அச்சு

பொருள் பெயர்ச்சொல் அடையாளம் ; உயிரெழுத்து ; வண்டியச்சு ; எந்திரவச்சு ; கட்டளைக்கருவி ; உடம்பு ; வலிமை ; அச்சம் ; துன்பம்

fear mould wire mould

Winslow (1862)

அச்சு (accu) — noun
  1. Sanscrit vowels, வடமொழியுயிர்
  2. Type, mould, stamp, கட்டளைக் கருவி
  3. Axle of a carriage, also the cross beam supporting a well shaft, அச்சுலக்கை
  4. A weaver's reed, நெய்வார்கருவியிலொன்று
  5. Soul, the form taken by the soul in any transmigration according to the actions of previous births, உயிர்
  6. Mark, print, impression, அடையாளம்
  7. An epoch, யுகம். (Kalasankalita.)
  • அச்சடிக்க–அச்சுப்பதிக்க — To print.
  • அச்சடியன் — Printed cloth, chintz.
  • அச்சாணி — A linch-pin, தேர்முதலியவற்றின்கடையாணி.
  • அச்சுக்கம்பி — An iron ramrod.
  • அச்சுக்கம்பு — A ramrod of wood.
  • அச்சுப்பலகை — The weaver's reed.

Fabricius (1972)

அச்சு — noun
  1. Sanskrit vowel, வடமொழி யுயிர்
  2. axle
  3. a form or type, mould, stamp, die, கட்டளை
  4. a weaver's reed, அச்சுப்பலகை
  • அச்சடிக்க–அச்சுப்பதிக்க — to print.
  • அச்சடியன் — a printed cloth.
  • அச்சாணி — linch pin.
  • அச்சாணியன்னார் — the most important persons, councilors, prime-ministers.
  • அச்சுக்கோக்க — to compose.
  • அச்சுவார்க்க — to cast types.
அச்சு — noun
  1. புகழ், fame
  2. fear
  • அச்சான்ற — filled with fame.

Tamil Moli Akarathi (1928)

அச்சு (accu)
  1. அடையாளம், உடல், உயிரெ ழுத்து, ஏழுத்து, கட்டளைக்கருவி, தேகம், நெய்வோர் கருவியி னொன்று, பண்டியச்சு, யுகம்
அச்சு (accu)
  1. தென்னாதெனாவென்றுபாடல், பாரணை, ஆளத்தி
அச்சு (accu)
  1. அடையாளம், உயிர், பண்டியச்சு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அச்சு¹ (accu) — noun
  1. Fear; அச்சம். நகை யச்சாக (பரிபா. 3, 33)
அச்சு² (accu) — noun
  1. Mould; கட்டளைக்கருவி. அச்சிலே வார்த்த உருவம்
  2. Wire mould; கம்பியச்சு. கம்பி வாங்கு மச்சென லாயதால் (இரகு. திக்கு. 189)
  3. Printing type; உருக்கெழுத்து
  4. Exact likeness; சரியொப்பு. கடைமாந்த ரச்சாய் (சேதுபு. வேதா. 16)
  5. Sign, mark, print, stamp; அடையாளம். பவளத் திருமார்பி லச்சிட்டவர்க்கு (ஏகாம். உலா. 211)
  6. Weaver's reed instrument for pressing down the threads of the woof; நெய்வோர் கருவிவகை
  7. Comb-like frame in a loom through which the warp threads are passed and by which they are pressed or battened together; நெய்வோர் கருவி வகை
அச்சு³ (accu) — noun
  1. < akṣa
  2. Axle; உருள் கோத்த மரம். உருள்பெருந்தேர்க் கச்சாணியன்னா ருடை த்து (குறள், 667)
  3. Axle-bolt. See அஞ்சுருவாணி. (பிங்.)
  4. Central pin, or handle of a millstone; ஏந்திரவச்சு
  5. Support, basis; ஆதாரம். செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு (வள்ளுவமா. 21)
  6. Strength; வலிமை. வேந்தடர்த்த வச்சு (சீவக. 2777)
  7. Original form; மூலரூபம். சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னவச் சழியும் (சி. சி. 2, 42)
  8. Body; உடம்பு. அச்செடுத்திடு முயிர்கள் (கந்தபு. சூரனமை. 137)
  9. Ridge in a field; செய்வரம்பு. அச்சுக் கட்டின நிலம்

IndoWordNet

அச்சு — noun
  1. இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
அச்சு — noun
  1. ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
அச்சு — noun
  1. ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.
அச்சு — noun
  1. வாகனத்தின் இரு சக்கரங்களின் மையத்தில் செல்லும் இரும்புத் துண்டு.
அச்சு — noun
  1. காகிதம், துணி முதலியவற்றின் மேல் எழுத்தாகவோ சித்திரமாகவோ பதிக்கப்படுவது

அறிகுறி அடையாளம் லச்சினை கூறு இலச்சினை தன்மை கோள் குணம் எழுதப்பட்ட குறியீடு எழுதிய குறியீடு திருஷ்டி மை திருஷ்டிபொட்டு கேள்விக்குறி வினாக்குறி நிறுத்தற்குறியீடு முத்திரைத்தாள் முத்திரை அச்சு பாதச்சின்னம் அடிச்சுவடு பதக்கம் முத்திரை இலாஞ்சனை சுவடு விசா கை அச்சு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அச்சு
  1. அடையாளம்
  2. உயிரெழுத்து
  3. வண்டி யச்சு
  4. எந்திரவச்சு
  5. கட்டளைக்கருவி
  6. உடம்பு
  7. வலிமை
  8. அச்சம்
  9. துன்பம்