விருப்பம்

ஈடுபாடு வாஞ்சை 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. ப்ரீதி யோகத்தின் தனித்தமிழ் சொல்.

desire, wish love, liking, affection, delight

Tamil Wiktionary

விருப்பம்
  1. ஈடுபாடு
  2. ஆவல்
  3. ஆசை
  4. அவா
  5. வாஞ்சை
  6. 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. ப்ரீதி யோகத்தின் தனித்தமிழ் சொல்.

Fabricius (1972)

விருப்பம் — noun
  1. , விருப்பு, s. (விரும்பு) desire, wish, ஆசை
  2. liking, delight, பிரியம்
  • விருப்பமானது — what is desirable or agreeable.
  • விருப்பம் வைக்க — to desire, to long for.
  • விருப்பு வெறுப்பு — desire and aversion.

Tamil Moli Akarathi (1928)

விருப்பம் (viruppam)
  1. ஆசை, பிரியம்
விருப்பம் (viruppam)
  1. மாதர், காதல், வயாவு, வேட் கை, ஆதரவு, ஆசை, அவா, ஆர்வம், நச்சு, நசை, விழைவு, நயப்பு, காமம், இச்சை, பெட்பு, மோகம், ஏட்டை, வெப்பம், பற்று, விழுப்பம், வீழ்த் தல், இவர்தல், கவர்தல், வேண்டல், பேணல், வேட்டல், வெஃகல், தாழ் தல்
விருப்பம் (viruppam)
  1. ஆசை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விருப்பம் (viruppam) — noun
  1. < விரும்பு-
  2. Desire, liking; ஆசை. (சூடா.)
  3. Love, affection; அன்பு
  4. Attachment; பற்று. (பிங்.)

IndoWordNet

விருப்பம் — noun
  1. ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
விருப்பம் — noun
  1. ஆசை நிறைவேரும் நிலை
விருப்பம் — noun
  1. தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
விருப்பம் — noun
  1. ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.
விருப்பம் — noun
  1. ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.

அன்பு காதல் ஆசை பாசம் நேசம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் பக்தி பாசம். கடவுள் பக்தி தெய்வ பக்தி இறை பக்தி தேவ பக்தி பரம்பொருள் பக்தி மனித அன்பு மனித நேசம் மனித பாசம் மனித நேயம் தேசப்பற்று வரவு வரவினம் ஆவல் அவா வாஞ்சை