போக்கு

நீக்கு, remove, get rid of (எ.கா. 1. அப்பா குழந்தையின் பயத்தைப் போக்கினார். 2. இந்த மருந்து வலியைப் போக்குமா?) குற்றம், பிழை (எ. கா. போக்கு அறு பனுவல்) outflow, going;

to cause to go or flow; to send to remove, expel (as a disease) to out, dispel, obliterate

Winslow (1862)

போக்கு (pōkku) — infinitive
  1. noun. Causing to go, letting out, போகச்செய்கை
  2. Going, passing, departure, removal, செல்லுகை
  3. Way, passage, thoroughfare, வழி
  4. Route, course, நடை
  5. Tendency, propensity; peculiar cast or turn of mind, சாய்வு
  6. Habit, manner, method, fashion, practice, பழக்கம்
  7. Idiom, style, diction, phraseology, நூல்நடை
  8. Excuse, pretence, cloak, as சாக்குப்போக்கு
  9. Gait, pace, step, நடையின்சாயல்
  10. Expression of countenance, முகச்சாயல்
  11. Taste, liking, choice, பிடிப்பு
  12. Subterrancous passage, cavern, சுரங்கவழி
  13. Character of land as hilly, sandy, &c., நிலவாசி
  14. Place, region, இடம்
  15. Expending, wastefulness, வீண் செலவு
  16. Fault, defect, குற்றம். (நீதி.)
  17. [with ஒரு.] Singularity, peculiarity
  18. Evacuation, discharge, emission, புறப்படுகை
  19. Stream, current, flow, நீரோட்டம்
  20. Means of preventing ill-luck. See கழிப்பு; [ex போ, v.] இதுஅந்தப்போக்கிலேகிடைக்குமா. Can this be got in those parts? ஆற்றுப்போக்கு. Land irrigated by rivers
  • போக்கடிக்க — To lose a thing. 2. To cause to go, to waste. 3. To dispel, disperse, banish, chase away. போக்கடிப்பான். He who will be a loser; used as a curse.
  • போக்கடி — Losing, loss, இழத்தல். 2. Means, pecuniary means, வழிச் செலவு. 3. Liberty of action, such as wealth confers, சுயேச்சை. போக்கடியற்றவன். One who has no means.
  • போக்கறுபனுவல் — A faultless production. (p.)
  • போக்கன் — A traveller, a way-faring man, வழிச்செல்வோன். 2. A vagabond, a wicked fellow, துஷ்டன். 3. A worthless person–as காக்கன்போக்கன். 4. [with ஒரு.] A curious man.
  • போக்காட்ட — To send to a place or to a third person not to a second. 2. To send away, dismiss.
  • போக்கிடம் — A way of escape, ஒதுங்குமிடம்.
போக்கு (pōkku)
  1. , கிறேன், போக்கினேன், வேன், க்க, v. a. To cause to go, move or walk, போகச்செய்ய
  2. To put away, clear out, dispel, obliterate, அழுக்குப்போக்க
  3. To pass or spend, as time, பொழுதுபோக்க
  4. To insert, convey into, introduce, உட்புகுக்க
  5. To carry along a road, channel, or river, நடத்த
  6. To waste, to destroy; to kill, அழிக்க
  7. To conclude or settle a business, முடிக்க
  8. To send, despatch, அனுப்ப

Fabricius (1972)

போக்கு — noun
  1. (போ) going, departure, செல்லுகை
  2. a way out, an exit, an escape, a thoroughfare, வழி
  3. practice, manner, habit, பழக்கம்
  4. style, direction, நடை
  5. excuse, evasion, subterfuge, சாக்கு
  6. place, region, இடம்
  7. expending, wastefulness
  8. fault, defect, குற்றம்
  9. (with ஒரு) peculiarity
  10. evacuation, emission
  11. stream, current, flow, நீரோட்டம்
  12. means of preventing ill-luck
  13. (v. n. of போக்கு) causing to go
  • போக்கடி — losing; 2. pecuniary means, வழிச்செலவு; 3. liberty of action such as wealth confers, சுயேச்சை.
  • போக்கறுபனுவல்–போக்கு–அறு–பனுவல் — a faultless production ( 8 + + ).
  • போக்கன் — see separately.
  • போக்கிடம் — a way of escape.
  • போக்கிலேவிட்டுத்திருப்ப — to gain one's consent by yielding 2. to let a draught-animal go and then turn it back.
  • போக்குக்காட்ட — to give an outline or clew; to show a little of a thing.
போக்கு — v. t.
  1. v. t. put away, cause to go out or away, போகச்செய்
  2. abolish, remove, destroy, kill, அழி
  3. conclude or settle a business, முடி VI
  4. pass or spend as time
  5. insert or introduce, உட்புகுத்து
  6. carry along a road or channel or river, நடத்து
  • போக்கிவிட — to destroy, to kill.
  • காலம் போக்க — to while away time.
  • பாவம்போக்க — to expiate sin.
  • மோசம் போக்க — to deceive one.

