கன்னி
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- कन्या--க1ந்யா---மூலச்சொல் aloe barbadensis..--பொருள் 16க்கு clitoria ternatea..--பொருள் 17க்கு
the Zodiac sign Virgo a virgin woman
Tamil Wiktionary
கன்னி
குமரி இளமை புதுமை முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர் அழிவின்மை பெண் () தவப் பெண் () என்றும் இளமையழியாத பெண் சத்தகன்னியர் () துர்க்கை பார்வதி () குமரியாறு கன்னியாராசி () புரட்டாசி மாதம் காண்க...அத்தம் நட்சத்திரம் () தசநாடியிலொன்று ( 3 26 உரை.) காண்க...கற்றாழை () காண்க...காக்கணம் ()
Winslow (1862)
கன்னி (kaṉṉi) — noun
A virgin, a maiden, a young unmarried woman, குமரி Virgo, a sign of the zodiac, ஓரிராசி. Wils. p. 187. KANYA [in mythology] A river that flows into the sea at Cape Comorin, regarded as a sacred virgin, ஓராறு. (c.) (p.) Youthfulness, tenderness, juvenility, இளமை Virginity, கற்புக்கெடாமை A woman, பெண் The thirteenth lunar asterism, அத்தநாள் The wild or Socotrine aloe, an evergreen, கற்றாழை. Aloe perfoliata A wild creeper, the காக்கணம் Unfading, imperishable, eternal youth, freshness, vigor, evergreen, அறிவில்லாமை A female ascetic, தவப்பெண் A female possessing eternal youth–spoken of the goddesses or celestial females, தெய்வப்பெண் Durga, துர்க்கை A plant, காவிளை. (Rott.)
கன்னிகழியாதஆண்பிள்ளை — A chaste youth. கன்னிக்கால் — The first post set up in the wall of a new house facing south, decked with cloth, in imitation of a female, முதல்நாட்டுத்தம்பம். See கலியாணம். கன்னிக்கால்நாட்ட — To set up the first post in a large building. 2. To plant the first marriage post. கன்னிக்குட்டி — The first kid of lamb. கன்னிக்கோழி — A pullet nearly arrived at maturity. கன்னிச்சவ்வு–கன்னிமுத்திரை — The hymen.
Fabricius (1972)
கன்னி — noun
a virgin, maiden, a young unmarried woman, குமரி Virgo in the Zodiac, கன்னியாராசி youthfulness, இளமை virginity, கற்புக் கெடாமை a female ascetic the month, புரட்டாசி aloe, கற்றாழை
கன்னிகழியாத ஆண்பிள்ளை — an unmarried man. கன்னிக்கோழி — a pullet nearly arrived at maturity. கன்னிக்கால்–கலியாணக் கால் — the first post put up in a new-built house dressed as a female, see . கன்னிமை–கன்னித்துவம் — virginity. கன்னி–மை–முத்திரை–அழியாத பெண் — (-, -) , an undefied maiden, a girl who has not lost her virginity. கன்னிமார் — virgins.
Tamil Moli Akarathi (1928)
கன்னி (kaṉṉi)
அத்தநாள், அழிவில்லாள், அழி வின்மை, இளமை, ஓரிராசி, ஓராறு, கரந்தை, கற்புகெடாமை, கற்றா ழை, காக்கணஞ்செடி, காவிளை, கு மரி, தவப்பெண், துர்க்கை, தெய் வப்பெண், பார்வதி, பெண்
கன்னி (kaṉṉi)
குமரி கன்னியாற்றிற்குத் தெற்குள நாடுகள் முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து அகத்திய னாரும் இறையனாரும் குமாரவேளும் முரிஞ்சியூர்முடிநாகராயரும் நிதியின் கிழவனும் ஏன்றிவருள்ளிட்ட நாலா யிரத்து நானூற்று நாற்பத் தொன்ப தின்மர் ஏண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் கலரியா விறையு முள்ளிட்டவற்றைப் புனை ந்துதெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பத்திற்றியாண்டு இரீஇயினார்காய் சின வழுதிமுதற் கடுங்கோனீறாயுள் ளார் ஏண்பத் தொன்பதின்மர் அவ ருட் கவியரங்கேற்றினார் ஏழுவர் பா