அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும், ( எடுத்துக்காட்டு ) - நிறுத்தலளவையில் கழஞ்சு,கிராம் என்பன அலகுகள் ஆகும். அறிவியலார் எந்த ஓர் இயற்பொருளையும் (Physical Quantity) அளக்க ஒரு அலகை (unit of measure) கையாளுவர். இவ்வகை அலகுகளில் பலவும் உலகளாவிய ஒரு அமைப்பால்(SI units) தகுதரப்படுத்தப்படுகிறது.
bird's beak pointedness jaw
Tamil Wiktionary
அலகு — பெயர்ச்சொல் (Noun)
[object Object]
Winslow (1862)
அலகு (alaku) — noun
The blade of a weapon or instrument, the top or head of an arrow, ஆயுதத்தினலகு
Weapon, arms in general, ஆயுதப்பொது
Glow worm, மின்மினி
A bird's beak, பறவைமூக்கு
An ear of rice or other grain, பயிர்க்கதிர்
Number, calculation, ஏண்
Poetic numbers of feet or syllables, செய்யுளலகு
Cowries, small shells used as signs of numbers in reckoning, பலகறை
Seeds of மகிழ் tree, மகிழம்விதை, Mimusops elengi, L
Grains of paddy, நென்மணி
A broom, a besom, துடைப்பம். (p.)
(c.) The mandibles, jaws, கொடிறு
[prov.] Breadth, extension, விசாலம்
A weaver's stay or staff to adjust a warp, நெசவுநூற்பாவினலகு. அரணை அலகுதிறக்கிறதில்லை. The eft does not bite, (lit.) does not open its jaws
அலகிட — To reckon, compute, number, கணக்குப்பார்க்க. 2. To measure verse, scan, செய்யுட்கோசையூட்டும்பொருட்டலகிட. 3. To sweep the sacred precincts of a temple as one of the duties of the சரிதைக்காரன், or religionist of the lowest degree in the Siva system, கோயிலலகிட.
அலகுகட்ட — To bind (charm) the mouth of a serpent, a dog, &c. 2. To charm a weapon to prevent its cutting, &c. 3. To settle an account.
அலகுகழிக்க — To subtract or deduct a number in reckoning with kernels, seeds, &c.
அலகுகிட்டுகை — Having the lock-jaw.
அலகுகூடை — A basket made of twigs closely twisted together, used to draw water.
அலகுநிலை — The result of a reckoning, as the sum in addition, product in multiplication, &c.
Fabricius (1972)
அலகு — noun
blade of a knife sword etc
the jaw bone, கொடிறு
broom, துடைப்பம்
bird's beak, பறவை மூக்கு
poetic numbers of feet or syllables
a small staff used by weavers to adjust a warp
weapon
grains of paddy
sharpness, pointedness, கூர்மை
a lakh of areca nuts, லக்ஷம் பாக்கு
அலகிட — to scan verses. to sweep with a broom.
அலகுகட்ட — to charm (bind) the mouth of a serpent dog etc.; 2. to settle an account.
அலகுகிட்ட — to have a lock jaw.
அலகு பாக்கு — betel-nut boiled, cut in pieces and dried.