மயக்கம்
Fainting
Fabricius (1972)
மயக்கம் — noun
- , மயக்கு, s. (மயங்கு) confusion or destruction of mind, dulness, mental delusion, perplexity, fainting, swoon, உன்மத்தம்
- lethargy, sleepiness, sensual bewilderment, சோம்பு
- confusion in nature – as in the blending of sexes among animals or vegetables
- (in gram.) coalescence of letters, சையோகம்
- மயக்கம் எடுக்க–ஆயிருக்க — to be confused or intoxicated to faint, to swoon.
- மயக்கம்பூண–மயக்குற — to be overcome by intoxication, to be frenzied.
Tamil Moli Akarathi (1928)
மயக்கம் (mayakkam)
- உன்மத்தம் இது முக்குற்றத் தொன்று, சாச்சடங்கினொன்று சோம்பு
மயக்கம் (mayakkam)
- அயர்வு,அனந்தர், இருள், இளமை, உணராமை, உன்மத்தம், பைத்தியம், ஏரம், கழுமல், களவு, களன், களி, பித்தம், பிரமை, பிரா ந்தி, பேது, மத்தம், மயர்பு மயல், மருள், மலைவு, மறலி, மறல், மால், மாழாத்தல், மாழ்கல், மான்றல், மைந்து, மையல், மோகர், விப்பிர மர், வெருள்
மயக்கம் (mayakkam)
- உன்மத்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மயக்கம் (mayakkam) — noun
- < மயங்கு-
- Mental delusion; stupor, bewilderment; aberration of mind, as from ignorance, fascination, etc.; அறிவின் திரிபு
- Spiritual ignorance; அவித்தை. காமம்வெகுளி மயக்க மிவை மூன்ற னாமங் கெட (குறள், 360)
- Mistaken knowledge, misunderstanding; பிழைபடவுணர்கை
- Pining due to separation from one's beloved; விரக நோய். (அரு. நி.)
- Giddiness; unconsciousness; coma; மூர்ச்சை. Colloq
- Confusion in nature, as in the blending of sexes among animals or vegetables; சிருட்டியில் அலித்தன்மை முத லிய கலப்பு. (W.)
- Mixture; கலப்பு. வடசொன் மயக்கமும் வருவன புணர்த்தி (கல்லா. 62, 18)
- (Gram.) Combination of letters, coalescence; எழுத்துப் புணர்ச்சி. உடனிலைமயக்கம்
- A funeral rite; மரணச்சடங்கினு ளொன்று. (யாழ். அக.)
- Laziness; சோம்பேறித்தனம். (யாழ். அக.)
மயக்கம் (mayakkam) — noun
- Sexual union; கூடல். (ஈடு, 1, 9, 6.)