முதல்

நிலம்பொழுதிரண்டின் இயல்பு முது + அல் முதன்மை.

first, primary first-rate first, as in rank, place, etc.

Tamil Wiktionary

முதல்

முதலிடு முதலீடு முதன்மை முதலாளி முதன்முதல் கொழுமுதல் கொள்முதல் பறிமுதல்

Winslow (1862)

முதல் (mutal) — noun
  1. The first, the beginning, ஆதி
  2. Stock, principal, fund, capital, money at interest; original cost, பணமுதல்
  3. God, Deity, the First, or the Supreme Being, கடவுள்
  4. Et cætera, and so on, as முதலிய
  5. The seventh case of nouns, as சுரன்முதல்வந்தஉரன்மாய்மாலை, the strong illusive darkness that came out of the parched ground
  6. [as a preposition.] From, henceforth, &c., as இதுமுதல். முதலங்கேபோ. Go first there. வட்டியுமுதலுமிழந்தேன். I have lost principal and interest. முதல்கட்டாது. The capital is insufficient. முதலிலார்க்கூதியமில்லை. Those without a capital will be without profit
  • கண்டுமுதல் — Produce in kind. See காண்.
  • கைமுதல் — Principal on hand.
  • பறிமுதல் — Confiscation.
  • முதலது — That which is first, a mode of expressing, முதற்று.
  • முதலவன் — He who is the first, as முதல்வன்.
  • முதலற்றுப்போக — To be totally extinguished, spoken of a family.
முதல் (mutal) — verbal noun
  1. –முதலு, கிறேன், முதலினேன், வேன், முதல, v. n. To be first; to begin; to become first, முதலாக. (p.)
  • முதலல் — A beginning, துவக்கம். (சது.)
முதல் (mutal)
  1. ..From the first........?.

Fabricius (1972)

முதல் — noun
  1. the first, the beginning, ஆதி
  2. stock in trade, the principal, capital
  3. the main stock of a plant
  4. the first, the Supreme Being
  5. etcetera, and so on, and the rest, முதலிய
  6. a sign of the 7th case
  7. (prep.) from
  • வட்டியும்முதலும் — principal and interest.
  • இதுமுதல்–இது முதலாய்–இது முதற் கொண்டு — from henceforth.
  • முதல் அங்கேபோ — go first there.
  • முதல்வன்–முதல்வன் — he who is the first.
  • முதலற்றுப்போக — to lose the principal or capital, to be totally extinguished as a family.
  • முதலாய் — even, so much.
முதல் — v. i.
  1. , முதலு, III. v. i. be first, முதலாகு
  2. begin, துவக்கு
  • முதலல் — a beginning, துவக்கம்; 2. being first.
  • முதலை — a crocodile.

Tamil Moli Akarathi (1928)

