தொங்கல்

hanging

Winslow (1862)

தொங்கல் (toṅkal) — noun
  1. Any thing pendent, hanging, &c., தொங்குதல்
  2. A pendent part of an ornament, ஆபரணத்திற்றொங்கணி
  3. End or corner of a woman's cloth, either hanging or brought up round the neck; end of a man's cloth thrown over the shoulder, முன்றானை
  4. [prov.] Any thing stuck or hanging, ready to fall, ஒட்டுப்பற்றியிருத்தல்
  5. A thing eaten adhering to the bowels, தங்கல்
  6. An ear-ornament in general, காதணி
  7. Hangings or fringes of cloth, shawl, &c., தூக்கங்கள். (c.)
  8. A flower garland, பூமாலை
  9. Tail of a peacock, மயிற்றோகை
  10. A bunch peacock's feathers, for a fan or parasol, பீலிக்குடை
  11. A white umbrella, being an emblem of royalty, வெண்குடை
  12. End, extremity, projection, cape, headland, promontory; end of a street, முனை
  13. Men's hair, ஆண்மயிர். (சது.) தொங்கலுக்குத்தொங்கல். At every corner
  • தொங்கலிலேமுடிய — To tie up in the end of a cloth.
  • தொங்கலுக்குப்பார்க்க — To try to remove an obstruction in the bowels by magic.
  • தொங்கல்போட–தொங்கல்விட — To put the end of the cloth over the shoulder, as a woman.

Tamil Moli Akarathi (1928)

தொங்கல் (toṅkal)
  1. ஆண்மயிர், ஆபரணக்கடைப் பூட்டு, காதணி, குதித்தல், தங்கல், தூக்கங்கள், தொங்குதல், பீலி, பீலிக் குஞ்சம், பீலிக்குடை, பூமாலை, மயிர், மயிற்றோகை, முந்தல், முலைமூடு முத்தரீயம், முனை, வெண்குடை
தொங்கல் (toṅkal)
  1. ஆண்மயிர், ஆபரணத்திற் றொங்கணி, காதணி, தூக்கங்கள், பீ லிக்குடை, பூமாலை, மணிற்றோகை, வியங்கோண்முற்று, வெண்குடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொங்கல் (toṅkal) — noun
  1. < தொங்கு-
  2. Hanging; தொங்குகை. தொங்கல்வார்குழல் (சீவக. 661)
  3. [K. toṅgal, M. toṅṅal.] Anything pendent, hangings; தொங்கற் பொருள். (திருக்கோ. 34, உரை.)
  4. Pendent part of an ornament; ஆபரணத் தொங்கல். (திவா.)
  5. An ear-ornament; காதணி வகை. (யாழ். அக.)
  6. Outer end of a woman's cloth either hanging or brought round the neck; end of a man's cloth thrown over the shoulder; தொங்கவிட்டுள்ள ஆடைமுந்தி. (W.)
  7. Decorative hangings, as of cloth; festoons; அலங்காரத் தூக்கம். தொங்கலுங் குடையும் (கம்பரா. எழுச்சி. 78)
  8. Thick garland; பருத்த பூமாலை. தோமரமாகத் தொங்கல் சிந்துபு மயங்கினாரே (சீவக. 2656)
  9. A mode of dressing woman's hair, one of aim-pāl, q. v.; ஐம்பாலுள் ஒருவகை. (பிங்.)
  10. Man's hair; ஆண்மக்களின் மயிர். (திவா.)
  11. Tail of a peacock; மயிற்றோகை. (திவா.)
  12. Peacock's feathers, as arranged for a fan or a parasol; பீலிக்குஞ்சம். (பிங்.)
  13. White umbrella, as an emblem of royalty; வெண்குடை. (திவா.) மாமதி தொங்கலாக (திருப்பு. 871)
  14. Insignia of royalty; சேறாடி, சத்திரம், சாமரம் முதலிய விருது. கொற்றக்குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழ (ஆதியுலா, 57)
  15. Cloth spread above the water-pots while carrying water to wash a corpse; பிணத்தை நீராட்டக் கொண்டுவரும் நீர்க்குடங் களின் மீது பிடிக்கப்படும் துணி. சின்னமூதத் தொங் கல் வந்திட (சி. சி. 2, 95)
  16. Any undigested matter sticking to the bowels; வயிற்றுத்தங்கல்
  17. Anything sticking and hanging ready to fall; விழக்கூடிய நிலையில் ஒட்டிநிற்கை. (J.)
  18. Projection, cape, headland; முனை. (W.)
  19. Street corner, end of a street, extremity; மூலை. தொங்க லுக்குத் தொங்கல். (W.)
  20. Cloth worn as upper garment by women; பெண்களின் மேலாக்குச்சீலை. (யாழ். அக.)
  21. Going in advance; முந்துகை. (யாழ். அக.)
  22. Clasp of an ornament; ஆபரணக் கடைப்பூட்டு. (யாழ். அக.)
  23. Shortage; குறை. முப்பது ரூபாய் தொங்கல். Loc
  24. Helplessness; ஆதரவின்மை. ஆசாமி பாடு தொங்கல்தான். Colloq
  25. Dependence; ஒன்றைப் பற்றியிருக்குந் தன்மை

IndoWordNet

தொங்கல் — noun
  1. வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
தொங்கல் — noun
  1. காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
தொங்கல் — noun
  1. காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்
தொங்கல் — noun
  1. காளையின் வால்முடிகளை குச்சியில் கட்டி உருவாக்கப்படும் ஒரு உபகரணம்
தொங்கல் — noun
  1. காதிலுள்ள ஒரு ஆபரணம்

தொங்கட்டான் தோடு காதணி தொங்கடம் கம்மல் குழை சாமரம் சாமரி சாமரை ஆயுதம் கருவி ஜிமிக்கி