Tamil Moli Akarathi (1928)

போக்கு (pōkku)
  1. அறையிருப்பு, சாட்டு, சாவு, பழக்கம், போகுதல், போக்கென் னேவல், யாதொன்று செல்லுந்து வாரம், வழி, விதம்
போக்கு (pōkku)
  1. போகுதல், போகென்னே வல், வழி

IndoWordNet

போக்கு — verb
  1. ஒரு செயலை நீக்குதல்.
போக்கு — verb
  1. ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்
போக்கு — verb
  1. கழி, போக்கு

ஒன்றிலிருந்துவிடுபடு ஒன்றிலிருந்து விலகு ஒன்றிலிருந்து நீங்கு அகற்று விலக்கு நீக்கு கால்களின் கீழே போட்டு கழி உயிர்வாழ்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

போக்கு
  1. போகச்செய்கை
  2. வழி
  3. சுரங்கவழி
  4. நடை
  5. மீட்சி
  6. புகல்
  7. இடம்
  8. நிலத்தின் தரம்
  9. மனச்சாய்வு
  10. விருப்பம்
  11. சாக்கு
  12. பழக்கம்

Tamil Wiktionary

போக்கு — பெயர்ச்சொல் (Noun)

போக்கி புகை போக்கிலி வரத்து போக்குக் காட்டு வயிற்றுப் போக்கு பொழுதுபோக்கு புறம்போக்கு outflow inflow வழிப்போக்கன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

போக்கு² (pōkku) — noun
  1. Causing to go, letting out; போகச்செய்கை
  2. Way, passage, thoroughfare, route; exit, outlet; வழி
  3. Subterranean passage; சுரங்கவழி. (W.)
  4. Walk, gait, step, pace; நடை. (பிங்.)
  5. Recovery; மீட்சி. நாகம் போக்கறக் கொண்ட தேனும் (சீவக. 1285)
  6. Refuge; புகல். இலங் கை போக்கறவும் (கம்பரா. மாயாசனக. 83)
  7. Place, region; இடம். இது இந்தப் போக்கிலே கிடைக்குமா?
  8. cf. பாங்கு. Character of land, as hilly, sandy; நிலவாசி. மலைப்போக்கு, ஆற்றுப் போக்கு
  9. Tendency, propensity, peculiar cast or turn of mind, taste; மனச்சாய்வு. அவனைப் போக்குப்போல் விட்டுப் பிடிக்கவேண்டும்
  10. Desire; பிரீதி. Loc
  11. Excuse, evasion; சாக்கு
  12. Habit, practice; பழக்கம். (யாழ். அக.)
  13. Manner, method, fashion; நடைமுறை. Loc
  14. Idiom; style; diction; mannerism; இரீதி. (W.)
  15. See போக்கியல். (தொல். பொ. 444.)
  16. Flowing, as of water or wind; நீர் முதலியவற்றின் ஓட்டம். புணரியைப் போக்கற வடைத்தவாறும் (கம்பரா. ஒற்றுக். 46)
  17. Evacuation, as of the bowels; discharge, emission; மலமுதலியன வெளிப்படுகை. Colloq
  18. Prediction by the action of owl among pañcapakṣi; பஞ்சபட்சி சாத்திரத்தில் ஆந்தையின் தொழிலால் குறிக்கப்படும் பலன். (சூடா.)
  19. Loss, ruin; கேடு. போக்கு மதுவிளிந் தற்று (குறள், 332)
  20. Expense, waste; செலவு
  21. Death; இறப்பு. போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே (திருவாச. 1, 77)
  22. Fault, defect; குற்றம். போக்கறு பனுவல் (தொல். பாயி.)
  23. Ceremony of averting evil; கழிப்புக் கழிக்கை. Madr
  24. Sapling; மரக் கன்று. (பிங்.)
போக்கு³ (pōkku) — noun
  1. Going, passing, departure; செல்லுகை. குறும்பி னூழையும் வாயிலும் போக்கறவளைஇ (பு. வெ. 1, 7, கொளு).
போக்கு¹ (pōkku) — noun
  1. Conduct; நடத்தை. அழகிதாயிருந்தது உம்முடைய போக்கு (ஈடு, 1, 4, 7).