அறிவியல். உயிரினத்தின் ஒரு பெரும்பிரிவைச் சேர்ந்தவை. அறிவியல் அல்லாப் பொது வழக்கில்: பொதுவாக நிலத்தில் வாழும் உயிரிகள், ஆனால், இவற்றுள் பறவைகளும் பூச்சிகளும் நுண்ணுயிர்களும் விலங்குகள் என்னும் வகைப்பாட்டில் அடங்காதன. விலங்குகளால் தானாகவே உணவு தயாரிக்க இயலாது. இவை தாவரங்களையோ மற்ற விலங்குகளையோ தின்று உயிர் வாழ்கின்றன. பெரும்பாலான விலங்குகள் இடம்பெயரும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன.
to be transverse synonym of விலகு (vilaku) to hinder, obstruct
Tamil Wiktionary
விலங்கு
அறிவியல். உயிரினத்தின் ஒரு பெரும்பிரிவைச் சேர்ந்தவை.
அறிவியல் அல்லாப் பொது வழக்கில்: பொதுவாக நிலத்தில் வாழும் உயிரிகள், ஆனால், இவற்றுள் பறவைகளும் பூச்சிகளும் நுண்ணுயிர்களும் விலங்குகள் என்னும் வகைப்பாட்டில் அடங்காதன.
விலங்குகளால் தானாகவே உணவு தயாரிக்க இயலாது. இவை தாவரங்களையோ மற்ற விலங்குகளையோ தின்று உயிர் வாழ்கின்றன. பெரும்பாலான விலங்குகள் இடம்பெயரும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன.
தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்குகள் தாவர உண்ணிகள் எனவும் விலங்குகளை உண்பவை ஊனுண்ணிகள் எனவும் இவை இரண்டையும் உண்பவை அனைத்துண்ணிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
[object Object], [object Object]
Winslow (1862)
விலங்கு (vilaṅku) — noun
Fetters for the feet and hands, தளை
That which is transverse or across, குறுக்கு
Beast in general, மிருகம்
Round mark added to a letter, as மேல்விலங்கு, the top of a letter, the symbols of இ and ஈ; கீழ்விலங்கு, the lower part of a letter or some of the symbols of உ and ஊ
விலங்கரசு — A lion, the king of beasts, சிங்கம். (சது.)
விலங்கு (vilaṅku) — infinitive
, கிறேன், விலங்கினேன், வேன், விலங்க, v. n. To spread, stand apart, பிரிய
To get away, recede from, stand off, as விலக
To scintillate, to twinkle, துலங்க. (p.)
விலங்கிநிற்க — [com. விலகிநிற்க.] To stand afar off.
Fabricius (1972)
விலங்கு — noun
fetters, தளை
an animal, a beast, மிருகம்
that which is transverse of cross, குறுக்கு
விலங்கரசன் — a lion, the king of beasts.
விலங்கு சாதி–விலங்கினம் — beasts.
விலங்குபோட–தைக்க–மாட்ட — to fetter, to chain.
விலங்கு — v. i.
v. i. spread, stand apart, பிரி II. v.
get away, stand off, விலகு
twinkle, துலங்கு
வலையை விலங்கவைக்க — to spread the net clear on the ground.
That which is transverse, across or crosswise; குறுக் கானது. விலங்ககன்ற வியன்மார்ப (புறநா. 3)
Beast or bird, as having their bodies not erect but horizontal; மாவும் புள்ளும். விலங்கு மக்களும் வெரூஉப்பகை நீங்கும் (மணி. 12, 95). விலங்கானே னாதலினால் விலங்கினேன் (கம்பரா. சடாயு. 22)
Deer; மான். விலங்கு மலைத்தமைந்த . . . நாட்டத்து (மலைபடு. 45)
Difference; வேறுபாடு. விலங்கோரார் மெய்யோர்ப் பின் (கலித். 52)
Obstruction, hindrance; தடை. இந்த வினையுடல் விலங்காகும் (ஞானாவா. லீலை. 34)
Curve added to a consonant, above or below as the symbol of the vowel i or ī or u or ū; இ ஈ உ ஊ முதலிய உயிர்களைக் குறிக்கும் அடையாளமாக மேலுங் கீழுமுள்ள வளைவு. (தொல். எழுத். 17, உரை.)
Hill; குன்று. (அரு. நி.)
(Gram.) See விலங்கல்
(பி. வி. 40, உரை.)
விலங்கு (vilaṅku) — noun
Body, as fettering the soul; உடல். (திவ். திருச்சந். 56, வ்யா. பக். 162.)
IndoWordNet
விலங்கு — noun
குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.
விலங்கு — noun
மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.