தகுதி

பொருத்தம் த-தன்னம்பிக்கை கு-குறிக்கோள்

fitness, meetness, suitability, appropriateness, adequacy, propriety nature, property worthiness, excellence, greatness

Tamil Wiktionary

தகுதி — பெயர்ச்சொல் (Noun)
  1. பொருத்தம்
  2. த-தன்னம்பிக்கை
  3. கு-குறிக்கோள்
  4. தி-திட்டமிடல்

Winslow (1862)

தகுதி (takuti) — noun
  1. Fitness, meetness, suitableness, decency, decorum, adaptation, adequacy, ஏற்றது
  2. Propriety, consistency, commendableness, உற்றது
  3. Worthiness, eligibility, தகைமை
  4. Excellence, good quality, estimableness, மேன்மை
  5. Means, capacity, influence, pecuniary ability, வல்லமை
  6. Equity justice, நேர்மை
  7. Forbearance, patience, meekness, பொறுமை
  8. Good conduct, morality, ஒழுக்கம்
  9. Knowledge, learning, discretion, அறிவு
  10. Commensurableness, proportionateness, பொருத்தம்; [ex தகு v.] (c.) நம்முடையபாவங்களுக்குத்தகுதியாக. According to our sins. தகுதிக்குத்தக்கது. According to ability. தகுதியானகாரியத்தைவிடலாகாது. It is not proper to leave excellent work undone
  • தகுதியற்றவன் — An unworthy, ineligible, incompetent person. 2. A person of no ability, a poor man.
  • தகுதியானகாலம் — Acceptable time.
  • தகுதியின்மை — Unfitness, inability.
  • தகுதியுள்ளவன்–தகுதியானவன் — A worthy, discreet person.
  • தகுதியோர் — The wise, the learned, the literati, the great sages. 2. Lords, masters, gentlemen. 3. Relatives. (p.)

Fabricius (1972)

தகுதி — noun
  1. fitness, propriety, conveni- ence, ஏற்றது
  2. worthiness, தகை
  3. equity, justice
  4. knowledge discretion, அறிவு
  5. patience, meekness, பொறுமை
  6. morality, ஒழுக்கம்
  • தகுதியாக–தகுதியாய் — fitly, properly.
  • தகுதியானகாலம் — proper season.
  • தகுதியின்மை — unfitness, inability.
  • தகுதியுள்ளவன்–யானவன் — a worthy discreet person.
  • தகுதியோர் — the wise, the learned, the literate, the great sages; 2. lords, gentlemen; 3. relatives.
  • தகுவ–ன — things that are possible, இயன்றவை.

Tamil Moli Akarathi (1928)

தகுதி (takuti)
  1. அறிவு, உரிமை, ஒழுக்கம், குணம், சனக்கூட்டம், நடுநிலை, பொறுமை, பாத்திரம்
தகுதி (takuti)
  1. அறிவு, உரிமை, ஒழுக்கம், குணம், பொறுமை, வினைமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தகுதி (takuti) — noun
  1. < தகு-
  2. Fitness, meetness, suitability, appropriateness, adequacy, propriety; பொருத்தம். மற்றதன் றகுதி கேளினி (புறநா. 18, 17)
  3. (Gram.) See தகுதிவழக்கு. (தொல். சொல். 17.)
  4. Nature, property; குணம். (பிங்.)
  5. Worthiness, excellence, greatness; மேன்மை
  6. Good conduct, morality; நல்லொழுக்கம். (அக. நி.)
  7. Equity, justice, impartiality; நடுவுநிலைமை. தகுதி யென வொன்று நன்றே (குறள், 111)
  8. Forbearance, patience; பொறுமை. தாந்தந் தகுதியான் வென்று விடல் (குறள், 158)
  9. Capacity, pecuniary ability; சக்தி
  10. Position, status; நிலைமை. தகுதிக் குத்தக்கபடி செய்தான். Loc
  11. Knowledge, learning, wisdom; அறிவு. (யாழ். அக.)
  12. cf. தொகுதி. Multitude; கூட்டம். அதிர்ந்தன வானவர் தகுதி (குற்றா. தல. தக்கன்வேள்விய. 21)
  13. Occasion, time; தடவை. பலதகுதி அவனைத் தேடினேன். Loc

IndoWordNet

தகுதி — noun
  1. ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு
தகுதி — noun
  1. ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.
தகுதி — noun
  1. எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிற
தகுதி — noun
  1. ஒருவர் புரிந்துகொள்வதற்காக கொடுக்கப்படும் தகுதி
தகுதி — noun
  1. சிறப்பு.

பொருத்தம் திறமை ஆற்றல் வலிமை சமர்த்து ஒற்றுமை ஒருமைப்பாடு ஐக்கியம் ஒருமுகம். லயம் திறன் நற்பாத்திரம் நல்ல பாத்திரம் உசிதம் சரி முறை தரம் குணம் சிறப்பு தகுதியின்மை அயுத்தம் தகவின்மை வைகல்லியம் பாத்திரம் மனிதன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தகுதி
  1. பொறுமை
  2. பொருத்தம்
  3. தகுதிவழக்கு
  4. மேன்மை
  5. நல்லொழுக்கம்
  6. நடுவுநிலைமை
  7. ஆற்றல்
  8. அறிவு
  9. கூட்டம்
  10. தடவை
  11. குணம்
  12. நிலைமை,