இசை

மனதை, இசைய வைப்பது இசையாகிறது. இனிமையாகப் பாடும் பாடல்கள் அல்லது ஓசைகள் புகழ் (ஈதல் இசைபட வாழ்தல்)

music, song sound, noise praise, fame, renown

Tamil Wiktionary

இசை — பெயர்ச்சொல் (Noun)
  1. மனதை
  2. இசைய வைப்பது இசையாகிறது.
  3. இனிமையாகப் பாடும் பாடல்கள் அல்லது ஓசைகள்
  4. புகழ் (ஈதல் இசைபட வாழ்தல்)
  5. சங்கீதம் என்று வடமொழியினர் அழைப்பர்.

[object Object]

இசைவு இசைப்பு இசைக்கருவி இசைத்தமிழ் இசைநூல் இசைப்பாட்டு இசைஞானி இசைக்குடும்பம் இசைத்தட்டு இசைநாடா இசைநிகழ்ச்சி இசைக்கச்சேரி இசையமை இன்னிசை ஏழிசை மெல்லிசை யாழிசை பண்ணிசை திரையிசை துள்ளிசை சேர்ந்திசை சொல்லிசை தமிழிசை கருநாடக இசை பரப்பிசை பின்னணி இசை இசைஞர் இசைக் கலைஞர் musician

Winslow (1862)

