பங்கு
Stock
Winslow (1862)
பங்கு (paṅku) — noun
Share, portion, part, dividend, parcel, பகுதி Allotment, assignment, appointment, நியமிப்பு Moiety, half, பாதி Copartnership, கூட்டு. (c.) நான் உன்பங்கிலிருக்கிறேன். I am on your side
பங்காளன்–பங்காளி — A partner, a fellow-sharer, a share-holder, a consociate, a partaker, a participator, கூட்டாளி. பங்கிக்க — To sever, cut off, part, separate, divide, பகுக்க. பங்கிட — To divide, parcel out, distribute, apportion. 2. To allot, destine. பங்கிட்டநாள் — A lunar asterism belonging to two Zodiacal signs. பங்கீடு — Dividing, sharing, allotting, parcelling, பங்கிடுகை. 2. Adjustment, settlement of strife, disposal of affairs, திட்டம். 3. Measures, means, உபாயம். (c.) பங்குபங்காகப்பிரிக்க — To divide into portions.
பங்கு (paṅku) — noun
A lame person, a cripple, நொண்டி Saturn the planet as lame. (slow in progress,) as a punishment for attempting to kick his aunt, சனி. W. p. 492. PANGU
Fabricius (1972)
பங்கு — noun
a share, a part, a portion, a dividend, a lot, பாகம் moiety, half, பாதி
பங்காளன்–பங்காளி–பங்குள்ளவன் — a partner, a shareholder; 2. a coheir. பங்கிட–பங்கிட்டுக்கொடுக்க — to divide, to distribute, to allot. பங்கீடு — alloting, parcelling, பங் கிடுகை; 2. settlement of strife, disposal of affairs, திட்டம்; 3. measures, means, உபாயம். பங்குபங்காய்ப் பிரிக்க — to divide into portions. பங்குபாகம் பிரித்துக்கொள்ள — to divide an estate as heirs. பங்கு பிரிந்தவர்கள் — those that have divided an estate as heirs.
பங்கு — noun
a lame person, a cripple, நொண்டி Saturn, the planet as lame, as a punishment for attempting to kick his aunt, சனி
Tamil Moli Akarathi (1928)
பங்கு (paṅku)
கூட்டு, கூறு, சனி, பாதி, மு டம், முடவன்
பங்கு (paṅku)
கந்தம் கூறு, கூறுபாடு, திறம், பாகம், பாகு, பாத்தி, பாத்து, பால், வாரம்
பங்கு (paṅku)
சனி, பாதி, முடவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பங்கு¹ (paṅku) — noun
< பகு²- [M. paṅku.] Share, portion, part; பாகம். பங்குலவு கோதையுந் தானும் (திருவாச. 16, 9) Moiety, half; பாதி. (சூடா.) Side, party; பக்கம். என் பங்கில் தெய்வம் இருக்கிறது Sixteen acres of dry land and two or two and a half of wet land; இரண்டு அல்லது இரண்டரை ஏகர் நன்செயும் பதி னாறு ஏகர் புன்செயுங்கொண்ட நிலம். (C. G. 288.)
பங்கு² (paṅku) — noun
< paṅgu Lameness; முடம். (பிங்.) ஒருத்தலைப் பங்குவி னூர்தி (கம்பரா. மந்திரப். 66) Lame person, cripple; முடவன். பங்கொருவ னொப்பரிய வையத்தி லோடிவந்து (தேவை யுலா, 25) Saturn, as a lame planet; சனி. அந்தணன் பங்குவி னில்லத்துணைக் குப்பா லெய்த (பரிபா. 11, 7)
பங்கு (paṅku) — noun
prob. பகு- District; ஜில்லாப்பகுதி. Pond Turban; தலைப்பாகை. சிவகங்கை யொர்பங்காக (விரிஞ்சை. முருகன்பிள்ளைத். தாலப். 1)
சொல் அகராதி
சொல் தேடு