ஆசை

விருப்பு விருப்பம், ஆவல், ஆர்வம் ஒரு பொருள் அல்லது அனுபவத்தை அடைவதற்கான ஏக்கம். எனது ஆசை இதுவே "உலகில் வாழும் மக்கள் பிறருக்கு தொந்தரவு தராமல் வாழ்வதே"

desire, hope wish love, affection

Tamil Wiktionary

ஆசை

[object Object], [object Object]

Winslow (1862)

ஆசை (ācai) — noun
  1. Desire, attachment, strong inclination, விருப்பம்
  2. Avarice, lust, cupidity, concupiscence, இச்சை. (c.)
  3. (p.) A quarter, region, any of the eight points of the compass, திசை. Wils. p. 124. ASHA
  4. Gold, treasure, பொன்.–Note. The desires of the senses are supposed to be all comprised in மண், பெண் and பொன்–as மண்ணாசை, the desire of land or dominion
  5. பெண்ணாசை, lust or sexual desires
  6. பொன்னாசை, desire of wealth, avarice
  • ஆசைகாட்ட — To present a bait, attraction, to excite desire, allure.
  • ஆசைகொள்ள–ஆசைப்பட — To desire, yield to the first impressions of love, desire sexually.
  • ஆசைபுகட்ட–ஆசைபூட்ட — To engross the affections, captivate, ensnare, ஆசையிற்சிக்கச்செய்ய.
  • ஆசைப்பெருக்கம் — Cupidity, lust, strong desire, அவா.
  • ஆசைப்பேச்சு–தித்திக்கப்பேசும்பேச்சு–வசமாக்கும்பேச்சு — 3. Flattery, . 2. Persuasive speech, .
  • ஆசைமருந்திட — To administer a love potion, give a philter, தன்வசமாக்க மருந்திட.

Fabricius (1972)

ஆசை — noun
  1. desire, விருப்பம்
  2. ambition, avarice
  3. lust, இச்சை
  4. gold, பொன்
  5. prospect
  6. point of the compass, திக்கு
  • ஆசைபதம் — allurement.
  • ஆசைபதம் காண்பிக்க–காட்ட — to allure
  • ஆசைகாட்டி மோசம் செய்ய — to allure and then dupe.
  • பேராசை பெரு நஷ்டம் — "" (proverb) "Grasp all, lose all."
  • மூவாசை–மண்–பெண்–பொன் இவைகளின் ஆசை — , , .
  • ஆசைப்பாடு — lust.

Tamil Moli Akarathi (1928)

ஆசை (ācai)
  1. அன்பு, திசை, நீளம், பதி னெண் குற்றத்தொன்று, பொன் மனத்தீக்குண மூன்றினொன்று, மா யை, யாக்கை, விருப்பம்
ஆசை (ācai)
  1. அணங்கு, அருத்தி அரை, ஆதரம் ஆர்த்தி, ஆர்வம், ஆவல், இச்சை, காமர், நசை, நச்சு, நம்பு, நயப்பு, நரம்பு, பற்று பிணை, புரி, பெட்பு, மாதர், மோகம், வயாவு, வாஞ்சை, விதுப்பு, விருப்பு, விழுப்பம், விழைவு, விளரி, விளைவு, வெப்ம், வெம்மை, வேட்கை, வேட்பு
ஆசை (ācai)
  1. திசை, பொன், விருப்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆசை (ācai) — noun
  1. < āšā
  2. Wish directed towards securing a desired object; வேண்டலுறும் பொருட்கட்செல்லும் விருப்பம். (குறள், 360, உரை.)
  3. Desire; விருப்பம்
  4. Avarice, cupidity; பொருளாசை
  5. Sexual appetite; காமவிச்சை
  6. Affection; அன்பு. அரும்பெறற் குமரர்மே லாசை (கூர்மபு. இந்திரத். 42)
  7. Hope, expectation, prospect; பேற்றில் நம்பிக்கை
  8. Gold; பொன். (சூடா.)
  9. Point of the compass; திக்கு. (பிங்.)
ஆசை (ācai) — noun
  1. cf. மாசை. A kind of datura; பொன்னூமத்தை. (பச். மூ.)

IndoWordNet

ஆசை — noun
  1. ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
ஆசை — noun
  1. தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ஆசை — noun
  1. ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய உணர்வு.
ஆசை — noun
  1. ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.
ஆசை — noun
  1. ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

அன்பு காதல் விருப்பம் பாசம் நேசம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் பக்தி பாசம். கடவுள் பக்தி தெய்வ பக்தி இறை பக்தி தேவ பக்தி பரம்பொருள் பக்தி மனித அன்பு மனித நேசம் மனித பாசம் மனித நேயம் தேசப்பற்று ஆவல் அவா வாஞ்சை விழைவு பிரியம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆசை
  1. வேண்டலுறும் பொருட்கண் செல்லும் விருப்பம்
  2. விருப்பம்
  3. பொருளாசை
  4. காம விச்சை
  5. அன்பு
  6. பேற்றில் நம்பிக்கை
  7. பொன்
  8. திசை
  9. பொன்னூமத்தை