இசை (icai) — noun
  1. A sound, noise, ஒலி
  2. Praise, புகழ்
  3. A word, சொல்
  4. A tune, melody, மிடற்றாற்பிறக்குமிசை
  5. Instrumental music, நரம்பிற்பிறக்குமிசை
  6. Sound, harmony in music, a harmonious or musical sound, tone, note, &c., இசைப்பாட்டு. Also a term common to the different parts in music. (p.) (சது.)–The seven principal sounds or notes in the vocal and instrumental music of the Hindus are called, சுரம், in singing, and நரம்பு, on stringed instruments; they are
  7. குரல், the guttural sound, the sound coming from the throat, மிடற்றாற்குரல்
  8. துத்தம், the second tone of the gamut, or நி modulated by the tongue, நாவினாற்றுத்தம்
  9. கைக்கிளை, the sound caused by the palate, அண்ணத்தாற்கைக்கிளை
  10. உழை, the cerebral, or the sound coming from the head, சிரத்தாலுழை
  11. இளி, that which proceeds from the forehead, நெற்றியாலிளி
  12. விளரி, the pectoral, or that which proceeds from the breast, நெஞ்சால்விளரி
  13. தாரம், that from the nose, or nasal, மூக்காற்றாரம்.–These sounds, they compare:
  14. With those of animals–as that of a peacock, a bull, a sheep, &c
  15. With the different tastes of milk, honey, &c
  16. With the different scents of jasmin, nymphœa, &c.–The letters (அட்சரம்.) by which they express these notes are as follow:
  17. ஆஅ
  18. ஈஇ
  19. ஊஉ
  20. ஏஏ
  21. ஐஇ
  22. ஓஒ
  23. ஔஉ.–The time or measure, (மாத்திரை,) of these notes is as follows:- The 1st note குரல் contains 4 measures நான்கு குரல். 2d துத்தம் contains 4 measures நான்குதுத்தம். 3d கைக்கிளை ,, 2 ,, இரண்டுகைக்கிளை. 4th உழை ,, 3 ,, மூன்றுழை. 5th இளி ,, 4 ,, நான்கிளி. 6th விளரி ,, 3 ,, மூன்றுவிளரி. 7th தாரம் ,, 2 ,, இரண்டுதாரம். From the combinations of these notes or sounds, are formed seven different kinds of airs or tunes; (பாலை) viz.:
  24. செம்பாலை, or the air in which the first note is doubled, குரலேகுரல்
  25. படுமலைப்பாலை, the air in which the second and first notes are compounded, துத்தமேகுரல்
  26. செவ்வழிப்பாலை, the air in which the third and the first notes are compounded, கைக்கிளையேகுரல்
  27. அரும்பாலை, the air in which the fourth and the first notes are compounded, உழையேகுரல்
  28. கொடிப்பாலை, the air in which the fifth and first notes are compounded, இளியேகுரல்
  29. விளரிப்பாலை, the air in which the sixth and first notes are compouned, விளரியே குரல்
  30. மேற்செம்பாலை, the air in which the seventh and first notes are compounded, தாரமேகுரல்.–The differences of these tunes are as follow; viz.:
  31. கொடிப்பாலை, a tune higher than செம்பாலை
  32. விளரிப்பாலை and மேற்செம்பாலை, tunes higher than கொடிச்செம்பாலை.–The three different parts in music are:
  33. மந்தவிசை, bass, or the lowest pitch–also called, மந்தரம் or காகுளி
  34. மத்திமலிசை, tenor or medium–also called, மதுரம் or சமன்
  35. தாரவிசை, treble or the highest pitch–also called, உச்சம் or வல்லிசை.–The different parts are not sung together, but one after another in succession–மந்தவிசை, takes its pitch in the key note of the bass–the மத்திமவிசை, in the fifth–and the உச்சம், in the octave. The term is also applied to the several notes or sounds of the octave–also called சுரம்–as the first சுரம், the second சுரம், &c., and the whole are called the சரளி or gamut
  • இசைகேடு — Dissonance, discord, want of harmony, சுரபேதம். 2. Dishonor, disgrace, ill-fame, அவகீர்த்தி. 3. Want of opportunity, inconvenience, inauspiciousness–as of a day, ஒத்துக்கொள்ளாமை. 4. [prov.] Reduced state, emaciated state, இடைந்துபோனநிலைமை.
  • இசைகொள்ள — To be renowned, கீர்த்திபெற.
  • இசைக்குழல் — A musical wind- instrument, ஊதுகுழல்.
  • இசைத்தமிழ் — One of the three kinds of Tamil odes, or other poetry adapted to song–also the various changes made to accommodate language to music, முத்தமிழினொன்று.
  • இசைத்திரிபு — A change of tune by mistake, ஓசைப்பிறழ்வு. 2. Variation in music, இசைமாறுகை. 3. A different enunciation of the same terms, according to the different senses they are intended to convey, இசையறுத்துக்கூறுகை–as செம்பொன்பதின்கழஞ்சு, may be செம்பு ஒன்பதின்கழஞ்சு, the copper is nine கழஞ்சு–or செம்பொன் பதின்கழஞ்சு, the fine gold is ten கழஞ்சு. So குறும்பரம்பு may be குறும்பர் அம்பு, the army of territorial chiefs–or குறும் பரம்பு, a short board used for smoothing ploughed fields.
  • இசைநாள் — The twenty-fifth, also the twenty-sixth lunar mansions, பூரட்டாதி and உத்திரட்டாதி.
இசை (icai) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To join, unite, blend, mingle, இணைய
  2. To agree, suit, be adapted to, to accord with, பொருந்த
  3. To combine, harmonize, to accord in sound, இராக ஓசையொவ்வ
  4. To consent, assent, comply, உடன்பட
  5. To be matched, be like, to pair, become fellows, சரிப்பட. இசையாதாயினும். Though it (the action) may appear unsuitable. (நீதிநெறி.) இசையாவொருபொருள். A thing that cannot be given, got, &c. (நாலடி.)
  • இசைந்தவேளை — Due time.
  • இசை — Closeness, கூடி நிற்கை. (சது.) 2. Union, agreement, இசைவு.
  • இசைவு — Union, agreement, compactness, fitness, unity, harmony, a joining, joint, connection, combination, fitting in, consent, compliance, correspondence, பொருத்தம். அதற்கிசைவாய். Corresponding to it. கின்னரி யோசைக்குமுன் குரலுக்குமிசைவில்லை. There is no harmony or concord between the lute and your voice.
  • இசைவுகேடு — [imp. இசைகேடு.] Disunion, disjunction, disagreement, பொருத்தமின்மை. 2. Disappointment, want of success, abortiveness, காரியத்தவறு. இசைகேடாய்ப்போனகாரியம். An abortive contrivance, an unsuccessful thing.
  • இசைவுபிறழ்வு — [vul. இசகுபிசகு.] Disorder, ஒழுங்கின்மை. 2. Disagreement, இசைவுகேடு. இசைவுபிறழ்வானநாள். An unfavorable, unfair, or unpropitious day.
இசை (icai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To join, combine, reconcile, blend, mingle, சேர்க்க
  2. To bind, tie, fasten, கட்ட
  3. To hum, chant, continue a musical sound, பாட
  4. To say, tell, speak, declare, பேச
  5. (fig.) To give, bestow, yield, produce, ஈய. (பிங்கலந்தை)
  6. v. n. To sound as musical instruments, ஒலிக்க. (p.) நரம்பிசைக்குந்துழனியார்ப்ப. The noise of the stringed instrument resounding
  • இசை — Combination, சேர்க்கை. (சது.)
  • இசைப்பு — Joining, connecting, reconciling, junction, combination, இணைப்பு. 2. Speaking, utterance, telling, சொல்லுகை. (p.)

