அன்பு

1) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (குறள் 45) 2) அன்பு சிவம் இரண்டுஎன்பர் அறிவிலார்

affectionate, kind dear affection, love, attachment

Tamil Moli Akarathi (1928)

அன்பு (aṉpu)
  1. ஆசை, தயை, நேசம், பெரி யோரியல்பினொன்று
அன்பு (aṉpu)
  1. அளி, ஆணம், ஆர்வம், இட்டம், ஈரம், காமம், நாரம், நார், நேசம், நேயம், பரிதல், பரிவு, பற்று, பாசம் பரிவு, வாரம், விசுவாசம், அன்றியும் விடாது தொடர்ந்த வன்பு, உழுவல்
அன்பு (aṉpu)
  1. ஆசை, தயை

Winslow (1862)

அன்பு (aṉpu) — noun
  1. Love, affection, attachment, friendship, நேசம்
  2. Grace, favor, kindness, tenderness, தயை
  3. Desire, complacency, ஆசை
  • அற்புத்தளை — The bond of love. (p.)
  • அற்போருரு — Love embodied. (p.)
  • அன்பகன் — A good hearted man; [ex அகம், heart.] (p.)
  • அன்பன் — A husband, கணவன். (p.) 2. An associate, friend, beloved person, தோழன். 3. A pious man, தெய்வபத்தன்.
  • அன்புகாட்ட — To manifest kindness, affection, benevolence, &c.
  • அன்புகூர–அன்புற — To love, feel or cherish kindness, abound in affection.

Fabricius (1972)

அன்பு — noun
  1. , அற்பு, s. love, affection, நேசம்
  2. grace, benevolence, கருணை
  3. devotion பக்தி
  • அன்புகூர–உற–காட்ட–வைக்க–பூண — to love, to show affection.
  • அன்பர் — devotees.
  • அன்பன் — a dearly beloved person, friend.
  • அன்பகன் — a good-hearted man.
  • அன்பார்ந்த ஐய — ! dear sir!
  • அன்பர் குழாம்–அன்பர் கூட்டம்–அன்பர் களின் கூட்டம் — society of friends.

IndoWordNet

அன்பு — noun
  1. ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
அன்பு — noun
  1. நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
அன்பு — noun
  1. மனிதர் அல்லாத பிற உயிர்களிடம் காட்டும் பரிவு.
அன்பு — noun
  1. குழந்தைகள் மேல் காண்பிக்கப்படுகின்ற அன்பு நிறைந்த எண்ணம்
அன்பு — noun
  1. ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும், நேசமும், நட்பும் கலந்த உணர்வு.

காதல் ஆசை விருப்பம் பாசம் நேசம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் பக்தி பாசம். கடவுள் பக்தி தெய்வ பக்தி இறை பக்தி தேவ பக்தி பரம்பொருள் பக்தி மனித அன்பு மனித நேசம் மனித பாசம் மனித நேயம் தேசப்பற்று பிரியம் மனஈடுபாடு ஆவல் ஆர்வம் செல்லம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அன்பு
  1. தொடர்புடையோர்மாட்டு உண்டாகும் பற்று
  2. நேயம்
  3. அருள்
  4. பக்தி

Tamil Wiktionary

அன்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. நேயம்
  2. பரிவு
  3. பாசம்
  4. காதல்
  5. நட்பு
  6. பற்று
  7. கருணை
  8. ஈரம்
  9. நேசம்

[object Object], [object Object]

அன்பர் அன்பன் அன்பளிப்பு உழுவலன்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அன்பு (aṉpu) — noun
  1. Love, attachment; தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று. அன்பொத்த அவர் (பரிபா. 6, 21, உரை)
  2. Affection, friendship; நேசம்
  3. Grace, complacency, benevolence; கருணை. (பிங்.)
  4. Devotion, piety; பக்தி. நரரோ டொத்துத் திரிபவர்க் கன்புசெய்வார் (திருநூற். 86)