ண்டியருள் ஒருவனாகிய சயமாகீர்த்தி யென்னும் நிலந்தருதிருவிற் பாண் டியன் தொல்காப்பியம் புலப்படுத் துஇரீஇயினான் அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலிமுகத்திற்கு வட வெல்லையாகிய பஃருளி யென்னு மாற்றிற்கும்குமரியென்னும் ஆரறிற குமிடையே ஏழுநூற்றுக் காவதவா றும் இவற்றின் நிர்மலி வானத்தைப் போன்றுமலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ் மதுரைநாடும் ஏழ்முன்பாலை நாடும் ஏழ்குண கரைநாடும் ஏழ்குரும்பனை நாடுமென்னும் இந்த நாற்பத்தொ ன்பதுநாடும், குமரி, கொல்ல முத லிய பன்மலைநாடும், காடும்பதியும், நதியும், தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறுங் - கடல்கொண் டொழிந்தது ஏன்ப
கன்னி (kaṉṉi)
அத்தநாள், அழிவில்லாள், அழி வின்மை, இளமை, ஓர்வகையாறு, ஓர்வகையிராசி, கற்றாழை, காக்கணஞ் செடி, குமரி, தவப்பெண், துர்க்கை, தெய்வப்பெண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கன்னி (kaṉṉi) — noun
Virgin, maiden, young unmarried woman; குமரி. கன்னிதன்னைப் புணர்ந்தாலும் (சிலப். 7, மன்னுமாலை.) Youthfulness, tenderness, juvenility, virginity; இளமை. கன்னிப் புன்னை (திருக்கோ. 177) Freshness; புதுமை. கன்னிநீலக்கட் கன்னி (சீவக. 900) State of being earliest in time; முதன்முதலான நிகழ்ச்சி. கன் னிப்போர் Imperishable state; அழிவின்மை. கன்னிமா மதில்சூழ் கருவூர் (திவ். பெரியதி. 2, 9, 7) Woman; பெண். (சூடா.) Female ascetic; தவப் பெண். (சூடா.) Female possessing perpetual youth, as celestials; என்றும் இளமையழியாத பெண். சத்தகன்னியர். (பிங்.) Durgā; துர்க்கை. கன்னிசெங்கோட்டம் (கல்லா. 58) Pārvatī; பார்வதி. (பிங்.) Name of a river that flowed in ancient times, south of Cape Comorin; குமரியாறு. கன்னியழிந்தனள் கங்கை திறம் பினள் (தமிழ்நா. 81) Virgo, a zodiacal sign; கன்னியாராசி. (பிங்.) The month Puraṭṭāci; புரட்டாசி. (தைலவ. பாயி. 55.) The 13th nakṣatra. See அத்தம்⁸. (திவா.) A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; தசநாடியிலொன்று. (சிலப். 3, 26, உரை.) Aloe. See கறறாழை. (சூடா.) Mussell-shell creeper. See காக்கணம். (திவா.)
கன்னி (kaṉṉi) — noun
Fragrant basil; கரந்தை. (சங். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கன்னி
குமாரி, மணம் ஆகாத பெண் இளமை அழிவில்லாள் புதுமை முதனிகழ்ச்சி அழி வின்மை பெண் தவப்பெண் தெய்வப் பெண் இளமைகுன்றாப் பெண் துர்க்கை பார்வதி குமரியாறு கன்னிராசி புரட்டாசி அத்தநாள் காக்கணங்கொடி கற்றாழைச் செடி கரந்தை. கன்னிக்காய் - முதன்முதலில் காய்க்கும் காய். கன்னிக்காய்ச்சல் - புரட்டாசி மாதத்தில் காயும் வெயில் மிகுதி. கன்னிக்கால் - கலியாண முகூர்த்தக்கால் புது வீட்டின் மதிலில் தென்முகமாக முதலில் நடும் சீலை சுற்றிய கம்பம். கன்னிக்காவல் - கன்னிப் பருவத்துக் காக்குங் கற்பு. கன்னிக்குட்டி - முதலில் போடும் ஆட்டுக்குட்டி. கன்னிக்குடம் - பன்னீர்க்குடம், கருப்பையின் ஒரு பகுதி. கன்னிக்குடமுடைதல் - பேறுகாலத்தில் முதலில் வெளிப்பட்டு வரும் நீர். கன்னிகம் - மணித்தக்காளி. கன்னிகழிதல் - மணம்புரியப் பெறுதல். கன்னிகாதானம் -கன்னி3பை ஆடவனுக்குக் , கொடையாகத் திருமணம் செய்துகொடுக்கும் ' முறை, கன்னிகாமடம்-கி றித் தவப் பெண்துறவியர் வசிக்கும் இடம். கன்னிகாரம் - கோங்குமரம். கன்னிகை - குமரி தாமரைக்கொட்டை மொட்டு. கன்னிச்சவ்வு - கன்னித் தன்மை நீங்குவதற்குமுன் யோனியை மூடியுள்ள சவ்வு.
சொல் அகராதி
சொல் தேடு