Fabricius (1972)

இசை — noun
  1. a sound, noise, ஒலி
  2. praise, புகழ்
  3. a word, சொல்
  4. melody, tune, இராகம்
  5. harmony in vocal or instrumental music, இசைப்பாட்டு
  6. agreement, இணக்கம்
  7. gold, பொன்
  8. gain, profit, ஊதியம்
  • இசைகேடு — want of harmony, disunion, disgrace, inconvenience.
  • இசைகொள்ள — to be renowned.
  • இசைத்தமிழ் — lyrical Tamil adapted to music as distinguished from.
  • இயற்றமிழ்–நாடகத் தமிழ் — plain Tamil (prose and poetry) and , dramatic Tamil.
  • இசைமடந்தை — lady of music, Saraswati.
  • இசையாய்–இசைவாய்–இசைய — harmoniously; aptly.
இசை — v. i.
  1. v. i. be apt or meet, agree well together, be to the purpose. join well, be united, பொருந்து
  2. consent to, உடன்படு
  3. to be like, சரிப்படு
  4. harmonize
  5. acquire. get possession of, அடை
  6. be possible, இயலு
  • இசைந்த வேளை — apt time, due time.
  • இசைய — (inf.) harmoniously, aptly, in accordance with.
  • இசைவு — agreement, fitness, harmony, correspondence.
  • அதற்கிசைவாய்–இசைய — corresponding to it.
இசை — v. t.
  1. v. t. join together, combine, பொருத்து
  2. bind, tie, கட்டு
  3. say, tell, பேசு
  4. chant, பாடு
  5. play as on a musical instrument, இசைக்கருவி வாசி

Tamil Moli Akarathi (1928)

