. புகார், முறையீடு

குற்றச்சாட்டு பிராது உரிமை உறுதி சவால் முறையீடு வழக்கு வாக்கு கூற்று

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புகார்
  1. ஆற்றுமுகம்
  2. கழிமுகம்
  3. பட்டினம்
  4. பனிப்படலம்
  5. பெய்யும் மேகம்
  6. கபிலமரம்
  7. பெருங்கூச்சல்
  8. இகழ்விளைக்கும் செய்தி
  9. முறையீடு