அழல்
நெருப்பு தீக்கொழுந்து வெப்பம், உஷ்ணம்
cry
Winslow (1862)
அழல் (aḻal) — noun
- Fire, நெருப்பு
- Heat, உட்டணம்
- The eighteenth lunar mansion, கேட்டை
- The planet Mars. செவ்வாய்
- Hell, நரகம்
- Pungency of heat upon the tongue from acrimonious plants, &c., ஏரிவு
- Envy, jealousy, rage, கோபம்
- Smarting of a wound, கொதிப்பு
- The burning of a fever, சுரச்சூடு
- The heat or burning of poison in the system, விடத்தெரிவு
- அழலவன்–அழலோன் — The sun, ஆதித்தன். 2. Mars the planet, செவ்வாய். 3. God of fire, அக்கினிதேவன்.
- அழலாடி–அழலேந்தி — Siva, சிவன்.
- அழல்விரியன் — A poisonous snake, as ஏரிவிரியன்.
- அழற்கண்ணன் — Siva, சிவன்.
- அழற்கண்வந்தோன் — Veerapattra, வீரபத்திரன்.
- அழற்பித்தம் — A kind of bilious disease.
அழல் (aḻal) — verbal noun
- –அழலு, கிறேன், அழன்றேன், வேன், அழல. v. n. To burn, be hot, glow as coals on fire, கனல
- To be impatient, irritable; to burn with envy, jealousy, rage, கோபிக்க
- To smart as a wound, be inflamed as the body when poisoned with the bite of a snake, &c., to smart as the mouth after eating pungent spices, &c. ஏரிய
- அழலிக்கை — A burning, smart pang.
- அழற்சி — Burning, heating, smarting, raging, &c. 2. s. Envy, jealousy, irritation, irritability, கோபம்.
Fabricius (1972)
அழல் — noun
- fire, நெருப்பு
- heat, உஷ்ணம்
- Hell, நரகம்
- rage, anger, கோபம்
- the 3rd lunar mansion, கிருத்திகை
- poison, விடம்
- pungency, உரைப்பு
- Mars
- அழற்கண்ணன் — Siva with fiery eyes.
- அழலவன்–அழலோன் — the Sun, the Mars; Fire (Agni).
- அழலேந்தி–அழலாடி — Siva.
- அழல்வண்ணன் — Siva, having the colour of fire.
அழல் — vi.
- , அழலு, I. vi. burn, glow as coals on fire, அனல்; be hot; smart (as a wound), எரி.
- அழலிக்கை–அழற்சி–அழலை — burning, smarting; a pang.
Tamil Moli Akarathi (1928)
அழல் (aḻal)
- அழலென்னேவல், உட்டணம், ஏருக்கு, கள்ளி, கேட்டைநாள், கொ டுவேலி, செவ்வாய், தீ, நரகம், வெப் பம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அழல்¹ (aḻal) — noun
- Fire; நெருப்பு. (கந்தபு. காமத. 90.)
- Flame; தீக்கொ ழுந்து. தீயழ றுவைப்ப (பரிபா. 5, 3)
- Heat; உஷ்ணம். நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வ தூஉம் (நாலடி. 124)
- Pungency; உறைப்பு. அழற் காய் (தைலவ. தைல. 54)
- Burning sensation as of a wound, of medicine in the system; எரிவு. மருந்தழலும் (தைலவ. தைல. 123)
- Poison; நஞ்சு. அழற்கணாகம் (மணி. 23, 69)
- Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.)
- Spurge. See கள்ளி. (மூ. அ..)
- Madar. See எருக்கு. (மூ. அ.)
- Hell; நரகம். அழனம்மை நீக்குவிக்கும் (தேவா. 1225, 4)
- The third nakṣatra. See கார்த்திகை. (கந்தபு திருவவ. 126.)
- The 18th nakṣatra. See கேட்டை. (பிங்.)
- Mars; செவ் வாய். (பிங்.)
- Rage, anger; கோபம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அழல்
- நெருப்பு
- தீக்கொழுந்து
- எரிவு
- வெப் பம்
- கோபம்
- நஞ்சு
- உறைப்பு
- கார்த்திகை