மூரி

மாபெரும் சிறப்பு strength, strong splendour

Moore

Tamil Wiktionary

மூரி — பெயர்ச்சொல் (Noun)
  1. வலிமை
  2. மாபெரும் சிறப்பு
  3. வலிய

[object Object]

Winslow (1862)

மூரி (mūri) — noun
  1. Laziness, apathy, indolence, சோம்பல்
  2. An ox, a bullock, ஏருது
  3. A buffalo, ஏருமை
  4. A crack, a breach, நெரிவு
  5. Antiquity, oldness, பழமை
  6. Greatness, பெருமை
  7. Strength, வலி. (சது.)
  8. Unevenness of a palm-leaf, ஓலைமூரி
  • மூரிமுரித்தல் — Stretching one's self, நெட்டைமுறித்தல்.
  • மூரியோலை — [also முறியோலை.] An uneven palm-leaf, முடக்கோலை.

Fabricius (1972)

மூரி — noun
  1. laziness, indolence, சோம்பல்
  2. an ox, a bullock, எருது
  3. antiquiy, பழமை
  4. (முகரி) unevenness of a palm leaf
  • மூரியோலை–மூறியோலை–முகரியோலை — an uneven palm leaf.

Tamil Moli Akarathi (1928)

மூரி (mūri)
  1. ஏருது, ஏருத்துத்திமில், ஏருமை, ஓலை, மூரி, சோம்பல், நெரிவு, பழ மை, பெருமை, வலி
மூரி (mūri)
  1. ஏருது, ஏருமை, சோம்பல், நெ ரிவு, பழமை, பெருமை, வலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மூரி (mūri) — noun
  1. Strength; வலிமை. (பிங்.) மூரி வெஞ்சிலை (கம்பரா. கும்பகருண. 26)
  2. Greatness; பெருமை. மூரிக்கடற்றானை (பு. வெ. 3, 3). (பிங்.)
  3. Antiquity; பழமை. (W.)
  4. Old age; கிழம். மூரி யெருத்தாலுழவு (இன். நாற். 21)
  5. Buffalo; எருமை. மோட்டிள மூரி யுழக்க (கம்பரா. அகலிகை. 69). (பிங்.)
  6. [M. mūri.] Ox, bullock; எருது. நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு (பதிற்றுப். 67, 15). (பிங்.)
  7. Taurus of the zodiac; இடப ராசி. (திவா.)
  8. Hump; திமில். (யாழ். அக.)
  9. cf. முரி. Bit, part; துண்டம் வெண்ணிண மூரி யருள (புறநா. 393)
  10. See முகரியோலை. (W.)
  11. Enmity; முரண். (பிங்.)
  12. Laziness, indolence; சோம்பல். (பிங்.)
  13. Shaking off laziness; சோம்பல் முரிப்பு. பொய்த்ததோர் மூரியா னிமிர்ந்து (கம்பரா. உண்டாட். 35)
  14. cf. முரி. Crack, breach; நெரிவு. (W.)

IndoWordNet

மூரி — noun
  1. ஒட்டகத்தின் முதுகின் கூன்
மூரி — noun
  1. இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

திமில் முண்டு பிசல் வெளிப்பாகம் புறப்பாகம் காளை எருது ஏறு இடபம் காளைமாடு. விலங்கு மிருகம் ஆணேறு உமண்பகடு காரி விடை விருஷபம் நந்தி அகோஹி மகுலா ஏர்க்காளை ஏராண்மைக்காளை முழவுக்காளை உழவிடைக்காளை நொண்டிக் காளை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மூரி
  1. வலிமை
  2. பெருமை
  3. பழைமை
  4. கிழம்
  5. எருமை! எருது
  6. இடபராசி
  7. திமில்
  8. துண்டம்
  9. காண்க: முகரியோலை
  10. முரண்
  11. சோம்பல் முரிப்பு
  12. சோம்பல்
  13. நெரிவு