ஆய்

தாய்; அம்மா ஆயர்; இடையர்"ஆய்: ஆயென்னேவல், இடையர்க்குரியது, முன்னிலையொருமைவிகுதி" - Book Name: A manual Dictionary of the Tamil language; publ. by the Jaffna-book society, American mission press. Year: 1842 https://play.google.com/store/books/details?id4DxgAAAAcAAJ

mother faeces, excrement, poop to search, examine, investigate

Tamil Wiktionary

ஆய் — பெயர்ச்சொல் (Noun)
  1. தாய்; அம்மா
  2. ஆயர்; இடையர்"ஆய்: ஆயென்னேவல், இடையர்க்குரியது, முன்னிலையொருமைவிகுதி" - Book Name: A manual Dictionary of the Tamil language; publ. by the Jaffna-book society, American mission press. Year: 1842
  3. https://play.google.com/store/books/details?id4DxgAAAAcAAJ
  4. தெரிந்தெடு
  5. களைந்து எடு
  6. ஆராய்; நுட்பமாய்ப் பார்
  7. பறி
  8. அழகிய

[object Object]

ஆய்வு ஆராய்

Winslow (1862)

ஆய் (āy) — noun
  1. Distress, suffering, வருத்தம்
  2. Fineness, minuteness, நுட்பம்
  3. Mother, தாய்
  4. The termination of the 2d person singular, முன்னிலையொருமை விகுதி. (p.)
ஆய் (āy) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ஆய, v. a. To select, choose, cull, தெரிந்தெடுக்க
  2. To separate, garble, pick out the refuse –as stones from rice, withered leaves from greens, &c., களைந்துவிட
  3. To inquire, investigate, examine, consider, reflect, determine after investigation, ஆராய. (p.)
  4. [prov.] To gather, pluck, nip off, பறிக்க. ஆய்ந்தோய்ந்துபாராதான் றான்சாவக்கடவன். He who does a thing inconsiderately should suffer loss. மணற்சோற்றிலேகல்லாய்தல். Selecting stones from the sand, represented as rice, by children in play. This is used for expressing that a writing, &c. is full of blunders. கீரையிற்புல்லாய்தல். Picking grass out of pot-herbs, when boiled and dished
  • ஆயாநெல் — Rice uncleaned, unsifted.
  • ஆயுமுதியோர் — The aged who should be cared for. (p.)
  • ஆயும்யாழ்முனி — The sage skilful on the lyre–Narada, நாரதர். (p.)
  • ஆய்ந்தோர் — Persons of knowledge and research, சான்றோர். 2. Brahmans, பார்ப்பார். (p.)
  • ஆய்மதி — Intelligence. (p.)
  • ஆய்மயில் — A beautiful pea-cock. (p.)

Fabricius (1972)

ஆய் — noun
  1. mother, தாய்; 3 the cowherd caste, இடைச்சாதி
  2. (nurs.). excrement, மலம்
  3. adv. part of ஆ
  4. second person sing. verbal termination as in போனாய்
  5. an exclamation of disgust
ஆய் — v. t.
  1. v. t. pick by removing what is unclean, pick out the weeds or re- fuse, pluck, select, choose, cull, தெரிந்தெடு
  2. examine, investigate, ஆராய்
  3. stab, pierce, குத்து
  4. extol, celebrate, கொண்டாடு; v. t. diminish, குறை
  5. suffer, pain வருந்து
  6. grow beautiful
  7. shake, quiver, tremble
  • கீரையில் புல்லாய்கிறாள் — she pluks grass out of pot herbs.
  • ஆய்ந்து–ஆய்ந்தோய்ந்து–பார்க்க — to search deep into a matter, to think deeply.
  • ஆய்ந்தோர் — persons of knowledge and research.
  • ஆய்–ஆய்தல்–ஆய்வு — . (v. ns.).

Tamil Moli Akarathi (1928)

ஆய் (āy)
  1. ஆயென்னேவல், இடையர்க்குரி யது
  2. ஏவல்விகுதி (உ-ம்) கேளாய், ஒரு வள்ளல் இவன் தனக்குப் பாம்பு கொடுத்த நிலக்கலிங்கத்தை ஆலின் கீழிருந்த இறைவனுக்குக் கொடுத் தோன், தாய், நுட்பம், முன்னிலை யொருமை முற்றுவினைமிகுதி (உ-ம்) சென்றாய், வருத்தம், வினை யுருபு (உ-ம்) கிள்ளாய்
ஆய் (āy)
  1. ஆய்தல், ஆராயென்னேவல், தாய், வருத்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆய்² (āy) — noun
  1. < ஆய்-
  2. Beauty; அழகு. ஆய் பொறி யுழுவை (கலித். 46, 4)
  3. Fineness, minuteness; நுண்மை. ஆய்தொடி யரிவையர் (புறநா. 117, 10)
  4. Smallness; சிறுமை. ஆய்நுதன் மடந்தை (புறநா. 249, 10)
  5. Softness, tenderness; மென் மை. ஆய்கரும்பின் கொடிக்கூறை (புறநா. 22, 15)
  6. Suffering, pain; வருத்தம். (அக. நி.)
ஆய்³ (āy) — noun
  1. cf. ābhīra. The cowherd caste; இடைச்சாதி. மாறுபட மலைந்தாய்ப்படை நெக் கது (சீவக. 426).
ஆய்⁴ (āy) — noun
  1. also யாய் Mother; தாய். அம் முலை நல்கிய வாயென வுவந்தனன் (ஞானா. 35, 10).

IndoWordNet

ஆய் — noun
  1. மனித உடலிலிருந்து ஆசனவாய் வழியாக வெளியேறும் கழிவு.

மலம் கழிவு பி பகரவி திரவம் பறவைஎச்சம் பறவையெச்சம் பறவைகழிவு சாணம் மாட்டுசாணி ஆட்டுப்புழுக்கை லேன்டி வயிற்றுப்போக்கு மலக்கழிச்சல் வயிற்றுக்கழிச்சல் வயிற்றுக்கொதி வயிற்றுளைச்சல் வயிற்றுளைவு வயிற்றெடுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆய்
  1. அழகு
  2. நுண்மை
  3. சிறுமை
  4. மென்மை
  5. வருத்தம்
  6. இடைச்சாதி
  7. தாய்
  8. கடைவள்ளல் களுள் ஒருவன்
  9. மலம்
  10. பொன்
  11. அருவருப்புக் குறிப்பு
  12. முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
  13. ஏவலொருமை விகுதி
  14. ஆக
  15. ஒரு விளியுருபு