to buy, purchase to get, gain to take, receive, accept
Winslow (1862)
வாங்கு (vāṅku) — noun
A dagger, பிச்சுவா
[for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை
வாங்கு (vāṅku) — infinitive
, கிறேன், வாங்கினேன், வேன், வாங்க, v. a. To receive or take a thing, ஏற்க
To buy, கொள்ள
To bend, வளைக்க
To admit, to receive a person, வரவழைக்க
To draw back, retract, withdraw, பின் வாங்க. இதைஏங்கேவாங்கினாய். Where did you buy this? சுவர்சற்றுவாங்கியிருக்கிறது......The wall has given way a little. உன்கையைவாங்கு. Take a way your hand. ஒருவனைக்கையைவாங்குகிறது. Cutting one's hand off. இதைநீவாங்கிக்கொள். Take this
வாங்காமல் — Without intermission, incessantly. வாங்காமலிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். They were drawing water continually. ஏன்வீட்டுக்குவாங்காமல்வருகிறான். He always comes to my house.
வாங்கி — A pimp. (lit.) one whe receives. See சங்கம்வாங்கி.
வாங்கிக்கொடுக்க — To buy for another. See கொடு.
வாங்கிப்போக — To go off, to cease. தண்டுவாங்கிப்போயிற்று. The army has decamped. மேகம்வாங்கிப்போயிற்று. The clouds are dispersed. நோவுவாங்கிப்போயிற்று......The pain has ceased.
வாங்கிப்போட — To take off, to remove. அவனுக்குத்தியோகத்தைவாங்கிப்போட்டார். He dismissed him.
வாங்க — Receiving, or admitting, ஏற்றல், வரவழைத்தல். 2. Buying, கொள்ளல். 3. Bending, crookedness, bend of a wall, &c., வளைவு. (சது.) 4. Untoward feeling, மனஸ்தாபம். 5. Distance, தூரம். 6. Depth, ஆழம். இரண்டுபேருக்கும்வாங்கலாயிருக்கிறது. They both have ill-will against each other. அதுக்கிதுவாங்கல். This is farther than that. இந்தநிலம்வாங்கலாயிருக்கிறது. This ground is slippery. (R.) வாங்கலினாற்கடலிலிறங்கப்படாது. The sea is too deep to ford. (Beschi.)
Fabricius (1972)
வாங்கு — noun
a kind of dagger, சுரிகை
(for.) a bench, a seat, வாங்குபலகை
வாங்கு — v. t.
v. t. receive, take a thing given or delivered, பெறு
buy, கொள்
bend, வளை
draw back, retract, பின்வாங்கு
விலைக்கு வாங்க — to buy.
ஒருவனைக் கையை வாங்க — to cut one's hand off.
உன் கையை வாங்கு — take away your hand.
அவனுக்கு வாங்குவாங்கென்று வாங்கு கிறது — he purges incessantly.
அவனை வாங்குவாங்கென்று வாங்கினான் — he gave him a good thrashing.
சுவர் சற்று வாங்கிற்று — the wall has given way a little.
Tamil Moli Akarathi (1928)
வாங்கு (vāṅku)
வளைவு, ஓராசனம், கிரிசு, பிச் சுவா, வாங்கென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாங்கு² (vāṅku) — noun
Bending; வளைவு. (நாமதீப. 768.)
Blow; அடி. பிரம்பால் நாலு வாங்கு வாங்கினான்
Abuse, rebuke; வசவு. அவன் வாங்கின வாங்கு அவனுக்குப் போதும்
வாங்கு³ (vāṅku) — noun
bānk. Dagger; பிச்சுவா.
வாங்கு⁴ (vāṅku) — noun
bank. See வாங்குப்பலகை.
IndoWordNet
வாங்கு — verb
ஒன்று ஒருவரால் கொடுக்கப்பட்டு மற்றொருவரிடம் சேர்தல் தொடர்பான வழக்கு.
வாங்கு — verb
கட்டளையிட்டு அல்லது உரிய ஆலோசனைகள் கூறிப் வேலை செய்ய வைதல்.