முதல் (mutal)
  1. ஆதி, ஏழனுருபு (உ-ம்) சுரன் முதல் வந்த வுரன்மாய்மாலை, கட வுள், முதலென்னேவல், வட்டிக் குக் கொடுக்கும்பணம், வியாபாரஞ் செய்யும் பணம்
முதல் (mutal)
  1. அடி, ஆதி, தலை, தாள், முன்னர்
முதல் (mutal)
  1. ஆதி, ஏழனுருபு, (உ-ம்) சுரன் முதல்வந்த வுரன்மாய்மலை, முத லென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முதல் (mutal) — noun
  1. Beginning; ஆதி. முதலூழியிறுதிக்கண் (சிலப். 8, 1, உரை.)
  2. First, as in rank, place, etc.; இடம் முதலியவற்றில் முதலாயிருப்பது. முதல் நீடும்மே (தொல். எழுத். 458)
  3. Cause; காரணம். நோய் முத னாடி (குறள், 948)
  4. God, as the First Cause; மூலக்காரணனான கடவுள். மூவாமுதலாய் நின்ற முதல்வா (திருவாச. 27, 10)
  5. One who is first or oldest; முதலாவான். முதலாய நல்லானரு ளல்லால் (திவ். இயற். 1, 5.)
  6. Best, that which is superior; சிலாக்கியம் அல்லது ஏற்றம். முதன் மாணாக்கன்
  7. That which is qualified; விசேடி யம். (சைவப்.)
  8. Principal, fund, capital, money yielding interest; மூலதனம். முதலிலார்க் கூதியமில்லை (குறள், 449)
  9. Root; வேர். முதலி னூட்டுநீர் (அரிச். பு. மீட்சி. 17)
  10. Tuber; கிழங்கு
  11. Base, foot, bottom or lowest part of anything; அடிப்பாகம். வாடிய வள்ளி முதலரிந்தற்று (குறள், 1304)
  12. Stump; lowest part of stem; மர முதலியவற்றினடி. வேங்கையைக் கறுவுகொண்டதன் முதற் குத்திய மதயானை (கலித். 38)
  13. Place; இடம். சுரன்முதன் மராத்தவரி நிழல் (சிறுபாண். 8)
  14. (Akap.) See முதற்பொருள்
  15. முதலெனப்படு வது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப தொல். பொ. 4)
  16. Whole, integral thing; பிண்டப் பொருள். முதலுஞ் சினையும் (தொல். சொல். 89)
  17. Stock, store; செலவுக்காகச் சேமிக்கும் பொருள். திருப்பூ மண்டபத்துக்கு முதலாக அளக்கவும் (S. I. I. iii, 215, 11)
  18. (Mus.) A variety of tune; இசைப்பாட்டுள் ஒன்று. (சிலப். 3, 41-2, உரை.)
  19. Cost price; சொத்தின் கொள்முதல்விலை. Colloq
  20. (Gram). See முதலக்கரம். (நன். 59). — adv. See முதலான. (W.) — prep
  21. (Gram.) Termination of the locative case; ஏழாம் வேற் றுமை யுருபு. (நன். 302.) குணமுதற் றோன்றிய . . . மதியின் (மதுரைக். 195)
  22. (Gram.) Termination of the ablative case, meaning 'from henceforth'; ஐந்தாம் வேற்றுமை யுருபு. அதுமுதல் இது வரை
முதல் (mutal) — noun
  1. Document; பத்திரம். இந்த முதல் இற்றைநாள் முதலியான் காட்டுகையில் (S. I. I. v, 90).

IndoWordNet

முதல் — noun
  1. ஒரு வேலையின் அடிப்படை நிலை.
முதல் — adjective
  1. முன்னுரிமை பெற்று முதலிடம் வகிப்பது.
முதல் — noun
  1. உறுதி செய்யப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட செல்வம்

தொடக்கம் துவக்கம் ஆரம்பம் மூலம் ஆதி செயல் திறப்புவிழா தொடக்கவிழா துவக்கவிழா அறிமுகவிழா ஆரம்பவிழா முதலடி அறிமுகம் படைப்பு துவக்கி வைத்தல் தொடங்கி வைத்தல் முதன்மை நிச்சயிக்கப்பட்ட முதலீடு மூலதனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முதல்
  1. ஆதி
  2. இடம் முதலியவற்றில் முதலா யிருப்பது
  3. காரணம்
  4. மூலகாரணனான கடவுள்
  5. முதலானவன்
  6. ஏற்றம்
  7. மூலதனம்
  8. வேர்
  9. கிழங்கு
  10. அடிப்பாகம்
  11. மரம் முதலிய வற்றின் அடி
  12. இடம்
  13. அகப்பொருட்குரிய நிலம்
  14. பொழுதுகளின் இயல்பு
  15. பிண்டப் பொருள்
  16. செலவுக்காகச் சேமிக்கும் பொருள்
  17. இசைப்பாட்டுள் ஒன்று
  18. சொத்தின் கொள் முதல் விலை
  19. பன்னிரு உயிரெழுத்தும் பதினெட்டு மெய்யெழுத்தும்
  20. தொடக்கமாக வுடைய
  21. ஏழாம் வேற்றுமையுருபு
  22. ஐந்தாம் வேற்றுமையுருபு
  23. பத்திரம்