மானம்
தன் மதிப்பு கௌரவம் பெருமை
chastity honor, dignity eminence, pride
Winslow (1862)
மானம் (māṉam) — noun
Honor, favor, greatness, பெருந்தன்மை Pride, self-respect, dignity, பெருமை Shame, bashfulness, வெட்கம் Measure in general, அளவு (சது.) Strength, வலி Fault, குற்றம் Comparison, உவமை [colloq. for வானம்.] The heaven or sky The computation of a year, solar, lunar, or siderial–as சௌரமானம், சாந்திரமானம். W. p. 656. MANA.–Note. The word generally takes certain prefixes, as அபி, அனு, அவ, உவ, சன், &c., and differs a little in meaning according to the connection. Sometimes it is found in combination, as தண்டைமானம், பகல்மானம், &c. ஒழுக்கமுள்ளஸ்திரிமானத்தைக்காப்பாள். A gracious woman retaineth honor. (Prov. XI. 16.) மானத்தைமூடு. Cover your nakedness. (c.)
சௌரமானம் — Solar reckoning, motion of the sun in its orbit. தேவமானம் — The periods of time among the gods. நரமானம் — The period of man's life. பிரகற்பதிமானம் — Reckoning by Jupiter's motion in his orbit. வெகுமானம் — A present. See வெகு. மானகீனம்–மானக்குறை–மானக்கேடு–மானத்தாழ்ச்சி–மானத்தாழ்வு–மானபங்கம்–மானவீனம் — Dishonor, disgrace, ignominy.
Fabricius (1972)
மானம் — noun
honour, favour, அபிமானம் arrogance, pride, அகங்காரம் shame, bashfulness, வெட்கம் urbanity, மரியாதை measure, அளவு form, rule, பிரமாணம் comparison, உவமை (improp. for வானம்) heaven affix, as in தீர் மானம் strength fault the computation of a year, solar, lunar or siderial as in சௌரமானம், சாந்திர மானம்
மான கீனம் மானக்குறை–க்கேடு–பங் கம்–த்தாழ்ச்சி — disgrace, ignominy. மானங் காத்துக்கொள்ள — to preserve one's self-respect, dignity, chastity etc. மானங் குலைய–கெட — to be deflowered, disgraced. மானஸ்தன் — a respectable person. மானபாவன் — a great man. மானமா — the yak or , கவரிமா.
Tamil Moli Akarathi (1928)
மானம் (māṉam)
அகங்காரம், அபிமானம், அளவு, உவமை, ஒருவிதப் பொருத்தம் கணிதம், குற்றம், நேசம், பிடிப்பு பெருந்தன்மை, பெருமை, மரியா தை, வலி, விமானம், வெட்கம்
மானம் (māṉam)
அபிமானம், அளவு, உவமை, குற்றம், பெருமை, வலி, வெட்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மானம்¹ (māṉam) — noun
< māna Honour, dignity; கௌரவம். நன்றேகாண் மானமுடையார் மதிப்பு (நாலடி, 294) Chastity; கற்பு Pride, eminence; பெருமை. புகழு மானமு மெடுத்து வற் புறுத்தலும் (தொல். பொ. 41) Bouderie, sulks; புலவி. மான மங்கையர் வாட்டமும் (சீவக. 2382) Strength; வலிமை. (சூடா.) Vow; சபதம். அப்படியே செய்வேனென மானஞ்செய்து (இராமநா. அயோத். 7) Computation; கணிப்பு. ஸௌர மானம் Instrument or means of measurement; அளவுகருவி Touch-needle; மாற்றாணி. (திருக்கோ. 335, உரை.) Half a Madras measure; பட்டணம்படியில் அரைப் படி கொண்ட அளவு. (G. Sm. D. I, i, 286.) cf. மான்⁵-. Comparison; ஒப்புமை. மானமில்லுயர் மணிவண்ணன் (சீவக. 2747) cf. pramāṇa. Test; means of knowledge; பிரமாணம். (திருக்கோ. 335, உரை.) Love, affection; அன்பு. பாலு நீரும்போல மானம்வைத் தாண்டீரே (இராமநா. அயோத். 7) cf. abhimāna. Attachment; அபிமானம். மறத்திடை மானமேற் கொண்டு (பு. வெ. 5, 6) cf. avamāna. Disgrace; அவமானம். மானந்தலைவருவ செய்பவோ (நாலடி, 198) Shame; இலச்சை. வஞ்சியை மீட்கிலே னென்னு மானமும் (கம்பரா. சடாயுவுயிர்நீ. 145) Fault; குற்றம். மெய்ந்நிலை மயக்க மான மில்லை (தொல். எழுத். 47) cf. vimāna. Aerial chariot; ஆகாசவிமானம். மானமிசை யூர்ந்து (கந்தபு. அசுரர்யா. 14) cf. vimāna. Vaulted roof of the inner shrine of a temple; கோவில்விமானம். பொன்மானந் தனக்கு வடமேற்றிசை (திருவிளை. கல்லானைக். 3) Pillared hall; மண்டபம். (பிங்.)
மானம்² (māṉam) — noun
perh. மான்¹. cf. நானம்¹. (அக. நி.) Musk; கஸ்தூரி Civet; சவ்வாது
மானம்³ (māṉam) — noun
Sky; ஆகாயம். செம்மானஞ் செற்று . . . மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே (தேவா. 1200, 10).
சொல் அகராதி
சொல் தேடு