கொள்கை
- policy doctrine ஓர் எண்ணம் சற்று
taking, accepting policy opinion, notion, principle, doctrine, tenet
Tamil Moli Akarathi (1928)
கொள்கை (koḷkai)
- அறிவு, குணம், கோட்பாடு, சினேகம், செய்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொள்கை (koḷkai) — noun
- < id
- Taking, accepting; பெறுகை. பலியிடிற் கொள்கை பழுது (சைவச. பொது. 388)
- Opinion, notion; principle; tenet, doctrine; கோட்பாடு. குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார் (நாலடி, 141)
- Observance, vow; விரதம். தாவில் கொள்கை (திருமுரு. 89)
- Conformity to moral principles, good conduct; ஒழுக்கம். குலந்தீது கொள்கை யழிந் தக்கடை (நான்மணி. 94)
- Event, happening; நிகழ்ச்சி. புகுந்த கொள்கை யுடனுறைந் தறிந்தா னென்ன (கம்பரா. முதற்போர். 132)
- Quality, nature, build; இயல்பு. கொம்பி னின்று நுடங்குறு கொள்கையார் (கம்பரா. கிளை. 10)
- Pride; செருக்கு. தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து (சிலப். 5, 145)
- Liking, fondness, regard, attachment, intimacy; நட்பு. (J.)
- A kind of vessel; பாத்திரவகை. (I. M. P. Pd. 300.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கொள்கை
- கருத்து
- கோட்பாடு
- பெறுகை
- நோன்பு
- ஒழுக்கம்
- நிகழ்ச்சி
- இயல்பு