இசை (icai)
  1. இசைப்பாட்டு, இசைப்பு, இசை யென்னேவல், இணக்கம், இனிமை ஒலி, கூடிநிற்றல், கொடை, சங்கீத ம், சொல், பண்பு, பாட்டிசை, புகழ் பொன், முத்தமிழினொன்று
இசை (icai)
  1. இராகம், கந்தருவம், காநம், காந் தாரம், தென், நரம்பு, இவற்றுணமந் தவிசையன்பெயர் - காகுளி, மந்தரம், சமனிசையின்பெயர் - துத்தம், மதுரம், மத்திமம், உச்சவிசையின்பெயர் :- தார ம், வல்லிசை
இசை (icai)
  1. 3 - மந்தரம்-மத்திமம்-தாரம்
இசை (icai)
  1. ஏ-குரல்-துத்தம்-கைக்கிளை- உழை-இளி-விளரி-தாரம்
  2. இவற் றுண்மிடற்றாற் குரல்-நாவினாற்றுத் தம், அண்ணத்தாற்கைக்கிளை, சிர த்தாலுழை, நெற்றியாலிளி, நெஞ் சால்விளரி, மூக்காற்றாரம், இங்ஙனந் தனித்தனிப்பிறக்கும், இவையேயே ழ்சுரமெனவும், வீணையி லேழ்நரம் பெனவும்படும், இவற்றிற்கோசையு வமை-மயில்-இடபம், ஆடு, கொக்கு, குயில், குதிரை, யானை, சுவை, யுவ மை, பால், தேன், கிழான் நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி, வாசனையுவ மை-மௌவல், முல்லை, கடம்புவஞ் சி, நெய்தல், பொன்னாரைவிரை, புன்னை அக்கரம்-ஆ,அ,ஈ,இ,ஊ,உ,ஏ,ஏ, ஐ,இஓ,ஒ,ஔ,உ
  3. மாத்திரை- நான்குகுரல், நான்குதுத்தம், இரண் டுகைக்கிளை, மூன்றுழை நான்கிளி, மூன்றுவிளரி, இரண்டுதாரம் இவற் றாலெழுபாலை பிறக்கும் அவையா வன குரலே குரலாலிற் செம்பாலை துத்தமே குரலாயிற் படுமலைப்பாலை கைக்கிளையேகுரலாயினரும்பாலை இளியே குரலாயிற் கொடிப்பாலை, விளரியே குரலாயின் விளரிப்பாலை, தாரமே குரலாயின்மேற் செம்பாலை இவற்றுட் செம்பாலைக்குக் கொடிப் பாலைவலிது, கொடிப்பாலைக் குவிள ரிப்பாலையும் மேற்செம்பாலையும் வ லிது
  4. அன்றியுந் தாரத்துளுழையு முழையுட் குரலுங் குரலுளிளியு மிளியுட்டுத் தமுந்துத் தத்துள்விள ரியும், விளரியுட்கைக்கிளையும் பிற ப்பதுதகுதி-இவற்றிற்கிறைவர் விசு வாமித்திரன், சமதாகிணி, சந்திரன், சூரியன், கௌதமன், காசிபன், ஈச ன்
  5. இவற்றிற்குயிற் ஈசன்
இசை (icai)
  1. 7 - தாரம், உழை, குரல், இனி, துத்தம், விளரி, கைக்கிளை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இசை³ (icai) — noun
  1. < இசை¹-
  2. Union, agreement, harmony; இசைவு. (W.)
  3. Gold; பொன். (அக. நி.)
  4. Gain, profit; ஊதியம். இசை பெறுவா னெண்ணி யிழந்தாள் முதலும் (சிவப்பிர. வெங்கையுலா. 328)
இசை⁵ (icai) — noun
  1. < இசை⁴-
  2. Sound, noise; ஓசை. விண்ணதி ரிமிழிசை கடுப்ப (மலைபடு. 2)
  3. Word, from its being a combination of the sounds of letters which, together, convey a meaning; சொல். இசைதிரிந் திசைப்பினும் (தொல். பொ. 195)
  4. Praise, fame, renown, opp. to வசை; புகழ். ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் (குறள், 1003)
  5. Song, music; இசைப்பாட்டு. வாய்த்தில விசையென வாயுலர்ந்தனள் (திருவாலவா. 57, 25)
  6. Instrumental music; நரம்பிற் பிறக் கும் ஓசை. இன்னிசை வீணையி லிசைந்தோன் காண்க (திருவாச. 3, 35)
  7. Sweetness, agreeableness; இனிமை. (அக. நி.)
  8. Modulation of the voice in recitation; pitch of three degrees, high, low and middle, ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை
  9. (Pros.) Foot. See சீர். (யாப். வி. 22.)
  10. The gamut containing the seven notes, viz., குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; ஸ்வரம். (பெருங். வத்தவ. 5, 6.)
இசை¹ (icai) — noun
  1. Bounty, liberality; வண்மை. (அக. நி.)